பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்


மென்மையான பாடல். எந்தக் கட்டுக்கும் அடங்காத இசையமைப்பு. பாடும் குரல்களால் பாடலுக்கு சிறப்பு.

திரைப் படம்: ஆத்மா (1993)
நடிப்பு: ராம்கி, கௌதமி
இசை: இளையராஜா
இயக்கம்: பிரதாப் போத்தன்
பாடல்: வாலி
குரல்கள்: K J யேஸுதாஸ், S ஜானகி

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/WhU76M3Ggws?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>
http://www.divshare.com/download/16557507-1e0

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

கடற்கரை தனில் நீயும் நானும் உலவும் பொழுது
பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம் மேனி உன் வசமோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே, என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக