பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

மீண்டும்  S  P B யின்  ஒரு ஆரம்பக் காலப் பாடல். இனிமை. நல்ல அர்த்தம் மிக்க கவிதை வரிகளும் இசையும். 70களில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்.

திரைப் படம்: ஏன் (1970)
இசை: T R பாப்பா
குரல்: S P B
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ரவிசந்திரன், லக்ஷ்மி
இயக்கம்: T R ராமண்ணா

http://www.divshare.com/download/16611993-ae2

http://www.divshare.com/download/16611996-08e

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியை போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர் கதை உண்டு
முடிக்க வேண்டும் என்று முடிப்பதும் உண்டு

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான்

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்

1 கருத்து:

vvv சொன்னது…

அருமை....அற்புதம்......

கருத்துரையிடுக