பின்பற்றுபவர்கள்

வியாழன், 5 ஜனவரி, 2012

இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமை அது தரும் இனிமை

கொஞ்சம் கடுமையானப் பாடல் தான் B S சசிரேகாவுக்கு. இனிமையாக பாடியிருக்கிறார் K J யேஸுதாஸுடன். அழகானப் பாடல். அபூர்வ பாடலும் கூட.

திரைப் படம்: மஞ்சள் நிலா (1982)
நடிப்பு: சுரேஷ், மனோசித்ரா
இசை: இளையராஜா
இயக்கம்: ராஜேஷ்http://www.divshare.com/download/16488609-494

ம் ம் ம் ம் ம் ம்
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
ம் ம் ம் ம் ம்
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே

இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
தரிகிட தாம் தரிகிட தீம் தரிகிட ஜம் தரிகிட நம்
தரிகிட தாம் தரிகிட தீம் தரிகிட ஜம் தரிகிட நம்
ஆ ஆ ஆ ஆ
தகிட தக்க திமி தக்க தகிட தக்க திமி தக்க
ஆ ஆ ஆ
தகிட தாம் தகிட தை
தன நனனன தன நனனன தன நனனனா
தன நனனன தன நனனன தன நனனனா
கருங்குழல் அலை கருவிழி வளை எனை கவர்கிறதே
அருந்தமிழ்க் கலை அழகிய சிலை ஒளித் தருகிறதே
தன நனனனா தன நனனனா
இளம் கனவுகளே வலம் வருகிறதே
மையல் எனும் கனல் தனில் என் மனம் உருகுது
தையல் இவள் எழில் தனை என் மனம் தழுவுது
தென் பாண்டிக் காற்றும் தேவாரப் பாட்டும்
தேவன் கோவில் காதல் தீபம் போகும்
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
தன நனனன தன நனனன தன நனனனா
தன நனனன தன நனனன தன நனனனா
புது மலருடல் மனம் தரும் மடல் உனை மயக்கியதோ
தினம் ஒரு முறை கதைப் படித்திட மனம் அழைக்கிறதோ
தன நனனனா தன நனனனா
கரம் துடிக்கிறதே உடல் கொதிக்கிறதே
கன்னம் எனும் பழம் தனை உன் உதடுகள் தொடும்
அன்னம் எனும் இவள் இடை உன் கரங்களில் விழும்
நீராடும் கங்கை நீ தெய்வ மங்கை
காமன் மீட்டும் காதல் வீணை நீயே
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நதி வருவதும் அலை எழுவதும் கடல் தனில் விழவே
இவள் மலர்ந்ததும் எழில் வளர்ந்ததும் இளையவன் தொடவே
நதி வருவதும் அலை எழுவதும் கடல் தனில் விழவே
இவள் மலர்ந்ததும் எழில் வளர்ந்ததும் இளையவன் தொடவே
முக தரிசனமே கலை விமர்சனமே
முக தரிசனமே கலை விமர்சனமே
நித்தம் மனம் சுகம் பெறும்
உன் புது உறவினில்
முத்தம் தினம் சுவை தரும்
உன் கனி இதழ்களில்
தேனூறும் முல்லை நான் உந்தன் கிள்ளை
மேகம் தேடும் வானம் நீயே வாராய்

இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
தன நனனன தன நனனன தன நனனனா
இளமை அது தரும் இனிமை
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
தன நனனன தன நனனன தன நனனனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக