பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை மாதப் பொங்கலுக்கு தாய்


அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இன்று மீண்டும் P சுசீலா அவர்களின் குரலில் இனிய தை பொங்கல் தாலாட்டு பாடல் ஒன்று.

திரைப் படம்: நிலவே நீ சாட்சி (1970)
பாடியவர்: P சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா
இயக்கம்: P மாதவன்http://www.divshare.com/download/16576934-ba1

தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே

மையாடும் பூவிழியில் மானாடும் நாடகத்தை
மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
நீ என்னைத் தேடுவதும்
காணாமல் வாடுவதும்
கடவுள் தந்த காதலடி வாடி
ஆரீராரீராரோ சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே

பூந்தென்றல் ஊரெங்கும் உன் முகத்தைத் தேடி
புது வீடு கண்டதடி வாடி
தேனூறும் தாமரையைப்
பார்த்தாக வேண்டுமென்று
நூறு கண்கள் வாடுதடி வாடி
ஆரீராரீராரோ சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

தை மாதப் பொங்கலுக்கு தாய்
தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே

தாயாக நான் மாறி தங்க மகள் வாழ
தந்து விட்டேன் என்னையடி வாடி
யாரோடு யார் என்று
காலமகள் எழுதியதை
யார் மாற்ற முடியுமடி வாடி
ஆரீராரீராரோ சம் சம் சம் சம் சம் சம் சம் சம்

2 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

இனிய பாடல். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சிநேகிதி சொன்னது…

இனிய தமிழர் தின நல் வாழ்த்துக்கள் .http://en-iniyaillam.blogspot.com/

கருத்துரையிடுக