பின்பற்றுபவர்கள்

திங்கள், 16 ஜனவரி, 2012

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்


இளையராஜாவின் வழக்கமான வயலின் இசைக் கூட்டத்துடன் ஒரு இனிய பாடல்.

திரைப் படம்: வெள்ளை ரோஜா (1983)
நடிப்பு: சிவாஜி, பிரபு, சுரேஷ், ராதா
இயக்கம்: A ஜெகன் நாதன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
குரல்கள்:S P B, S ஜானகி
http://www.divshare.com/download/16552403-77chttp://www.divshare.com/download/16552444-777

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஒரு நானம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே
விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே
லலலல லலலல லலலல லலலல

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் தஞ்சம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு
கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது
மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது
உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது
லலலல லலலல லலலல லலலல

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஒரு நானம் கொள்ளாமல்
பபப்பே
ஒரு வார்த்தை இல்லாமல்
பபப்பே
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக