பின்பற்றுபவர்கள்

சனி, 7 ஜனவரி, 2012

பனி மழை விழும் பருவ குளிர் எழும்


திரைப் படம்: எனக்காகக் காத்திரு (1981)
குரல்கள்: சைலஜா, தீபன் சக்ரவர்த்தி
நடிப்பு: சுமன், சுமலதா
இயக்கம்: நிவாஸ்
இசை: இளையராஜா
http://www.divshare.com/download/16460664-cdchttp://www.divshare.com/download/16530011-beb

பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
சில்லென்ற காற்றாட
சேர்ந்த மனம் தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
மாறாத காதலுக்கு தூது செல்லுதே
பூ மேகமே
பூவான காதலிக்கு சேதி சொல்லுதே
என் மோகமே
வா வா அன்பே
தா தா என்பேன்
நீர் ஓடை போல ஓடும்
நெஞ்சோடு காதல் ராகம்
காதில் கேட்கும்
கல்யாண தாளம்
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
நீங்காமல் வாழுகின்ற காலம் என்னுதே
என் உள்ளமே
நெஞ்சோடு சேருகின்ற ஆசை கொண்டதே
பெண் உள்ளமே
வா வா இன்று
நீ தா ஒன்று
எங்கெங்கும் தேவ கானம்
என்னுள்ளில் காணும் மோனம்
வாழும் காலம்
உன்னோடு சேரும்
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
சில்லென்ற காற்றாட
சேர்ந்த மனம் தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

கணேஷ் சொன்னது…

ஷெனாய் இன்ஸ்ட்ரூமென்ட்டை மகிழ்ச்சியான டூயட்டிலும் பயன்படுத்தியிருந்த இளையராஜாவை எண்ணி நான் வியந்த பாடல்! மீண்டும் உங்கள் மூலம் கேட்க இனிமை! நன்றி!

கருத்துரையிடுக