பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 ஜனவரி, 2012

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து


புல் புல் தாரா போன்ற இசை கருவிகள் அருகி வரும் இன்னேரத்தில் இந்தப் பாடல் இனிமை தருகிறது. யோக்கியமான கவிதை வரிகளுடன் இசைவான
P B  ஸ்ரீனிவாஸ் குரலில்.

திரைப் படம்: பொன்னித் திரு நாள் (1960)
குரல்: P B ஸ்ரீனிவாஸ்
நடிப்பு: வளையாபதி முத்துகிருஷ்ணன், ராஜசுலோசனா
இசை: K V மகாதேவன்
இயக்கம்: A K வேலன்http://www.divshare.com/download/16605376-955ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரி மான் என்பதும் உன் இனம்தான

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக