பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை


இனிமையான் பாடல் வரிகளுடன் இசை கோர்த்து குரல்கள் அழகாக கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்தி பாடலின் தழுவல்தான்.

திரைப் படம்: நீயா (1979)
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடிப்பு: விஜயகுமார், மஞ்சுளா, கமல்
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: துரை
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/16670460-d77



http://www.divshare.com/download/16670624-d51

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எது வரை என்றாலும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன இன்னும் சொல்வேனோ

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவென சொன்னாலும் இன்பம் இன்பம் என்னைத் தந்தேனே

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

எஸ்.பி.பி. + வாணி ஜெயராம் காம்பினேஷன் எப்போதுமே கலக்கல்! இம்முறையும் (ஏற்கனவே கேட்டிருந்தாலும்) மிகமிக ரசிக்க வைத்தது. சொந்தப் பிரச்னைகள் காரணமாக கொஞ்சநாள் இப்பக்கம் வரவில்லை அஷோக் ஸார்! இதற்கு முன் நீங்கள பதிவிட்டிருந்த ஐந்து பாடல்களையும் இறக்கிக் கொண்டேன். யாவற்றுக்கும் நன்றி!

பெயரில்லா சொன்னது…

இனிமையான பாடல் பகிர்விற்க்கு நன்றி அசோக் சார். உங்கள் பதிவை இங்கே தொடர்பு கொடுத்துள்ளேன்.
http://myspb.blogspot.in/2012/01/1265.html

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை ! நன்றி சார் !

கருத்துரையிடுக