பின்பற்றுபவர்கள்

வியாழன், 5 ஜனவரி, 2012

நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன் கனவு காணும் கண்ணிரெண்டும் கண்ணான கண்ணா


மிக நல்ல இனிமையான பாடல்

திரைப் படம்: புண்ணிய பூமி (1978)
இசை:  M S விஸ்வனாதன்
குரல்: S ஜானகி
நடிப்பு: சிவாஜி, வாணிஸ்ரீ
இயக்கம்: K விஜயன்http://www.divshare.com/download/16518335-061

நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரெண்டும் கண்ணான கண்ணா உன் கண்களே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

என் வீடு என் வாசல் உன் கோவிலே
ஐயா உன் செல்வங்கள் என் கையிலே
தாய் வீட்டுச் சீரென்ன என் வாழ்விலே
என்னாளும் தலைமாட்டில் உன் காவலே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

கண்ணீரும் உனக்கான அபிஷேகமே
நான் பார்க்கும் பஞ்சாங்கம் மாங்கல்யமே
என் பூஜை எப்போதும் நீ வாழவே
என் ஆசை என்றேனும் உனைக் காணவே
என் ஆசை என்றேனும் உனைக் காணவே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

மேய்ப்போனை பார்க்காத மந்தைகளே
வேண்டாத தெய்வத்தை வேண்டுங்களேன்
காப்பாரை காணாத பறவைகளே
அவர் காதோரம் என் சேதி சொல்லுங்களேன்
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக