இந்த பாடலின் குரல்களுக்கு உரிமையாளர்கள் T M S உம் L R ஈஸ்வரியும். நானும் இன்று வரை இந்தப் பாடலைப் பாடியவர் கோவை சவுந்திரராஜன் என்றுதான் நினைத்திருந்தேன். T M S கீழ் ஸ்தாயில் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. நேரமிது நேரமிது என்ற ரிஷிமூலம் பட பாடலை பாடும் போது T M S கீழ் ஸ்தாயில் பாட முடியாமல் கஷ்டப்பட்டார் என்பதாக சமீபத்தில் நான் எங்கோ இளையராஜா சொன்னதாக படித்தது. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
திரைப் படம்: உங்கள் வீட்டுக் கல்யாணம் (1975)
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஷோபா
இயக்கம்: K கிருஷ்ணமூர்த்தி
இசை: விஜய பாஸ்கர்
http://www.divshare.com/download/16498195-ca9
பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு
பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு
யாரோ என்று என் எண்ணம் சொன்னது
நீதான் என்று என் நெஞ்சம் சொன்னது
யாரோ என்று என் எண்ணம் சொன்னது
நீதான் என்று என் நெஞ்சம் சொன்னது
யாரோ என்று என் எண்ணம் சொன்னது
நீதான் என்று என் நெஞ்சம் சொன்னது
கள்ளனைப் போலே உள்ளே வந்தது காதல் செய்யத்தான்
கள்ளில் மிதக்கும் கன்னிப் பூவை மெல்லக் கிள்ளத்தான்
மாலைப் போட்டு மஞ்சள் முடியைப் போட்டு
மாலைப் போட்டு மஞ்சள் முடியைப் போட்டு
அத்தான் என்று ஆனப் பின்பு வித்தையைக் காட்டு
இப்போ இங்கே தொட்டால் தப்பா
இங்கே நீங்கள் அங்கே அப்பா
ம் ம் ம்
பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு
நித்தம் இப்படி ஒத்திகை பார்த்தால் நாடகம் அரங்கேறும்
இந்தப் பிச்சுக்கண்ணின் இச்சைகள் ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும்
நித்தம் இப்படி ஒத்திகை பார்த்தால் நாடகம் அரங்கேறும்
இந்தப் பிச்சுக்கண்ணின் இச்சைகள் ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும்
ராத்திரி நேரம் இந்த ரகசியப் பாடம்
ராத்திரி நேரம் இந்த ரகசியப் பாடம்
நீயும் நானும் படித்திடலாமா ஒவ்வொரு நாளும்
நீயும் நானும் படித்திடலாமா ஒவ்வொரு நாளும்
அச்சம் வெட்கம் என்னைக் கொல்லும்
கொன்றால் பாவம் தின்றால் தீரும்
யாரோ என்று என் எண்ணம் சொன்னது
நீதான் என்று என் நெஞ்சம் சொன்னது
2 கருத்துகள்:
இதுவரை கேட்டிராத பாடல்! ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
அருமை பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
கருத்துரையிடுக