இந்தப் பாடலை இவரால்தான் சிறப்பிக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை நம்ப வைக்கிறது.
திரைப் படம்: காத்திருந்த கண்கள் (1962)
இசை: M S விஸ்வனாதன்,T K ராமமுர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடும் குரல்: P சுசீலா
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
http://www.divshare.com/download/16590142-375
http://www.divshare.com/download/16590326-e1f
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் - அவர்
யார் என்றது இதயம்
மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
ஏதோ ஒரு வகை எண்ணம்
அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
1 கருத்து:
எனக்கு பிடித்த பாடல் அற்புதமான கற்ப்பனை வரிகள்
கருத்துரையிடுக