பின்பற்றுபவர்கள்

சனி, 4 பிப்ரவரி, 2012

தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூ பூத்தது


தன் மழலைக்கு காத்திருக்கும் தம்பதியரின் இனிமையானப் பாடல். மிகச் சரியான இசையுடனும் சரியான வேகத்துடனும் இருக்கும் இந்தப் பாடலை அனுபவித்து கேட்கலாம்.

திரைப் படம்: புதிய ராகம் (1991)
நடிப்பு: ரஹ்மான், ஜெயசித்ரா
இசை: இளையராஜா
இயக்கம்: ஜெயசித்ரா
குரல்கள்: மனோ, ஜானகி
பாடல்: கங்கை அமரன்



http://www.divshare.com/download/16643712-330



தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது
பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது

ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே கை வந்து சேரும்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது

பிள்ளை இல்லாத வீடு
முல்லை இல்லாத காடு
தொட்டில் இல்லாத இல்லம்
தென்றல் இல்லாத மன்றம்
சின்ன பொன்வண்டு வண்ண கண் ரெண்டு
ஆகாய நீலம் காட்டும்
கன்னம் பூச்செண்டு கட்டிக் கற்கண்டு
செந்தூரக் கோலம் தீட்டும்
மார்போடு சேர்த்து முந்தானை மூடி
பாலூட்டும் தாயின் ஆனந்தம் கோடி
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்

பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது
ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே கை வந்து சேரும்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது

அன்னை என்றான பின்பு
துன்பம் முன்னூறு நாட்கள்
பிள்ளை கை வந்தப் பின்பு
கண்ணில் சந்தோஷப் பூக்கள்
பிள்ளை செல்வங்கள் பேசும் தெய்வங்கள்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
தாய்மை இல்லாத பெண்மை என்னாளும்
காணாது அன்பின் எல்லை
கை வீசி ஆடும் வைகாசி மேகம்
என் வீடு சேர நான் செய்த யோகம்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்

தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது
பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது
ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே கை வந்து சேரும்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக