சுகமான குரலில் இனிமையான இசையில் இந்தப் பாடல்.
திரைப் படம்: தெய்வீக உறவு (1968)
பாடியவர்: P சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
நடிப்பு: தேவிகா, ஜெய்ஷங்கர்
இயக்கம்: சத்யம்
http://www.divshare.com/download/16837645-208
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்
வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வாழையிலே நாரெடுத்து வளர் கொடியில் மலரெடுத்து
மாலை என்று பெயர் கொடுப்பார் உலகிலே
அந்த மகிமை தனை சொல்வதெந்த மொழியிலே
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
கோடி பெறும் கோபுரமே குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
கோடி பெறும் கோபுரமே குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
காலம் என்றும் துணையிருந்து கண்மணியே உனை வளர்க்க
தினமும் அந்த இறைவனிடம் கேட்கின்றேன்
நம் தெய்வீக உறவை எண்ணிக் களிக்கின்றேன்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக