பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

புன்னகையோ பூ மழையோ பொங்கி வரும் தாமரையோ

இந்த பாடல் காட்சியில் ஸ்ரீவித்யா என்ன அழகு? இனிமையான பாடல்.

திரைப் படம்: டெல்லி டு மெட்ராஸ் (1972)
இயக்கம்: I N மூர்த்தி
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீவித்யா
இசை: V குமார்
பாடியவர்கள்: T M S, P சுசீலா

புன்னகையோ பூ மழையோ
பொங்கி வரும் தாமரையோ
மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ

தென் பொதிகை சந்தனமோ
சிந்தி விழும் செந்தமிழோ
மங்கையரின் மாளிகையோ
மன்னவனின் மார்பகமோ

என்னை பந்தாடும் நடை அல்லவா
கன்னி பழமான இதழ் அல்லவா
வந்து விளையாட மனம் இல்லையா
இனி விடிகின்ற பொழுதில்லையா

நான் பெண்ணென்ற நினைவில்லையா
இது பேசாத உறவில்லையா
இங்கு விளையாட இடமில்லையா
பொழுது விடிந்தாலும் நமதில்லையா

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா
முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா

தென் பொதிகை சந்தனமோ
சிந்தி விழும் செந்தமிழோ
மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ

இது விரிகின்ற மலர் அல்லவா
மது வழிகின்ற குடமல்லவா
கையில் விழுகின்ற கனி அல்லவா
இன்னும் சரி என்று நான் சொல்லவா

உடல் கல்வாழை இலை அல்லவா
குழல் கடலோர அலை அல்லவா
காதல் பொல்லாத கலை அல்லவா
நாம் போராடும் களம் அல்லவா

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா
முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா

புன்னகையோ பூ மழையோ
பொங்கி வரும் தாமரையோ
மங்கையரின் மாளிகையோ
மன்னவனின் மார்பகமோ
புன்னகையோ பூ மழையோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக