பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2012

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே

நல்ல இனிய பாடல்.

திரைப் படம்: நீரும் நெருப்பும் (1971)

நடிப்பு: M G R, ஜெயலலிதா

இயக்கம்: P நீலகண்டன்

இசை: M S விஸ்வனாதன்

பாடியவர்கள்: S P B, P சுசீலா
http://www.divshare.com/download/16728986-754
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோமஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ

என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ

என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ

இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோமாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடுஅணைத்தாலும் அடங்காதோ அது

போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ..

அணைத்தாலும் அடங்காதோ அது

போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ....விளங்காதோமாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோகண்மணி என் மனம் உன் வசம் வந்தது

உன் மந்திரப்புன்னகையோ ......

உன் மந்திரப்புன்னகையோ

கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது

நீ முத்தாடும் வித்தைகளோ

கை வண்ணம் என்னென்று சொல்லவோ

கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

கை வண்ணம் என்னென்று சொல்லவோ

கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

மெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா

ஹஹஹா ஹஹஹா ஹஹஹாமாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ

என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ

இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா2 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

மக்கள் திலகத்துக்கு எஸ்பிபி பாடிய அத்தனைப் பாடல்களும் தேன்துளிகள் தான். அதில் ஒரு துளியை இங்கு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி + தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

Covai Ravee சொன்னது…

அறிதான பாடல் பகிரிவிற்கு நன்றி. பா.நி.பா தளத்திலும் தொடர்பு கொடுக்கிறேன் சார்.

கருத்துரையிடுக