பின்பற்றுபவர்கள்

புதன், 22 பிப்ரவரி, 2012

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

திருமதி சுசீலா என்ற கிளியும், உண்மைக் கிளி குரலில் சதன் அவர்களும் பாடிய இனிமையும் இளமையும் நிறைந்த பாடல்.

திரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)
பாடியவர்கள்: P சுசீலா, சதன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமுர்த்தி
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: கே.ஆர்.விஜயா, முத்துராமன்
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு

தத்தை நெஞ்சம்
நெஞ்சம்
முத்தத்திலே
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
இல்லையா
முத்தம் அந்த
அந்த
தத்தை நெஞ்சில்
நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
இல்லையா

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா
பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா
கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

அஹா ஓஹோ ஓஹோ ஓ அஹா ஹா  அஹா ஹா அஹா ஹா அஹா ஹா ஆ

கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா
கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா
புண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா

தத்தை நெஞ்சம்
நெஞ்சம்
முத்தத்திலே
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
இல்லையா
முத்தம் அந்த
அந்த
தத்தை நெஞ்சில்
நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
இல்லையா

1 கருத்து:

கீதமஞ்சரி சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் இது. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

கருத்துரையிடுக