பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 பிப்ரவரி, 2012

அழகிய தென்னஞ்சோலை அமைதியுலாவும் மாலை


இந்த பாடலை நானும் சிறிய வயதில் கேட்டு ரசித்ததுண்டு. இனிமையான இசை மற்றும் குரல்கள்.

திரைப் படம்: தெய்வீக உறவு
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், தேவிகா
http://www.divshare.com/download/16766070-88a
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அழகிய தென்னஞ்சோலை
அமைதியுலாவும் மாலை
அழகிய தென்னஞ்சோலை
அமைதியுலாவும் மாலை
இளையவன் ஒருவன் வந்தான்
அங்கு இயற்கையில் எதையோ கண்டான்
தொடரும் தொடரும் இது
தொடர்க்கதை போல தொடரும்

குளிர்ந்தது தென்றல் காற்று
இசை தொடுத்தது தென்னங்கீற்று
குளிர்ந்தது தென்றல் காற்று
இசை தொடுத்தது தென்னங்கீற்று
எழுந்தது சலங்கையின் ஓசை
நெஞ்சை இழுத்தது ஏதோ ஆசை
தொடரும் தொடரும் இது
தொடர்க்கதை போல தொடரும்

ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஓசை வரும் திசை பார்த்தான்
ஓசை வரும் திசை பார்த்தான்
அங்கு ஒருத்தியின் கனிமொழி கேட்டான்

தொடரும் தொடரும் இது
தொடர்க்கதை போல தொடரும்

தானே விழுந்ததனாலே அவன்
தழுவிக்கொண்டான் கைகளாலே
தானே விழுந்ததனாலே அவன்
தழுவிக்கொண்டான் கைகளாலே
மானே கனி இதழாலே
மானே கனி இதழாலே
முத்தம் வழங்கெனக் கேட்டான் மேலே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் லலலல லால லலலா

இப்படியும் ஒரு பெண்ணா
அதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா
இப்படியும் ஒரு பெண்ணா
அதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா
கைப்பிடியில் அவள் கிடந்தாள்
கைப்பிடியில் அவள் கிடந்தாள்
இரு கன்னங்களில் மழை பொழிந்தாள்
லலலா லலலா லல லலலல லால லலலா

இரவினில் ரகசியம் கேட்டு
ஓர் இதயத்தில் இதயத்தைப் போட்டு
விடியும் வரை விளையாட்டு
அன்று முடியவில்லை அந்தப் பாட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக