பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் நங்கை முகம் நவரச நிலவு

இதுவும் வழக்கமான S P Bயின் ஆரம்ப கால தேன் குரல் பாடல். பழம் பெரும் பாடகி L R ஈஸ்வரி அவர்களுக்கு ஈடு கொடுத்து பாடி இருக்கிறார்.

திரைப் படம்: வீட்டுக்கு வீடு
பாடியவர்கள்: S P B, L R ஈஸ்வரி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி
லா லா லா லா
அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
நவரச நிலவு
அதிசய கனவு
நவரச நிலவு
அதிசய கனவு

பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன் அழகு
மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்

அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
எனத்தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடகப் பார்வையில்
கதை நாளும் சொல்லிவிடு
பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
பருவக் கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு
வந்தது கொஞ்சமே
வருவதோ ஆயிரம்
ஒவ்வொரு நினைவிலும்
உலகமே நம்மிடம்

அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
ஹா நவரச நிலவு
ஹோ அதிசய கனவு

1 கருத்து:

கணேஷ் சொன்னது…

கொஞ்சும் குரலில் எஸ்.பி.பியும், ஹை பிட்சில் எல்.ஆர்.ஆரும் பாடிய கேட்கச் சலிக்காத பாடல். வழங்கி மகிழ்வித்தமைக்கு நன்றி,

கருத்துரையிடுக