பின்பற்றுபவர்கள்

சனி, 18 பிப்ரவரி, 2012

நீ இன்றி நானோ நான் இன்றி நீயோ நிலவின்றி வானோ


நினைவில் இனிமையாக நின்ற பாடல் இது.

திரைப் படம்: மகரந்தம் (1981)
நடிப்பு: அருணா, ராதிகா, ஆண் நடிகர் யார் என்று தெரியவில்லை
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
இசை: ஷங்கர் கணேஷ்
குரல்கள்: S P B, P சுசீலா
http://www.divshare.com/download/16769644-cd0http://www.divshare.com/download/16769629-25c


நீ இன்றி நானோ
நான் இன்றி நீயோ
நீ இன்றி நானோ
நான் இன்றி நீயோ
நிலவின்றி வானோ
இதை நினைவில் கொள்வாயோ

ஏன் இந்த கோபம்
இதில் என்ன லாபம்
ஏன் இந்த கோபம்
இதில் என்ன லாபம்
என் காதல் தீபம்
என்னாளும் நீயன்றோ

வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ
காதலோ கோடி
மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி
மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

வாடாத மேனி
சூடான ராணி
வாடாத மேனி
சூடான ராணி
பாடாத தேனி
பெண் பாவை நீ அன்றோ

பாடாத ராகம்
போடாத தாளம்
பாடாத ராகம்
போடாத தாளம்
ஆடாத தீபம்
என் தெய்வம் நீ அன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ
காதலோ கோடி
மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி
மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை
குறுநகையும் சிந்தாதோ

அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
கரும்பாகும் வண்ணம்
கண் பார்வை சொல்லாதோ

வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

காதலோ கோடி
மலராம் அன்றோ

காட்சியின் சாட்சி
மனம் தானன்றோ

வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

1 கருத்து:

Covai Ravee சொன்னது…

அறிதான அழாகான இனிமையான பாடல். பகிரிவிற்க்கு நன்றி இந்த பதிவு என் பா.நி.பா தளத்தில் தொடர்பு விரைவில் கொடுக்கப்படும்.

கருத்துரையிடுக