பின்பற்றுபவர்கள்

சனி, 11 பிப்ரவரி, 2012

சொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே


நான் முன்பே சொன்னது போல் திருமதி S ஜானகி அம்மாவின் ஆரம்பகாலக் குரல் இப்போதைய குரலை விட மிக இனிமையானது. கேட்டு பாருங்கள் தெரியும்.

திரைப் படம்: விளையாட்டு பிள்ளை (1970)
பாடியவர்: S ஜானகி
பாடல்: கண்ணதாசன்
இசை: கே வி மகாதேவன்
இயக்கம்:A P  நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி, காஞ்சனா




http://www.divshare.com/download/16741515-135



http://www.divshare.com/download/16741607-d37

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே - யாரும்
காணாமல் சிரிக்க வேண்டுமே

சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
மறு முறை காணவே மனதும் சென்றது
மறு முறை காணவே மனதும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது

சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஆனந்தம் இன்றுதான் ஆரம்பமானது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பமானது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
மனதில் இருப்பது மறைமுகமானது
மனதில் இருப்பது மறைமுகமானது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது

சொல்லாமல் தெரிய வேண்டுமே

தேடிய செல்வமும் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது
பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே - யாரும்
காணாமல் சிரிக்க வேண்டுமே

சொல்லாமல் தெரிய வேண்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக