பின்பற்றுபவர்கள்

புதன், 30 மே, 2012

முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம்

இனிமையான பாடல் சுகமான குரல்களில். இசை M S விஸ்வனாதனா அல்லது மலேஷியா வாசுதேவனா என்பதில் எனக்கு குழப்பம். மொத்தத்தில் அழகான பாடல்.

திரைப் படம்: துணைவி (1982)
குரல்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
இயக்கம்: வலம்புரி சோமனாதன்
நடிப்பு: சிவகுமார், சுஜாதா



http://www.divshare.com/download/17927410-d01



முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
சங்கத் தமிழ் தோட்டம்
வண்ண மயில் ஆட்டம்
சங்கத் தமிழ் தோட்டம்
வண்ண மயில் ஆட்டம்
தாமரையின் மொட்டு
உடல் கட்டு
அது தங்கத் தட்டு
தாழை மடல் போலே
நீண்ட கூந்தல்
அதை மெல்ல மெல்ல அள்ளிக்கொள்ளு தொட்டு
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

நெற்றியிலே வண்ணம் சுற்றும் விழிக் கிண்ணம்
நெற்றியிலே வண்ணம் சுற்றும் விழிக் கிண்ணம்
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உன்னைச் சுற்றிக்கொள்ள
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உன்னைச் சுற்றிக்கொள்ள
ஆசை மழை வெள்ளம் என்னை அள்ள
உடல் அங்கும் இங்கும் துள்ளும் கொள்ளைக்கொள்ள
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வாழை இளம் கால்கள்
வஞ்சிக் கொடிக் கைகள்
வாழை இளம் கால்கள்
வஞ்சிக் கொடிக் கைகள்
மேடையிட்ட சொர்க்கம்
அதில் வெட்கம் அது இந்தப் பக்கம்
மேடையிட்ட சொர்க்கம்
அதில் வெட்கம் அது இந்தப் பக்கம்
போதுமெனச் சொல்லு
மனம் இல்லை
நான் தங்கத் தண்டை அங்கம் கொண்ட முல்லை
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

ஞாயிறு, 27 மே, 2012

அழகே உன் பெயர்த்தானோ அமுதே உன் மொழிதானோ


இறைவன் இருக்கின்றான் திரைப் படத்தில் ‘’எந்தன் தேவனின் பாடல் என்ன’’ பாடல் பிரபலமானது
போல் இந்தப் பாடல் ஆகவில்லை ஆனாலும் இனிமையான பாடல்.
S P B மற்றும் P சுசீலாவின் குரல்களில் இனிமை வழிந்தோடுகிறது.
 

திரைப் படம்: இறைவன் இருக்கின்றான்
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: G S மணி
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: P சுசீலா, S P B   


அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
நடந்தால் சிந்து கவியோ
நடந்தால் சிந்து கவியோ
நீ அருந்தேன் தந்த சுவையோ

தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
இதுதான் பெண்ணின் மனமோ
இதுதான் பெண்ணின் மனமோ
இது இயற்கை தந்த குணமோ
அழகே உன் பெயர்தானோ

பொன் பார்த்து மயங்கும் உன் மேனி அழகை
கண்டாலும் போதை தரும்
என் கையோடு குலுங்கும் சங்கீத வளையல்
சிங்காரம் பாடி வரும்

கம்பன் இன்று இருந்தால்
அவன் உன்னை அறிந்தால்
மனம் என்னன்ன பாட நினைக்கும்
அதை இன்றிங்கு பாட அழைக்கும்
தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
அழகே உன் பெயர்த்தானோ

நில்லென்று நிறுத்தி உன்னை
ஜில்லென்று தழுவிக் கொண்டு
பாடும் ராகங்கள் என்ன

புன்னகை இதழ் விரிக்கும்
மல்லிகை சரம் தொடுத்து
சூட்டும் காலங்கள் என்ன
கன்னிப் பூ உடலோ
அன்னத்தின் சிறகோ
பிள்ளைச் சொல் மழலை பேசுவதோ
அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ

வெள்ளி, 25 மே, 2012

பொன்னெழில் பூத்தது புதுவானில்


கொஞ்சம் கடினமான தமிழில் கவிதையாக பொழிந்திருக்கும் பாடல். கவிஞருக்கு பாட்டெழுதுவதில் துணையாக இருந்த  பஞ்சு அருணாசலம்
அவர்கள் எழுதிய முதல் பாடல் என்கிறார்கள். பாடலில் கவிதை மட்டுமில்லாமல் இசை, குரல்கள் எல்லாமே அருமை.

திரைப் படம்: கலங்கரை விளக்கம் (1965)
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/14961649-8ce

சிவகாமீ! சிவகாமீ! சிவகாமீ!

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

சென்றது எங்கே சொல் சொல் சொல்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும் நிலவாத்தினில்வே நில்



தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்

உன் பட்டு கைப்பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும்  நிலவே நில்



முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிட செங்கனி சாருண்ண

முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே



பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



என்னுடல் என்பது உன் உடல் என்றபின்

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

ஒன்றில் ஒன்றானப்பின் தன்னை தந்தானபின்

உன்னிடம் நானென்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

புதன், 23 மே, 2012

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது


சமீபத்தில் கேட்டதில் ஒரு அழகான பாடல். இந்த பெண் குரல் என்னை மிகவும் கவர்ந்தது.

திரைப் படம்: வசீகரா (2003)
இயக்கம்: K செல்வ பாரதி
இசை: S A ராஜ்குமார்
பாடல்: பா விஜய் மற்றும் நா முத்து குமார் என்கிறார்கள்.
குரல்கள்: ஸ்ரீனிவாசன், மகாலக்ஷ்மி அய்யர் 
நடிப்பு: விஜய், ஸ்னேகா 





நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குதான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்

கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில் 
உன் முத்தம்தானே பற்றிக் கொண்ட முதல் தீ 
கிள்ளும் போது எந்தன் கையில் கிடைத்த 
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சரணம்

அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை 
காலமுல்ல காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறு முறை பார் என்றது

காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பரவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தட்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்
அது ஊசி ஒன்றைஉள்ளுக்குள்ளே அனுப்பும் 
இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே 
தூசி போல நாம் அலைவோம்

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறு முறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குதான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

சனி, 19 மே, 2012

அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

அழகான இனிமையான பாடல். பாடல் வரிகளே படத்தின் முடிவை ஒரு விதத்தில் தெரிவித்துவிடும்.
இந்தப் படத்தினை பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.


திரைப் படம்: சத்யம்
நடிப்பு: சிவாஜி, கமல், ஜெயசித்ரா
இசை: K V மகாதேவன் என நினைக்கிறேன்




http://www.divshare.com/download/14998319-4e0


அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...



நடையும் இடையும் கண்டு நாடியெங்கும் சூடு கண்டு...

கடையே விரிக்கிரியே கதை கதையா அளக்கரியே...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...



ஏத்தமிட்டு நீர் எறச்சேன்... நாத்து காலே நட்டு வச்சேன்...

ஏத்தமிட்டு நீர் எறச்சேன்... நாத்து காலே நட்டு வச்சேன்...

அறுவடைக்கு நேரமாச்சி அம்மாடி...

ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி...



நீரூத்தி வரம்புமிட்டு...நேரம் பாத்து கதிர் அறுத்து..

நீரூத்தி வரம்புமிட்டு...நேரம் பாத்து கதிர் அறுத்து..

ஆதரிப்பார் இல்லையினா அத்தானே...

யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே...



அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ...



தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

ல் ல் ல் லாலா



மாலை வருமடியோ ...மகமாயி துணையிருப்பா...

மாலை வருமடியோ ...மகமாயி துணையிருப்பா...

நாலும் நடக்குமடி அம்மாடி...

நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி...



காளியம்மா சத்தியமா கைபிடிக்கவில்லையின்னா...

காளியம்மா சத்தியமா கைபிடிக்கவில்லையின்னா...

ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே...

ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே...



அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ