பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 மே, 2012

அழகே உன் பெயர்த்தானோ அமுதே உன் மொழிதானோ


இறைவன் இருக்கின்றான் திரைப் படத்தில் ‘’எந்தன் தேவனின் பாடல் என்ன’’ பாடல் பிரபலமானது
போல் இந்தப் பாடல் ஆகவில்லை ஆனாலும் இனிமையான பாடல்.
S P B மற்றும் P சுசீலாவின் குரல்களில் இனிமை வழிந்தோடுகிறது.
 

திரைப் படம்: இறைவன் இருக்கின்றான்
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: G S மணி
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: P சுசீலா, S P B   


அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
நடந்தால் சிந்து கவியோ
நடந்தால் சிந்து கவியோ
நீ அருந்தேன் தந்த சுவையோ

தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
இதுதான் பெண்ணின் மனமோ
இதுதான் பெண்ணின் மனமோ
இது இயற்கை தந்த குணமோ
அழகே உன் பெயர்தானோ

பொன் பார்த்து மயங்கும் உன் மேனி அழகை
கண்டாலும் போதை தரும்
என் கையோடு குலுங்கும் சங்கீத வளையல்
சிங்காரம் பாடி வரும்

கம்பன் இன்று இருந்தால்
அவன் உன்னை அறிந்தால்
மனம் என்னன்ன பாட நினைக்கும்
அதை இன்றிங்கு பாட அழைக்கும்
தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
அழகே உன் பெயர்த்தானோ

நில்லென்று நிறுத்தி உன்னை
ஜில்லென்று தழுவிக் கொண்டு
பாடும் ராகங்கள் என்ன

புன்னகை இதழ் விரிக்கும்
மல்லிகை சரம் தொடுத்து
சூட்டும் காலங்கள் என்ன
கன்னிப் பூ உடலோ
அன்னத்தின் சிறகோ
பிள்ளைச் சொல் மழலை பேசுவதோ
அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ

2 கருத்துகள்:

கே. பி. ஜனா... சொன்னது…

முன்பு அடிக்கடி கேட்டு ரசித்த சங்கர் கணேஷின், எனக்குப் பிரியமான பாடல்களில் ஒன்று. இதிலும் ப்ளூட் இசையில் பின்னியிருப்பார்கள்.

Covai Ravee சொன்னது…

பா.நி. பா இந்த பாடல் பதியப்பட்டுள்ளது. இருந்தாலும் உங்கள் தளத்தில் மீணுடும் கேட்க இனிமைதான். நன்றி.


http://myspb.blogspot.in/2009/03/713.html

கருத்துரையிடுக