பின்பற்றுபவர்கள்

சனி, 19 மே, 2012

அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

அழகான இனிமையான பாடல். பாடல் வரிகளே படத்தின் முடிவை ஒரு விதத்தில் தெரிவித்துவிடும்.
இந்தப் படத்தினை பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.


திரைப் படம்: சத்யம்
நடிப்பு: சிவாஜி, கமல், ஜெயசித்ரா
இசை: K V மகாதேவன் என நினைக்கிறேன்
http://www.divshare.com/download/14998319-4e0


அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...நடையும் இடையும் கண்டு நாடியெங்கும் சூடு கண்டு...

கடையே விரிக்கிரியே கதை கதையா அளக்கரியே...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...ஏத்தமிட்டு நீர் எறச்சேன்... நாத்து காலே நட்டு வச்சேன்...

ஏத்தமிட்டு நீர் எறச்சேன்... நாத்து காலே நட்டு வச்சேன்...

அறுவடைக்கு நேரமாச்சி அம்மாடி...

ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி...நீரூத்தி வரம்புமிட்டு...நேரம் பாத்து கதிர் அறுத்து..

நீரூத்தி வரம்புமிட்டு...நேரம் பாத்து கதிர் அறுத்து..

ஆதரிப்பார் இல்லையினா அத்தானே...

யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே...அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ...தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

ல் ல் ல் லாலாமாலை வருமடியோ ...மகமாயி துணையிருப்பா...

மாலை வருமடியோ ...மகமாயி துணையிருப்பா...

நாலும் நடக்குமடி அம்மாடி...

நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி...காளியம்மா சத்தியமா கைபிடிக்கவில்லையின்னா...

காளியம்மா சத்தியமா கைபிடிக்கவில்லையின்னா...

ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே...

ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே...அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக