பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 மே, 2012

காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்


அழகான காலை பொழுதில் அழகான ஒரு பாடலை கேட்பதில் இன்பம்தான்.

திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வைரமுத்து
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: கமல் ஹாசன், அம்பிகா
இயக்கம்: S P முத்துராமன்http://www.divshare.com/download/17572841-354

Download video song:
http://www.divshare.com/download/17573106-e8bஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

உறங்கும் மானிடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை
நெஞ்சில் ஒரே பூ மழை.

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

1 கருத்து:

கருத்துரையிடுக