பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 மே, 2012

குத்து விளக்காக குல மகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்


நீண்ட இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் சந்தோஷம். இனி இடைவெளி இன்றி பாடல் தரமேற்றுதல் இடம் பெறும் என நான் நம்புகிறேன்.
இந்த இனிமையான பாடலுடன் நிகழ்ச்சியை தொடருவோமாக. பாடகர்களின் அனுபவ முதிர்ச்சி பாடலில் தெரிகிறது. இனிமை சேர்க்கிறது.

திரைப் படம்: கூலிக்காரன் (1987)
நடிப்பு: விஜயகாந்த், ரூபிணி
குரல்கள்:   S P B, S ஜானகி
இசை: T ராஜேந்தர்
இயக்கம்: ராஜசேகர்    http://www.divshare.com/download/17114641-6be
http://www.divshare.com/download/17114552-4c2

குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளந்தன்னில் ஓடும் தேனே
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூயென்குது

பூவிலூறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதை தான் பண்பாடுது

சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

நீ நேசம் தர அதில் நான் வாசம் பெற
குத்து விளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு கண்ட இந்த இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது

பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம் தான் பரிமாறுது

பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம் பெற

கூச்சம்தான்

நானும் மெல்ல அள்ள
நானம் உன்னை கிள்ள

குத்து விளக்காக குல மகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா

உனக்கென பிறந்தேனே
உன் தோளில் என்றும் தவழ்வேனே  
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"நல்ல பாடல் சார் ! என் புதிய பதிவில் ஒரு DD Mix போட்டுள்ளேன் ! கேட்டு விட்டு கருத்து கூறவும் ! நன்றி !"

Covai Ravee சொன்னது…

மீண்டும் வருக அறிதான பாடல் தருக. நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்கும் பாடல் பாலுவின் பாசந்தி குரலில் மிக அற்புதம் நன்றி.

arrawinth yuwaraj சொன்னது…

நண்பரே ,
இந்தப் படத்தின் பாடல்கள் - இசை திரு டி. ராஜேந்தர் அவர்கள்.
தயவுசெய்து ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து திருத்திக்கொள்ளுங்கள்..
இது போல பல இடங்களில் கவிஞர் பெயரும் மாறி மாறி வந்துள்ளது ...
நல்ல பல அபூர்வ பாடல்களைக் கொடுக்கும் நீங்கள் இதை மட்டும் சரி செய்து கொண்டால்
இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி ..

Covai Ravee சொன்னது…

ஆமாம் சார் திரு.யுவராஜ் சார் சொன்ன மாதிரி இந்த பாடலின் இசை டி.ராஜேந்தர் தான் சின்ன குழந்தையை இந்த பாடல் கேட்டாலே போதும் ஒரு ஆட்டம் போட்டு சொல்லிடும். பாடலின் இனிமையில் நானும் கவனிக்க மறந்துவிட்டேன்.

கிணற்றுத் தவளை சொன்னது…

தாமதத்துக்கு மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டபடி திரு T ராஜேந்தர் தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். வேறு ஏதோ சமயத்தில் இளையராஜா என்று பார்த்த நினைவில் தவறாக எழுதிவிட்டேன். நன்றி.

கருத்துரையிடுக