பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை...senthoor murugan kovilile

மீண்டும் நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம் நண்பர்களே.
அமைதியான சூழ்நிலையில், ஆர்பாட்டம் இல்லாத ஒரு உலகில், சஞ்சலமில்லாதை மனதோடு நமது திரைப் பட தமிழிசைப் பாடல்களை கேட்க வேண்டும். அதன் சுகமே அலாதிதான்.
அதிலும் ஒரே பாடலை இரு வேறு விதமாக நமது குயிலிசைகள் பாடி வழங்கும் போது

படம்: சாந்தி (1965)
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா

இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, எஸ் எஸ் ஆர், தேவிகா, விஜய குமாரி
இயக்கம்: A பீம்சிங்செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி

கன்னி என் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி

வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி
சேராமல் சென்றானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
 நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி

ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
 ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கென சொல்வானடி
வாழ்கென சொல்வானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்மற்றுமொரு விதத்தில் இதே பாடல்:

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
 
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
 
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்

என்னிரு கண்கள் தூங்கிய போது
பெண் பார்க்க வந்தானம்மா

என்னிரு கண்கள் தூங்கிய போது
பெண் பார்க்க வந்தானம்மா

பன்னிரு கையில் வாரியணைத்துப்
பண்பாட வந்தானம்மா

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
 
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

ஆ ஆ ஆ ஆ  ஆ ஓ ஓ ஓ ஓ
கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா
ஒன்றேனும் தரலாமா

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
 
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

கோபியர் கொஞ்சும் ரமணா...Gopiyar konjum ramana...

மிகவும் சாதாரணமான பாடல் வரிகளில்  கனமான விஷயத்தை டி.எம்.எஸ் மூலம் சொல்லியிருக்கிறார் கவிஞர். எந்த ஒரு இக்கட்டான சமயத்திலும் மன நிம்மதியை தரும் ஒரு பாடல்.

திரைப் படம்: திருமால் பெருமை  (1968)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.எஸ்
நடிப்பு: சிவாஜி கணேசன், K R விஜயா
இயக்கம்: A P நாகராஜன்
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா

மா பாரதத்தின் கண்ணா
கண்ணா
கண்ணா
கண்ணா
மா பாரதத்தின் கண்ணா
மாயக் கலையின் மன்னா
மா பாரதத்தின் கண்ணா
மாயக் கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா
மதுசூதனா
மாதவா கார்மேக வண்ணா
மதுசூதனா
கோபியர் கொஞ்சும் ரமணா

தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுண்டா
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுண்டா

கோபியர் கொஞ்சும் ரமணா
கோபாலகிருஷ்ணா
கோபியர் கொஞ்சும்  ரமணா
கோபாலகிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபாலகிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா
ரமணா ரமணா

வியாழன், 5 பிப்ரவரி, 2015

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு...parthuk kondathu kannukku kannu

எம் ஜி யாரின் பாடல்கள் என்றாலே ஒரு தனி ஈர்ப்புதான் நமக்கு. அதிலும் அவர் நடித்த காதல் பாடல்களும் தத்துவப் பாடல்களும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இசையும் பாடல் வரிகளும் அதை பாடகர்கள் பாடியிருக்கும் விதமும் சொல்லில் சொல்ல முடியாது. கேட்டே அனுபவிக்க வேண்டும். அந்த வகையில் இது ஒரு பாடல்.

திரைப் படம்: தாய்க்குத் தலை மகன் (1967)
இயக்கம்: M A திருமுகம்
பாடல்: கண்ணதாசன்  
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
பாடோயவர்கள்: டி எம் எஸ், P சுசீலாபார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

பக்கமா நெருங்க விட்டு

வெட்கம் என்ன சொல்லடி சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

பக்கமா நெருங்க விட்டு

வெட்கம் என்ன சொல்லடி சிட்டு


பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு


கண்ணலே மடக்கி விட்டு

பெண்ணாசை பெறுக விட்டு

உன் ஆசை மறைக்கலாகுமா


கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்

என்னை நான் மறைக்கவில்லை

இன்னும் நான் விளக்க வேண்டுமா


கண்ணலே மடக்கி விட்டு

பெண்ணாசை பெறுக விட்டு

உன் ஆசை மறைக்கலாகுமா


கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்

என்னை நான் மறைக்கவில்லை

இன்னும் நான் விளக்க வேண்டுமா


முந்தி முந்தி வரும் முத்து சிரிப்பினை சிந்தி வரலாமா


சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா


முந்தி முந்தி வரும் முத்து சிரிப்பினை சிந்தி வரலாமா


சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா


பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு


கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு


என்னன்ன நினைத்து வந்தேன்

எத்தனை எடுக்க வந்தேன்

எல்லாமே மறந்து போனதேன


கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்

கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்

நான் உங்கள் சொந்தம் அல்லவா


என்ன என்ன இது கன்னி மனசுக்கு இத்தனை எண்ணங்களா


மெல்ல மெல்ல வந்து கன்னி பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா


என்ன என்ன இது கன்னி மனசுக்கு இத்தனை எண்ணங்களா


மெல்ல மெல்ல வந்து கன்னி பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா


பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு


கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மயங்காத மனம் யாவும் மயங்கும்

அஷ்டாவதானி P பானுமதி அம்மாள் பாடிய மிக அற்புதமான பாடல். கணீர் என்ற குரலில் விவரமான நடிப்பாற்றலுடன் தெளிவான தமிழ் உச்சரிப்பில் பிரமாதமான பாடல். இணைந்திருக்கும் மக்கள் திலகம் பற்றி சொல்லவே வேண்டாம்.

திரைப் படம்: காஞ்சித் தலைவன் (1963)
இயக்கம்: A காசிலிங்கம்
இசை: கே.வி. மகாதேவன்
நடிப்பு: எம் ஜி யார், பானுமதி
பாடியவர்: பி. பானுமதி
இயற்றியவர்: ஆலங்குடி சோமு

ஆ...ஆ....
மயங்காத மனம் யாவும் மயங்கும்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அழகின் முன்னாலே
ஏ...ஏ..ஏ...ஏ..
ஓ ராஜா
ஓ ராஜா
அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்
அறிந்து கொள்வீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

ஆ..
கன்னத்திலே பழத் தோட்டம்
கண்களிலே சதிராட்டம்
கன்னத்திலே பழத் தோட்டம்
கண்களிலே சதிராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால்
காளையர்க்குப் போராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால்
காளையர்க்குப் போராட்டம்
உணர்ந்து கொண்டாலே
உணர்ந்து கொண்டாலே
உறங்கிடுமோ இளமை
உறவு கொண்டாலோ ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

ஆ..
கருமுகில் காண வரும்
கண்டவுடன் நாணமுறும்
கருமுகில் காண வரும்
கண்டவுடன் நாணமுறும்
கன்னி என்தன் கூந்தலுக்கே
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
கன்னி என்தன் கூந்தலுக்கே
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
புதுமை கண்டாலே
புதுமை கண்டாலே
பசித்திடுமோ உமக்கு
பொறுத்திடுவீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
ஆ.. ஆ...