பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா

வாழைத் தோட்டம் பூத்தது போல் கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன கண்களிரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில் ஒன்று திரண்டு
உன்னைப் பருகச்சொல்லி உருகியதோ அருகினில் வந்து

அஹா என்ன  ஒரு  கவிதை..? இது  போல  வரிகள்  கொண்ட பாடல்களை  காலம் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாமே.. மற்ற  வரிகளும் சோடை  போகவில்லை. பாடல்  வரிகளுக்கு ஏற்ற இசையும், பாடியவர்களின்  அருமைக் குரலும் ஆஹா  ஆகாதானே.. கேட்டு மகிழ்வோம்..

திரைப்படம்: பழனி (1965)
இசை: M S விஸ்வநாதன் - T K ராமமூர்த்தி
பாடியவர்கள்: P.சுசீலா, T M.சௌந்தரராஜன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, முத்துராமன், தேவிகா
இயக்கம்: பீம்சிங்க்

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா

கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக்கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே
சுகமில்லை கண்ணே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணே கண்ணே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே

அல்லிப்பூவைப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேன் எடுத்துப்பாடிடும் தேனி
அல்லிப்பூவைப் போலிருக்கும் அழகிய மேனி

நான் அங்கு வந்து தேன் எடுத்துப்பாடிடும் தேனி
இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும் மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன் உன் பெயர் கூறி

அஹாஹா அஹாஹா ஆ  ஆ  அஹாஹா....

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே

வாழைத் தோட்டம் பூத்தது போல் கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன கண்களிரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில் ஒன்று திரண்டு
உன்னைப் பருகச்சொல்லி உருகியதோ அருகினில் வந்து

அஹாஹா அஹாஹா ஆ  ஆ  அஹாஹா....

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா

மெல்ல மெல்ல கண்ணை மூடித் திறந்திட வேண்டும்
கதை சொல்ல சொல்ல இதழிரண்டும் சிவந்திட வேண்டும்

சொல்லும் போது பெண்ணைக் கொஞ்ஜம் கவனிக்க வேண்டும்
என்னைத் தோழி பார்த்து சிரித்திடாமல் அருள் செய்ய வேண்டும்

அஹாஹா அஹாஹா ஆ  ஆ  அஹாஹா....
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே