பின்பற்றுபவர்கள்

கமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூன், 2012

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறு கதை


தமிழ் திரை உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிய இந்தப் படத்திலிருந்து ஒரு இனிய பாடல்.
பாடல் வரிகள் கங்கை அமரன்  என வலையில் சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

திரைப் படம்: அவள் அப்படித்தான் (1978)
இயக்கம்: ருத்ரையா
இசை: இளையராஜா
நடிப்பு: கமல், ஸ்ரீப்ரியா, ரஜினி



http://www.divshare.com/download/17934318-4ec

உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

வாழ்வென்பதோ கீதம்
வளர்க்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துண்பம்
இனி வாழ்வெலாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

வெள்ளி, 1 ஜூன், 2012

வரவேண்டும் மகராஜன் தரவேண்டும் சுகராகம்


இது தெலுங்கு டப்பிங்க் படம் என நினைக்கிறேன். பாடலில் அந்த வாடை தெரிகிறது.
நல்ல பாடலாக இருக்கின்றது.

திரைப் படம்: பகடை பன்னிரண்டு
இசை:  சக்ரவர்த்தி
குரல்கள்: பாலசுப்ரமணியம், சுசீலா
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா

 

http://www.divshare.com/download/18021526-4fa

வரவேண்டும் மகராஜன்
தரவேண்டும் சுகராகம்

வரவேண்டும் மகராஜன்
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டி
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டி

மகராணி நெஞ்சில் ஊஞ்சலாடு

வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்
வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டு
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டு
மகராஜன் நெஞ்சில் ஊஞ்சலாடு

கையோடு கை சேர்த்த கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்
கையோடு கை சேர்த்த கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்

இதழில் சொல்லும் மந்திரம் ஒன்று
இனிக்க வைத்தது பூவையை இன்று
கண்ணா எந்தன் கன்னங்கள் கண்டு
கதை படித்திடு காதலுக்கென்று
காணாதன கண்டேன் இன்ப கண்ணா
வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்

பூப்போட்ட மஞ்சங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டு நெஞ்சங்கள் கூட
பூப்போட்ட மஞ்சங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டு நெஞ்சங்கள் கூட

இரவு என்பது இன்பங்கள் துள்ள
உறவு என்பது ஊடலுக்கல்ல
நிலவு என்பது சாட்சியம் சொல்ல
நெருக்கிக் கொள்ளுங்கள் தென்றலை வெல்ல
ராதை போல் ஆனேன் கிருஷ்ண தேவா

வரவேண்டும் மகராணி
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னலிட்டு
இதமான தொட்டில் கட்டு
மகராணி நெஞ்சில் ஊஞ்சலாடு
வரவேண்டும் மகராஜன்
தரவேண்டும் சுகராகம்

சனி, 19 மே, 2012

அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

அழகான இனிமையான பாடல். பாடல் வரிகளே படத்தின் முடிவை ஒரு விதத்தில் தெரிவித்துவிடும்.
இந்தப் படத்தினை பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.


திரைப் படம்: சத்யம்
நடிப்பு: சிவாஜி, கமல், ஜெயசித்ரா
இசை: K V மகாதேவன் என நினைக்கிறேன்




http://www.divshare.com/download/14998319-4e0


அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...



நடையும் இடையும் கண்டு நாடியெங்கும் சூடு கண்டு...

கடையே விரிக்கிரியே கதை கதையா அளக்கரியே...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...



ஏத்தமிட்டு நீர் எறச்சேன்... நாத்து காலே நட்டு வச்சேன்...

ஏத்தமிட்டு நீர் எறச்சேன்... நாத்து காலே நட்டு வச்சேன்...

அறுவடைக்கு நேரமாச்சி அம்மாடி...

ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி...



நீரூத்தி வரம்புமிட்டு...நேரம் பாத்து கதிர் அறுத்து..

நீரூத்தி வரம்புமிட்டு...நேரம் பாத்து கதிர் அறுத்து..

ஆதரிப்பார் இல்லையினா அத்தானே...

யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே...



அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ...



தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

தந்தன தந்தன தாளம்...கொட்டு தட்டிட தட்டிட மேளம்...

ல் ல் ல் லாலா



மாலை வருமடியோ ...மகமாயி துணையிருப்பா...

மாலை வருமடியோ ...மகமாயி துணையிருப்பா...

நாலும் நடக்குமடி அம்மாடி...

நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி...



காளியம்மா சத்தியமா கைபிடிக்கவில்லையின்னா...

காளியம்மா சத்தியமா கைபிடிக்கவில்லையின்னா...

ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே...

ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே...



அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது...

நடையாய் நடந்து சென்றால் நல்ல இடை வாடாதோ

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே


இனிமையான இளையராஜா இசையில் S P Bயும் ஜானகி அம்மாவும் அடக்கி வாசித்திருக்கும் பாடல்.

திரைப் படம்: எனக்குள் ஒருவன் (1984)
நடிப்பு: கமல், ஷோபனா
இசை: இளையராஜா
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: S P B,S ஜானகி





Free Music - Upload Audio Files - Mutham Pothathe














முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே
ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே

திங்கள், 2 ஏப்ரல், 2012

வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே


அருமையான பாடல்.  S P B அனைத்து வித வித்தைகளையும் இந்தப் பாடலில் காட்டியுள்ளார். ஜனரஞ்ஜகமான பாடல். இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இயக்கம்: S P  முத்துராமன்
நடிப்பு: கமல், அம்பிகா
பாடல்: வாலி






வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து ஹா ஹா பொங்கலிட்டாள்
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாட்க்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்
சபாஷ்
ஆ ஆ ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஹா  ஆ ஆ ஆ
தக்தி தரி நிஸா கரி நிஸா கரி நிஸா ரி ரி ரி ரி ரி த்ப ம ச திட தப திட தப சனி  ச ச ச ச சா சா ப ப ப ப ப சரி சரி சரி சரி ரி ரி ரி ரி ரி ரி ரிகரிச ரிகரிச ரிகரிச ப ப ப ப ம ம ம ம ம த த த த நி நி நி நி சப்தப்த  நிசப்த நிசானி ரிகரி நின்னி தன்னிப சனித
ஆகா ஆகா ஆகா
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை இதழில் வழிய இளமை விளைய
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹாஹா
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ

சனி, 31 மார்ச், 2012

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்


மிக மென்மையான இசையில் அழகாக பாடி இருக்கிறார்கள் பாடகர்கள்.

திரைப் படம்: சலங்கை ஒலி (1984)
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
இயக்கம்: K விஸ்வனாத்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கமல், ஜெயபரதா




http://www.divshare.com/download/17052605-1ee



http://www.divshare.com/download/17052811-dbc

ஆ ஆ ஆ ஆ
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்


இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
ஆ ஆ ஆ
இதழில் மௌனங்கள்
ஆ ஆ ஆ
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
ம் ம் ம்
இள மனதில் என்ன பாரம்
ம் ம் ம்