பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 மார்ச், 2017

சக்கரைக் கட்டி ராசாத்தி... Sakkarai katti raasaththi..

கணீர் என்ற டி எம் எஸ் குரலும் குயில் போன்ற சுசீலா  அம்மாவின் குரலும் இணைந்து, அழகான  பாடல் வரிகளுடன் தேனாக  பாயகிறது. அமைதியான பொழுதில் இந்த பாடலை கேட்க  சுகமோ சுகம்தான். இசை பிரியர்கள் இந்த பாடலோடு தானும் சேர்ந்து பாடுவது தவிர்க்க முடியாதது.. அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும். தமிழை தவறு இல்லாமல் பேச பழக இந்த வகை பாடல்கள் உதவும்.

உரிமை சொல்லி நான் வரவோ
என் உதட்டில் உள்ளதைத் தரவோ’’
என்று வாலி எழுதியிருந்தார். ‘உதட்டில் உள்ளதை’ என்ற வரிகளை சென்சார் ஆட்சேபித்ததால்
‘‘உரிமை சொல்லி நான் வரவோ
என் உயிரை உன்னிடம் தரவோ’’
என்று மாற்றிப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் காட்சியில் ஸ்பஷ்டமாக தன் உதட்டையும், சரோஜாதேவியின் உதடையும் சுட்டிக் காட்டி அபிநயித்திருப்பார் எம்.ஜி.ஆர். நல்ல டமாஸு!
அடுத்து, தோகை மயிலின் தோளை அணைத்து
தோகை மயிலின் தோளை அணைத்து
பள்ளிக் கொள்வது சுகமோ
என்பது பழகிக் கொள்வது  சுகமோ என்று மாற்றி  இருப்பார்கள்.
ஆனால் ஆடியோ  பாடல் எந்த சென்சாரில் மாட்டாமல் வெளி வந்ததால்... இந்த  மாற்றங்கள் இல்லை.

எம்.ஜி.ஆர் முதலில் தோன்றும் அறிமுகக் காட்சிக்கான மெனக்கெடல்கள் அவரது பெரும்பாலான படங்களில் தீராத நோயாகப் பீடித்திருந்த கட்டத்தில் வெளியானது இந்தப் படம். தான் நடித்த படங்களில் தனக்குப் பிடித்த படம் இது என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார். கிழிந்த சட்டையுடன் தாறுமாறான கோலத்தில் கதாநாயகனான எம்.ஜி.ஆரைக் கதையின் மைய நீரோட்டத்துக்குள் இழுத்துச் சென்ற காட்சிகள் ரசிகர்களைத் திகைக்கவைத்தன. ‘நம் தலைவர் ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாக மாறி, இப்படியும் கூட நடிப்பாரா!’ என வியந்து ரசித்தார்கள். அந்தப் படம், தன் வழக்கமான அம்சங்களிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர்.குணச்சித்திரப் பாத்திரம் ஏற்று நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’. இந்த உணர்ச்சிப் போராட்டச் சித்திரம்.
உணர்ச்சிக்கும் உரிமைக்குமான போராட்டக் களத்துக்குள் நுழைகிற கதாபாத்திரங்கள் ஏராளமானவை. எம்.ஜி.ஆரின் படங்களில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை கைக்கு அடக்கமாகவே இருக்கும். இப்படம் ஏராளமான கதாபாத்திரங்களை உள்ளிழுத்திருக்கிறது. சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா. அசோகன், நம்பியார், தங்கவேலு, டி.எஸ். பாலையா, ஷகீலா என்று பெரிய நட்சத்திரக் கூட்டம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான காட்சிகள். ஒவ்வொரு பாடலும் மெல்லிசை மன்னரின் குழந்தைமைக்கான தாலாட்டும் தன்மை கொண்டது.
பி.என். சுந்தரம், கிருஷ்ணன் பஞ்சு போன்ற தேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புக்கும் அன்பைப் புகட்டுவதைப்போல வந்த கதையமைப்புக்கும் எம்.ஜி.ஆர். தன் ஆகிருதியைக் களைந்து நட்சத்திரத் தோரணையற்ற நடிப்பால் வண்ணம் தீட்டியிருக்கிறார். அதன் பொருட்டாக இப்படம் அரை நூற்றாண்டுக் காலம் தாண்டியும் நம் நெஞ்சில் இன்னும் நிற்கிறது.- தி ஹிண்டு.
திரைப்படம்:  பெற்றால்தான் பிள்ளையா (1966)
இயக்கம்:  கிருஷ்ணன்-பஞ்சு 
நடிப்பு : எம். ஜி. ஆர், சரோஜா தேவி 
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி எம் எஸ், P  சுசீலா 
பாடல்: வாலி 


Upload Music Files - Audio Hosting -
சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சிக்கவா சொல்லு மகராசி

சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சிக்கவா சொல்லு மகராசி

பட்டுப் போன்ற உடல் தளிரோ
என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
பட்டுப் போன்ற உடல் தளிரோ
என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின் தோளை அணைத்து
தோகை மயிலின் தோளை அணைத்து
பள்ளிக் கொள்வது சுகமோ

தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும் பாலை சிரிப்பில்
ஆளை மயக்கும் பாலை சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன
ஜாடை என்ன
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்

உறவைச் சொல்லி நான் வரவோ
என் உதட்டில் உள்ளதைத் தரவோ
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
வாரி கொடுப்பேன் வா வா

மடியைத் தேடி வந்து விழவோ
இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மடியைத் தேடி வந்து விழவோ
இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ
காலை வரையில் சேலை நிழலில்
காலை வரையில் சேலை நிழலில்
கண்கள் உறங்கிட வா வா

கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன
ஜாடை என்ன
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்

ஹாஹா சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சிக்கவா சொல்லு மகராசி

ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா
ம்ம்ம் ம்ம்ம்ஹுஹும்
ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா
ம்ம்ம் ம்ம்ம்ஹுஹும்


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"உதட்டில் உள்ளதை"

பல தகவல்கள் பாடலைப் போலவே இனிமை...

Unknown சொன்னது…

நன்றி சார்

கருத்துரையிடுக