பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை திரு திண்டுக்கல் தனபாலன், திரு கோவை ரவி, திரு தேவதாஸ் ஆகியோருக்கு.

 நல்லதொரு இனிமையான பாடல். டியூன் ஹிந்தியிலிருந்து வந்தாலும், சரியான தமிழ் வார்த்தைகளில் பாடலை எழுதி மெருகூட்டியிருக்கிறார்கள் இசையமைப்பாளரும் கவிஞரும். P. சுசீலா அம்மாவின் குரல் தனி இனிமையோடு இருக்கிறது இந்த பாடலில். 


படம் : இரு வல்லவர்கள்
குரல் : டி.எம்.எஸ்., P சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : S வேதா
நடிகர்கள் : ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி


http://asoktamil.opendrive.com/files/Nl81NzA2OTUxXzNrMERRX2FmN2I/Aasaiya%20Kobama-Iru%20Vallavargal.mp3

உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா  கோபமா
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன
அந்தக் கோலத்தை மூடுவதென்ன
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
என் இதழில் இளமேனியில்
இந்தக் கோலம் நீ காணலாமா
என் இதழில் இளமேனியில்
இந்தக் கோலம் நீ காணலாமா
கேட்பார் இல்லாமல் தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
கேட்பார் இல்லாமல் தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
மலர் சூடும் முன்னால் என்ன ராகம்
மணமாகும் முன்னால் என்ன தாளம்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஆசையா கோபமா

புதன், 27 பிப்ரவரி, 2013

ஏர்டெல் இண்டெர்னெட் வேலை செய்யவில்லை. ஒரு மாதமாகியும்


வணக்கம் அன்பர்களே,
நீண்ண்ண்ட....!!! நாட்கள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னை வந்த நாள் முதல் எங்கள் வீட்டில் ஏர்டெல் இண்டெர்னெட் வேலை செய்யவில்லை. ஒரு மாதமாகியும் அவர்களுக்கு சரி செய்ய விருப்பம் இல்லாமையால் இன்று அரசு நிறுவனமாகிய BSNL இண்டெர்னெட்டுக்கு மாறிவிட்டேன். விரைவில் ஏர்டெல்லும் மற்றும் ஒரு கிங்க் ஃபிஷராகிவிடும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
ஆகையால் நண்பர்களே, இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் கிணற்றுத் தவளை தொடரும். நீங்களும் தொடர்ந்து எனக்கு ஊக்கமளிக்கவேண்டும். தடங்களுக்கு நான் மட்டுமே வருந்துகிறேன். நன்றி

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே

அழகானப் பாடல். பாடல் வரிகள் என்னமோ இளம் ஜோடிகள் கிராமத்தில் பாடுவது போல அமைந்திருந்தாலும் படக் காட்சியில் வரும் பெண்ணின் உடையமைப்பில்  நகரத்துப் பெண்ணாகக் காட்சியளிக்கிறார்.


திரைப் படம்: ராமன் அப்துல்லா (1997)
நடிப்பு: விக்னேஷ், ஈஸ்வரி ராவ்
குரல்கள்: அருன்மொழி, பவதாரினி
இசை: இளையராஜா

http://asoktamil.opendrive.com/files/Nl81OTU1OTEyX1ZKMTJ5X2MzYmU/En%20Veettu%20Jannal%20Etti%20Raman%20Abdullah[128].mp3


என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கறச்சு வச்சேன் ராசா ராசா
உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருகி நின்னேன் லேசா லேசா


என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கையாளே பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறச்சு வச்ச
மஞ்ச தண்ணி கறச்சு வச்ச ராணி ராணி
உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருக வந்தேன் வா நீ வா நீ

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு
முந்தானை தந்தானம் பாட
கேட்டு அதை கேட்டு கிறங்காமல் ஸுதி மீட்டு
நெஞ்சோரம் சிங்காரம் தேட
வயலோரம் வரப்போரம்
தினம் காத்திருந்து வாட
இரு தோளில் ஒரு மாலை
இது ராத்திரியில் சூட
நான் உறவாய் வரவா வரவா

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற

கண்ணாலே பேசாதே கையாளே பேசு
கையோட கை சேர்த்து பூங்காத்தா வீசு

மருதாணி அறச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கறச்சு வச்ச ராசா ராசா

உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருக வந்தேன் வா நீ வா நீ

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற

பாடு நடை போடு அழகோடு உறவாடு
ஆகாயம் கிட்டே வராது
மூடு திரை போடு முத்தாடி விளையாடு
முச்சூடும் என்னை விடாது
மறவேனே வருவேனே
சிறு பூ பறித்திட தானே
வரம் நானே பெறுவேனே
நீ மன்மத மலை தேனே
நான் உறவாய் வரவா வரவா

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற

கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு

ம் ம் ம்
மருதாணி அறச்சு வச்ச
மஞ்ச தண்ணி கறச்சு வச்ச ராணி ராணி

உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருக வந்தேன் வா நீ வா நீ

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற

இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற

புதன், 6 பிப்ரவரி, 2013

பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா

இரண்டு ஜோடிகளுக்கு மூன்று பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள். பெண்கள் குரலைப் பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். காணொளியில் சின்ன தடுமாற்றம் தெரிகிறது. கவனித்து பார்த்தால் L R ஈஸ்வரி அவர்களின் குரலில் முதலில் ஜெயலலிதா பாடியிருப்பார். பின்னர் P சுசீலா அம்மாவின் குரலுக்கு பாடியிருப்பார். இனிமையானப் பாடல்.

திரைப் படம்: மாட்டுக்கார வேலன்
பாடல்: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
நடிப்பு: எம் ஜி யார், லக்ஷ்மி, ஜெயலலிதா
குரல்கள்: T M S, P சுசீலா, L R ஈஸ்வரி
இயக்கம்: P நீலகண்டன்

http://asoktamil.opendrive.com/files/Nl81Nzg3OTgxX2Y4M2R1XzA4OWI/Poo%20Vaitha%20poovaikku-Maatukkara%20Velan.mp3


பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I love you
I love you
I love love you

பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I love you
I love you
I love love you

முத்துச் சிமிழா
வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா
முத்துச் சிமிழா
வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா
கண் பட்டு
ஆஹா
உங்கள் கை பட்டு
ஓஹோ
இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
கண் பட்டு உங்கள் கை பட்டு
இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
I love you
I love you
I love love you

பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டிப் போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்தப் பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
ஆஹா
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
ஓஹோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்துச் சொல்ல முடியும்
I love you
I love you
I love love you

பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
போடுங்கள்
ஆஹா
கூண்டில் ஏற்றுங்கள்
ஓஹோ
போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
I love you
I love you
I love love you

பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்துக் கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
நன்றாய் இருக்குதிந்த உவமை
ஓஹோ
இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை
ஓஹோஹோ
நன்றாய் இருக்குதிந்த உவமை
இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I love you
I love you
I love love you
I love you
I love you
I love love you

திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஓ ஸ்வர்ண முகி வருவேன் சொன்னபடி

இனிமையானாப் பாடல். இனிமை குறையாமல் பாடியிருக்கிறார்கள். அபூர்வமான பாடல் இது.

திரைப் படம்: கறுப்பு வெள்ளை (1993)
இயக்கம்: மனோபாலா
இசை: தேவா
நடிப்பு: ரஹ்மான், சுகன்யா
பாடியவர்கள்: S P B, K S சித்ரா என நினைக்கிறேன்.

http://asoktamil.opendrive.com/files/Nl81OTU1MzI5X3FHV0NnXzkxZWI/OhhSwarnamugiVaruven-KaruppuVellai.mp3

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
சந்தன பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புது தந்தியிலே
இளம் சுந்தர வீணை ஒன்று
சிந்தட்டும் ராகம் இன்று
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
நந்தா வருக வந்தால் மனதில்
புல்லாங்குழல் ஒலிக்கும்
பிருந்தாவனமும் செந்தேன் குழைத்து
தந்தே எனை மயக்கும்
விழாவொன்று உள்ளம் கூடும்
வேடந்தாங்களிலே
ஆ ஆ ஆ ஆ
உலா வந்த தென்றல் பாடும்
கோடை மூங்கிலிலே
வெண்ணையள்ளும்
சின்னக் கண்ணனை போல்
தினம் என்னை அள்ளு அள்ளு
இன்பத்தின் கீதை சொல்லு
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து
கண்ணே நான் வருவேன்
இங்கே மறந்த இன்பம் இருந்தால்
அங்கே நான் தருவேன்
இதோ இந்த மண்ணும் வின்னும்
பாடும் ராகம் எது
ஓ ஓ ஓ
ஒரே சொல்லில் அர்த்தம் கோடி
காதல் வேதமது
கண்ணும் கண்ணும்
சுகம் பின்னும் பின்னும்
அந்த மன்மத மின்னல் ஒன்றே
பிரம்மனை காயம் பண்ணும்
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
சந்தன பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புது தந்தியிலே
இளம் சுந்தர வீணை ஒன்று
சிந்தட்டும் ராகம் இன்று
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி
ஓ ஸ்வர்ண முகி
வருவேன் சொன்னபடி

சனி, 2 பிப்ரவரி, 2013

ஈரத் தாமரைப் பூவே உன் இதழில்

எனக்கு தெரிந்து ஜனகராஜ் டூயட் பாடியிருக்கும் படம் இதுதான் என்று நினைக்கிறேன். அவரது சொந்த படமாக இருக்கலாம். இவருக்கு S P Bயின் குரல் எனும் போதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. S P B இவ்வளவு சிரமப்பட்டிருக்க தேவை இல்லை. நல்ல இனிமையான பாடல்தான். அபூர்வமான பாடல். K S சித்ரா அவர்களின் ஹம்மிங்க் ஒரு இனிமையான இணைப்பு.

திரைப் படம்: பாய்மரக் கப்பல் (1988)
நடிப்பு: ஜனகராஜ், கலைச் செல்வி
இசை: K V மகாதேவன்
இயக்கம்: K ராதா

http://asoktamil.opendrive.com/files/Nl81OTExODA5X1dOMnV6XzAzNGU/EeraThamaraiPoove.mp3ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தனானேன்
உறங்கவில்லை சில வாரங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்கள் கார்த்திகை அகல்களோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ
விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ
விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஈரத் தாமரைப் பூவே
ம் ம் ம் ம்
உன் இதழில் எத்தனை சாரங்கள்
ஆ ஆ ஆ ஆ
புத்தன் நானே
ஆ ஆ
பித்தன் ஆனேன்
ஆ ஆ
உறங்கவில்லை சில வாரங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கூந்தல் என்பது சமுத்திரமோ
ம் ம் ம் ம் ம் ம்
அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ
ஆ ஆ ஆ ஆ ஆ
கூந்தல் என்பது சமுத்திரமோ
அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ
இலைகள் இல்லா பூ மரமோ
உன் இமையே உனது சாமரமோ
நீ இலைகள் இல்லா பூ மரமோ
உன் இமையே உனது சாமரமோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஈரத் தாமரைப் பூவே
ஆ ஆ ஆ ஆ
உன் இதழில் எத்தனை சாரங்கள்
ஆ ஆ ஆ ஆ
புத்தன் நானே
ஆ ஆ
பித்தன் ஆனேன்
ஆ ஆ
உறங்கவில்லை சில வாரங்கள்
உறங்கவில்லை சில வாரங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ