பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 ஜூன், 2011

மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுவது நாள் mogam athu mupaththu naal

இனிமையான குரல்கள் இனிமையான இசை இனிமையான பாடல்.


திரைப் படம்: அணையா விளக்கு (1975)
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்: மு.க.முத்து, P சுசீலா
பாடல்: வாலி
நடிப்பு:  மு.க.முத்து, லக்ஷ்மி, பத்ம பிரியா

இயக்கம்: பஞ்சு அருணாச்சலம்/ R கிருஷ்ணன்
 


http://www.divshare.com/download/15205912-18e


மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுவது நாள்

மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுவது நாள்
இதயம் கலந்த காதல் என்றால்
புதிதாய் தோன்றும் ஒவ்வொரு நாள்

மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுவது நாள்

பருவ கால மழையை போலும்
இளமை காணும் உறவு - அந்த
மழைக்கு பின்னால் தூவானம் போல்
முதுமை கால நினைவு

குமரியாக இருக்கும்போது
கூடல் என்பது இனிக்கும் - அந்த
இனிப்பு என்றும் கசப்பதில்லை
பாட்டியாகும் வரைக்கும்

மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுவது நாள்

ஊறும் தேனை மூடி வைத்தது
உதடு எனும் கதவு - அதில்
உனக்கு பாதி எனக்கு பாதி
எடுத்து கொள்ள உதவு

ஆசை கடலில் ஆட வந்தது
அழகு என்னும் படகு - அதில்
மிதக்கும்போது மயக்கம் வந்ததை
புரிந்து கொண்டது பிறகு

மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுவது நாள்

சோழன் மகனை சுமந்த வண்ணம்
வாழும் எனது உள்ளம் - அவன்
பொன்னி நதியை போல இந்த
கன்னி நதியின் வெள்ளம்

ஏந்த வேண்டும் ஆசை தீர
நீந்த வேண்டும் கண்ணே
ஏந்த வேண்டும் ஆசை தீர
நீந்த வேண்டும் கண்ணே - நான்
முத்திரை போடும் மேனி அழகு
பத்தரை மாற்று பொன்னே

மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுவது நாள்

மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுவது நாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

புதன், 29 ஜூன், 2011

முத்துத் தாரகை வானவீதி வர தங்கத் தேரென பூவை தேடிவர

இசையமைப்பிலும் பாடுவதிலும் கொஞ்சம் சிரமமான பாடல். எல்லா விதத்திலும் அசத்தி இருக்கிறார்கள். சிறப்பான பாடல்களில் இது ஒன்று


திரைப் படம்: ஒரு கை ஒசை (1980)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: K பாக்யராஜ், அஷ்வின்
இயக்கம், திரைக் கதை, வசனம்: K பாக்யராஜ்
பாடியவர்கள்: S P B, P சுசீலா
 http://asoktamil.opendrive.com/files/Nl8zNzA2NTI2M19KZExZbF83MGVj/MuthuThaaragai.mp3தம் தம் தம் தம் தன தம்த நன
தம் தம் தம் தம் தன தம்த நன
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தம் தம் தம் தம் தன தம்த நன
தம் தம் தம் தம் தன தம்த நன
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ

முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களே

தம்தன ந தம்தன ந தம்தன ந தம்தன
தம்தன ந தம்தன ந தம்தன ந தம்தன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூவிதழ் நூறும் தேன் மது சாறும்
ஓரிடம் சேர்ந்திட தந்தால் என்ன
மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கன்னா இங்கே

ஆ ஆ ஆ ஆ ஆ
பூவிதழ் நூறும் தேன் மது சாறும்
ஓரிடம் சேர்ந்திட தந்தால் என்ன
மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கன்னா இங்கே

உண்ணத்தான் இது தேனில் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதழ் சேரும் தேவியை பாராட்டுவேன்
உண்ணத்தான் இது தேனில் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதழ் சேரும் தேவியை பாராட்டுவேன்

முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ

நீ நீ நீ நீ நீ நீ
ஸா ஸா ஸா ஸா ஸா ஸா
நீ நீ நீ நீ நீ நீ வா வா
ஸா ஸா ஸா ஸா ஸா ஸா


பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்க்களம் ஆனால் என்னாவதோ
நீரலை மோதும் தாமரையாக
மேகலை வாயில் கலையாகுமே
பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்க்களம் ஆனால் என்னாவதோ
நீரலை மோதும் தாமரையாக
மேகலை வாயில் கலையாகுமே

கொஞ்சத்தான் இவள் மேனி ஆனது
மஞ்சம் மேல் இது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடிவிட போராடுவாள்
கொஞ்சத்தான் இவள் மேனி ஆனது
மஞ்சம் மேல் இது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடிவிட போராடுவாள்

முத்துத் தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

செவ்வாய், 28 ஜூன், 2011

மழை தருமோ என் மேகம்..

திரு ஷியாம் இசையிலும் S P B அவர்களின் குரலிலும் இன்னுமொரு நல்ல இனிமையான பாடல்.  இது மழைக் காலமோ!!!


திரைப் படம்: மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
நடிப்பு: கமல், ஸ்ரீதேவி
இயக்கம்: R C சக்தி
பாடல்: கண்ணதாசன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா


மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே

மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே.

ஆ ஹ ஹா ஹோ ஹோ ஹோ ம் ம் ம் ம்

தேனிருக்கும் வண்ண மலர் நீராடுது

தேனீயில் ஒன்று இங்கு போராடுது

தேனிருக்கும் வண்ண மலர் நீராடுது

தேனீயில் ஒன்று இங்கு போராடுது

அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்தளிரே நீ அன்னப்பேடு எண்ணம் மாறுமா

மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே

ஆ ஹ ஹா ஹோ ஹோ ஹோ ம் ம் ம் ம்

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்

காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்.

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்

காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்.

சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ

சிலை வண்ணம் அங்கே

கலை உள்ளம் இங்கே

நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே

இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா

மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே

ஆ ஹ ஹா ம் ம் ம் ம்

திங்கள், 27 ஜூன், 2011

மழையே என் மீது தூவாதே..நனைந்தால் என் பெண்மை தாங்காதே..

ஸ்ரீப்ரியாவின் சொந்த தயாரிப்பு. வாணி ஜெயராம் ரொம்ப இனிமையாக குரல் கொடுத்திருக்கிறார். தீபன் சக்கரவர்த்தி அழகாக இணைந்து பாடி இருக்கிறார். மொத்தத்தில் ஒரு நல்ல இசையுடன் கூடிய பாடல்.திரைப் படம்: சாந்தி முகூர்த்தம் (1984)

குரல்கள்: தீபன் சக்ரவர்த்தி, வாணி ஜெயராம்

இசை: சங்கர் கணேஷ்

இயக்கம்: A R சுப்ரமணியம்

நடிப்பு: மோகன், ஸ்ரீப்ரியாhttp://www.divshare.com/download/15174070-975

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

போர்த்திக்கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லைமழையே பெண் மீது தூவாதே

நனைந்தால் என் கண்கள் தாங்காதே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ

மழையே பெண் மீது தூவாதே

நனைந்தால் என் கண்கள் தாங்காதே

போர்த்திக்கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதேதேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று

என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ

நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை

உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ

செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம்

சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

போர்த்திக்கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதேமார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும்

உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே

என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல

வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ

உன்னோடு நெருக்கம் என்றாலும் தயக்கம்

கண்ணோரம் தெரிக்கும் நிலவரம் கலவரம்மழையே பெண் மீது நீ தூவு

இனியும் பெண் நெஞ்சு தாங்காது

மழையே என் மீது நீ தூவு

இனியும் என் பெண்மை தாங்காதுஅக்கம் பக்கம் யாரும் இல்லை

நாணம் கொள்ள நேரம் இல்லை

மனதை இனியும் மறைப்பது தொல்லைல ல ல லல ல ல ல ல ல ல லல ல ல ல ல ல

ஞாயிறு, 26 ஜூன், 2011

தமிழில் அது ஒரு இனிய கலை

நல்ல கவிதைத் தமிழில் மீண்டும் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: சங்கே முழங்கு (1972)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: M G R,லக்ஷ்மி
இயக்கம்: P நீலகண்டன்
http://www.divshare.com/download/15154586-5d5


தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

அழகில் நீயொரு புதிய கலை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை

பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ
பெண்ணாக உருவானதோ

பூ மீது விளையாடும் பொன் வண்டுகள்
உன் கண்ணாக உருவானதோ
கண்ணாக உருவானதோ

அன்னங்கள் தாலாட்டும் கண்ணங்கள்
எனக்காக கல்யாண ஒலி காட்டுவதோ
அன்னங்கள் தாலாட்டும் கண்ணங்கள்
எனக்காக கல்யாண ஒலி காட்டுவதோ

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

ஆ ஹா ஹா...

ஓ ஹோ ஹோ ஹோ...

ஆ ஹா ஹா...

ஓ ஹோ ஹோ ஹோ...

பாராத பார்வைக்குப் பரிசல்லவோ
உந்தன் மார்போடு நான் வந்தது
மார்போடு நான் வந்தது

பால் போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது
நல்ல நாள் பார்த்து நான் வந்தது

நெய்வாசக் குழல்மீது கை போட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ
நெய்வாசக் குழல்மீது கை போட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ

நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ
நீ தந்த விலையல்லவோ

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை

சனி, 25 ஜூன், 2011

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

உச்ச ஸ்தாயிலும் கீழ் ஸ்தாயிலும் அடுத்தடுத்து பாடகர்களை பாட வைத்து இசையமைத்து இருக்கிறார்கள் சங்கர் கணேஷ். அரிய வகைப் பாடலும்கூட.


திரைப் படம்: தாயில்லா குழந்தை (1976)

இயக்கம்: தியாகராஜன் (தேவர் மூவீஸ்)

நடிப்பு: ஜெயசித்ரா, விஜயகுமார்

இசை: சங்கர் கணேஷ்

பாடல்: தூயவன்http://www.divshare.com/download/15168630-5b0நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஏ ஏ ஏ ஏ ஏ

கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே ..

கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே ..


மழையாக கண்டாய் என்னை மலராக வந்தாய் கண்ணே..

நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை..

நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை..


எழுதாத எழுத்தாய் வந்தேன் இசை போட்டு படித்தாய் என்னை..நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன..பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து..

பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து ..

வெயில் நாளில் நதி போல் ஓடி விளையாடும் சுகங்கள் கோடி..

அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலரை மாறி..

அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலரை மாறி..


இளமாலை தென்றல் ஏறி இணையாவோம் வாழ்த்துக்கூறி..நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே ..

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன..

வெள்ளி, 24 ஜூன், 2011

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..

திரு V குமார் பாடல்கள் பலவற்றில் இது ஒரு மறக்க முடியாத பாடல்.
S P B, வாணி ஜெயராம் குரல்கள் பாடலுக்கு சிறப்பான மெருகூட்டி இருக்கின்றன.


திரைப் படம்: நாடகமே உலகம் (1979)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: V குமார்
இயக்கம்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு: சரத் பாபு, K R விஜயாPlay Music - Download Audio -


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
ல ல ல ல ல..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
ல ல ல ல..
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..

நடமாடும் கலை கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ..
விழி ஜாலத்தில் உருவானதோ...

மேனியில் ஆனந்த லயங்கள் மோகன ராகத்தின் நயங்கள்..
அங்கங்கள் எங்கெங்கும் காலத்தின் கோலங்களே...

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..
நடமாடும் கலை கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ..
விழி ஜாலத்தில் உருவானதோ...
தப தப சனி தப..
தப தப சனி தப..
சக சக தனி சப சக சக சனி தப..
நித பம கரி சனி..

மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன..
மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன..
நால் வகை குணம் கொண்டு நாணுமோ..
நாயகன் தொடும்போது நாணம் விளையும்..
நாயகன் தொடும்போது நாணம் விளையும்..
நானலின் இனம் போலே தேகம் வளையும்..
நேரம் பொன்னான நேரம்...
நெருங்க சொல்கின்றதோ..

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..

ஆடையை கலைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்..
ஆடையை கலைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்..
ஆடவன் துணை கண்டு அஞ்சுமோ..
உம்..
மாதுளம் கனியாகும் மாலை பொழுது..
மாதுளம் கனியாகும் மாலை பொழுது..
மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு..
யாவும் கண்ணா உன் சொந்தம்..
எடுத்து கொண்டாட வா..

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..
நடமாடும் கலை கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ..
விழி ஜாலத்தில் உருவானதோ...

வியாழன், 23 ஜூன், 2011

பூவிலே மேடை நான் போடவா...

மென்மையான இனிமையான பின்னனி இசையுடன் அழகான குரல்களுடன் ஒரு பாடல்.

திரைப் படம்: பகல் நிலவு (1985)

குரல்கள்: ஜெயச்சந்திரன், P சுசீலா.

இயக்கம்: மணி ரத்னம்

இசை: இளையராஜா

நடிப்பு: முரளி, ரேவதி

http://www.divshare.com/download/15128774-ef3


பூவிலே மேடை நான் போடவா...

பூவிழி மூட நான் பாடவா..

தோளிரண்டில் இரு பூங்கொடி..

என் சொந்தம் எல்லாம் இது தானடி..

பூவிலே மேடை நான் போடவா..

பூவிழி மூட நான் பாடவா..பூவிதழ் போல முல்லை என் பிள்ளை..

புன்னகை செய்தால் கண்படும்..

கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட..

கண்ட என் நெஞ்சம் புண்படும்..

அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி..

அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி..

நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்..

வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்..பூவிலே மேடை நான் போடவா..

பூவிழி மூட நான் பாடவா..

தோளிரண்டில் இரு பூங்கொடி..

என் சொந்தம் எல்லாம் இது தானடி..

பூவிலே மேடை நான் போடவா..

பூவிழி மூட நான் பாடவா..புதன், 22 ஜூன், 2011

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ

சாமுவல் ஜோசஃப் என்கின்ற ஷ்யாம் முதலில் தமிழில் இசையமைத்த பாடல். அவருடைய பாடல்கள் பலவும் சிறந்த பாடல்களே. தொடர்ந்து சில பாடல்களை வழங்க முயற்சிக்கிறேன். இந்த பாடலில் S P B மற்றும் வசந்தா குரல் ரொம்ப இனிமையாக இருக்கிறது.


திரைப் படம்: கருந்தேள் கண்ணாயிரம் (1972)
இயக்கம்: ராம சுந்தரம்
இசை: ஷ்யாம்
நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மிhttp://www.divshare.com/download/15140811-e49


ஆ ஆ
நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

ஆ ஹ ஹ ஹ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

அவள் மனம்
ஆ ஆ
அவள் குணம்
ஓ ஓ
நிலாவில் ஊஞ்சலில் ஆடும் நேரமோ
ஆ ஆ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
ம் ம்
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ
ம் ம்

மேகம் போடும் கோடு
அவள் மின்னல் ஆடும் வீடு
தேகம் காட்டும் ஜாடை
அது தெய்வம் தோன்றும் மேடை

மழைத்துளிகள் முத்து முத்தாக விழுவதை போன்ற சிரிப்பு
என் கவிதையின் வடிவம் அவளே

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

அவள் மனம்
ஆ ஆ
அவள் குணம்
ஓ ஓ
நிலாவில் ஊஞ்சலில் ஆடும் நேரமோ
ஆ ஆ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
ம் ம்
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ
ம் ம்

கம்பன் பாடும் சீதை
மலர் கண்ணன் பார்த்த ராதை
ஒன்றாய் வந்த கோலம்
அவள் உள்ளம் பிள்ளை போலும்

சிரித்து தண்ணீர் போல் குளிர் காலத்தில் வெப்பமாக இருக்கிறாள்
கோடையில் குளிர்கிறாள்

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

அவள் மனம்
ஆ ஆ
அவள் குணம்
ஓ ஓ
நிலாவில் ஊஞ்சலில் ஆடும் நேரமோ
ஆ ஆ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
ம் ம்
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ
ம் ம்

செவ்வாய், 21 ஜூன், 2011

காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

வழக்கமான பின்னனி இசையானாலும் இனிமையான பாடல்தான். பாடலில் கொஞ்சம் மலையாள வாடை வீசினாலும் இனிமையான குரல்.


திரைப்படம்: கவிக்குயில் (1977)
குரல்: சுஜாதா
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு: சிவகுமார், ஸ்ரீ தேவி
இயக்கம்: தேவராஜ் மோகன்http://www.divshare.com/download/15134822-e6d


ம் ம் ம் ம் ம் ம்...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

மனசோலையின் காவியமே...
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ.

மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே........
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

கூந்தலில் வாசனை மலர்கள்.. அவன் சூடும் அழகினிலே..
கூந்தலில் வாசனை மலர்கள்.. அவன் சூடும் அழகினிலே..

என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன.. பொன் மேனி சிலிர்ப்பதென்ன...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..

மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நானம் தடுப்பதென்ன....
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ..
மனசோலையின் காவியமே...
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்...
காதல் ஓவியம் கண்டேன்... கனவோ..நினைவோ.

ஞாயிறு, 19 ஜூன், 2011

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

படு வேகமான கர்னாடக இசையுடன் சுசீலா அம்மாவின் குரலும் இணைந்ததால் வரும் சுகமான பாடலிது.


திரைப் படம்: பஞ்ச வர்ணக் கிளி (1965)
இயக்கம்: K ஷங்கர்
தயாரிப்பு: சின்னதம்பி
நடிப்பு: ஜெய்சங்கர், K R விஜயா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
Play Music - Share Audio - Alagan muruganidam Panchavar...


சத்தியம் சிவம் சுந்தரம்...ஆ ஆ...

சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ ஆ ஆ ஆ

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

அன்னல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் .
அன்னல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ ஆ..

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே,
பழமுதிர்ச்சோலையிலே ஆ ஆ ஆ ஆ
பனி பெய்யும் மாலையிலே,
பழமுதிர்ச்சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே,
கன்னி மனம் கொய்துவிட்டான்
கனி கொய்யும் வேளையிலே,
கன்னி மனம் கொய்துவிட்டான்

பன்னிரெண்டு கண்ணழகை
பார்த்திருந்த பெண்ணழகை
பன்னிரெண்டு கண்ணழகை
பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல் தான் ஆள வந்தான்,
பெண்மையை வாழவைத்தான்
பெண்மையை வாழவைத்தான், ஆ ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலைமேல் இருப்பவனோ,
மயில் மேல் வருபவனோ
மலைமேல் இருப்பவனோ,
மயில் மேல் வருபவனோ
மெய்யுருக பாட வந்தால்,
தன்னைத்தான் தருபவனோ
மெய்யுருக பாட வந்தால்,
தன்னைத்தான் தருபவனோ
அலைமேல் துரும்பானேன்,
அனல் மேல் மெழுகானேன்
அலைமேல் துரும்பானேன்,
அனல் மேல் மெழுகானேன்

அய்யன் கை தொட்டவுடன்
அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன், ஆ ஆ ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

நான் யார் என்பதை நீ சொல்ல..நீ யார் என்பதை நான் சொல்ல

இனிமையான இசையில் மிகப் பிரமாதமாக இணைந்து பாடி இருக்கிறார்கள் P சுசீலாவும்  TMSஉம்


திரைப் படம்: துணைவன்
இசை: கே.வி.மகாதேவன்
நடிப்பு: சௌகார் ஜானகி, ஏ.வி.எம்.ராஜன்
Music podcasts - Listen Audio - Naan Yaar Enbathai - Thunaivan

நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
நடந்ததை எல்லாம் ஏன் சொல்ல
நடந்ததை எல்லாம் ஏன் சொல்ல
இனி நடக்கப் போவது அதுவல்ல

நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல

குளிரெடுக்கும் வேளையிலே கூட்டுக்குள்
ஓடி மறைந்து கொள்ள
குளிரெடுக்கும் வேளையிலே கூட்டுக்குள் ஓடி
மறைந்து கொள்ள
குணமும் நிறமும் மாறி விடக்
குங்குமம் கன்னத்தில் கோலமிட
குணமும் நிறமும் மாறி விடக் குங்குமம்
கன்னத்தில் கோலமிட

நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல

கேட்பதற்கு நானிருக்க
ம்கும்
கேட்டவுடன் அதை நீ கொடுக்க
ம்கும்
கேட்பதற்கு நானிருக்க
கேட்டவுடன் அதை நீ கொடுக்க
பார்ப்பதற்கும் தினம் ரசிப்பதற்கும்
ம்கும்
பார்ப்பதற்கும் தினம் ரசிப்பதற்கும்
பருவம் உருவம் நிறைந்திருக்க

நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல

வாசலிலே தோரணங்கள் வா வா
என்றே வரவு சொல்ல
வாசலிலே தோரணங்கள் வா வா
என்றே வரவு சொல்ல
காமன் அரண்மணை மண்டபத்தில்
கதவுகள் யாவும் திறந்து கொள்ள

நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல

சனி, 18 ஜூன், 2011

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..அந்த உண்மையை சொல்லாயோ..

இளமை ததும்பும் இளம் காதலர்களின் மொழியில் ஒரு அழகான பாடல்.
ஆண் குரலின் வேகமும் பெண் குரலின் மென்மையும் நன்று.

திரைப் படம்: பொன்னான வாழ்வு (1967)
இசை: K V மகாதேவன்
பாடும் குரல்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: தேவன்
தயாரிப்பு: V K ராமசாமி
நடிப்பு: ஜெயஷங்கர், K R விஜயாhttp://www.divshare.com/download/15019317-12a

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

சொல்லத்தான் வந்தேன்..ம்ம் ம்ம்..

அதை எப்படி சொல்லுவதோ...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

மலையருவி குன்றின் மீது மத்தளம் கொட்டுவதேன்...

நதியழகி வளைந்து நெளிந்து நடனம் ஆடவே...

மலையருவி குன்றின் மீது மத்தளம் கொட்டுவதேன்...

நதியழகி வளைந்து நெளிந்து நடனம் ஆடவே...

அலைகள் எழுந்து கரையின் மீது கைகளை தட்டுவதேன்...

அலைகள் எழுந்து கரையின் மீது கைகளை தட்டுவதேன்...

மலர்கள் மலர்ந்து கனிகள் குலுங்கி மனமும் மகிழவே...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன அந்த உண்மையை சொல்லாயோ...

பருவ அழகை மூடி மறைத்து வாட்டுவதேனோ...

பாவை எனது இளமை உணர்வை மீட்டுவதேனோ...

இதயம் தன்னை இழந்துவிட்டேன் உன்னிடம் நானே...

இந்த உலகை மறந்துவிட்டேன் என்னிடம் ஏது...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

தென்றல் தழுவ இதழ் விரிந்தது தேன் மலராக..

மணமன்றத்திலே காத்திருப்பேன் நான் உனக்காக...

ஹா ஹா,,

தென்றல் தழுவ இதழ் விரிந்தது தேன் மலராக..

மணமன்றத்திலே காத்திருப்பேன் நான் உனக்காக...

அருகினிலே வந்துவிடு நீ மெதுவாக....

அருகினிலே வந்துவிடு நீ மெதுவாக....

ஆசை வெட்கம் பார்ப்பதில்லையே பொதுவாக...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

சொல்லத்தான் வந்தேன்.. ம்ம் ம்ம்..

அதை எப்படி சொல்லுவதோ...

ல ல ல ல ல ல ல ல ல ல..

வெள்ளி, 17 ஜூன், 2011

நான் யார் யார் என்று சொல்லவில்லை..

சுசீலா அம்மாவின் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. பல வகை கலாச்சார இசைகளை கலந்து இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.


திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967)
இசை: கோவர்த்தன்
இயக்கம்: M V ராமன்
நடிப்பு: ஜெயஷங்கர், விஜயா
Upload Music - Audio Hosting - Naan Yaar Yaarendruநான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..

ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ...ஓ. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்..
காணாத அழகல்லவா..
காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்..
காணாத அழகல்லவா..

பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்..
பாராத முகமல்லவா..
காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்..
காணாத அழகல்லவா..

பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்..
பாராத முகமல்லவா..

நேராக பார்த்தாலே மயக்கம் வரும்.
தீராத பேராசை தீர்ந்து விடும்..
நேராக பார்த்தாலே மயக்கம் வரும்..
தீராத பேராசை தீர்ந்து விடும்..

ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ... ஓ.. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..

அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி..
ஆயிரம் போர்களிலே..
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்..
பிறந்தவன் நீயல்லவோ..
அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி..
ஆயிரம் போர்களிலே..
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்..
பிறந்தவன் நீயல்லவோ..

போராடி பாராமல் கிடைக்காது..
தானாக வந்தாலும் சுவைக்காது..
போராடி பாராமல் கிடைக்காது..
தானாக வந்தாலும் சுவைக்காது..

ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ...ஓ.. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ...

வியாழன், 16 ஜூன், 2011

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

லேசான சோகம் கலந்த நெஞ்சினை கிள்ளி விட்டு சென்ற பாடல்.

திரைப் படம்: புது கவிதை (1982)
இசை: இளையராஜா
குரல்: மலேஷியா வாசுதேவன்
நடிப்பு: ரஜினி, ஜோதி
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வைரமுத்துhttp://www.divshare.com/download/15106980-6d5வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ..
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ..
சோகம் போகும் உன் கண்கள் போதும்..
சின்ன பாதம் நடந்ததால்..
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது..ஹோ..

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே.

என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது..
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டு சென்றது.
பாவை பூவை காலங்கள் காக்கும்..
அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன்..
சிரித்து வாழ்த்துவேன் ஹோ..

வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..

புதன், 15 ஜூன், 2011

இதழில் கதை எழுதும் நேரம் இது...

அழகான கவிதையும் இசையும் குரல்களும் ஒன்றிணைந்தால் நல்ல சிறப்பான பாடல் அமையும் என்பதற்க்கு இந்த பாடல் நல்ல உதாரணம்.


திரைப் படம்: உன்னால் முடியும் தம்பி (1988)
குரல்கள்: S P B, சித்ரா
பாடல்: முத்துலிங்கம்
இசை: இளையராஜா
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: கமல், ஜெமினி, சீதா
http://www.divshare.com/download/15065178-892

இதழில் கதை எழுதும் நேரம் இது..
இதழில் கதை எழுதும் நேரம் இது..
இன்பங்கள் அழைக்குது ஆ.. ஆ ஆ..
..
மனதில் சுகம் மலரும்..
மாலை இது..
மான் விழி மயங்குது ஆ.. ஆ.. ஆ..
மனதில் சுகம் மலரும்..

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே..
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே..
இரு கரம் துடிக்குது..
தனிமையும் நெருங்கிட..
இனிமையும் பிறக்குது..

இதழில் கதை எழுதும் நேரம் இது..

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேச கண்டு..
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்..
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது..
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்..
இனிய பருவமுள்ள இளங்குயிலே..
இனிய பருவமுள்ள இளங்குயிலே..
ஏன் இன்னும் தாமதம் மன்மத காவியம்..
என்னுடன் எழுது..

நானும் எழுதிட இளமையும் துடிக்குது..
நானம் அதை வந்து இடையினில் துடிக்குது..
ஏங்கி தவிக்கையில் நானங்கள் எதுக்கடி..
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி..
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்..
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே..
காலம் என்றைக்கு கனிந்திடுமோ..
காளை மனம் அது வரை பொறுத்திடுமோ..
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்..
தேகம் இது விருந்துகள் படைத்திடும்..

இதழில் கதை எழுதும் நேரம் இது..
இன்பங்கள் அழைக்குது ஆ ஆ ஆ..
மனதில் சுகம் மலரும் ..
மாலை இது..

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்..
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே..
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம்..
தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா..
அழகை சுமந்து வரும் அழகரசி..
அழகை சுமந்து வரும் அழகரசி..

ஆனந்த பூ முகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ..
நாளும் நிலவது தேயுது மறையுது..
நங்கை முகம் என யார் அதை சொன்னது..
மங்கை உன் பதில் மனதினை கவருது..
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது..
காமன் கணைகளை தடுத்திடவே..
காதல் மயில் துணையென வருகிறது..
மையல் தந்திடும் வார்த்தைகளே..
மோகம் என்னும் நெருப்பினை பொழிகிறது..
மோகம் நெருப்பான அதை தீர்க்கும் ஒரு..
ஜீவ நதி அருகினில் இருக்குது..

மனதில் சுகம் மலரும்..
மாலை இது..
மான் விழி மயங்குது ஆ.. ஆ.. ஆ..
இதழில் கதை எழுதும் நேரம் இது..
இன்பங்கள் அழைக்குது ஆ.. ஆ.. ஆ..
இதழில் கதை எழுதும் நேரம் இது..

திங்கள், 13 ஜூன், 2011

சம்சாரம் அது மின் சாரம்..

மனைவியின் அருமை பெருமைகளை பற்றிய ஒரு பாடல். சங்கர் கணேஷ் அருமையாக இசையமைத்து பாடலை S P B அழகு குறையாமல் புரிந்து பாடியிருக்கிறார்.

திரைப் படம்: சம்சாரம் ஒரு மின் சாரம் (1986)

நடிப்பு: ரகுவரன், லக்ஷ்மி
இயக்கம்: விசு
http://www.divshare.com/download/14569585-3d2

சம்சாரம் அது மின் சாரம்..
சம்சாரம் அது மின் சாரம்..
அன்புக் கொள்ள யாரும் இல்லே..
எந்த நெஞ்சும் ஈரமில்லே சம்சாரம்..
பந்தமில்லை பாசமில்லை..
சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம்..
நேரம் வந்து நெருங்கித் தொட்டா ஷாக் அடிக்கிற மின் சாரம்..
சம்சாரம் அது மின் சாரம்..
சம்சாரம் அது மின் சாரம்..

அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத் தானடி..
பாராங்கல்லை பெத்துபுட்டா பாசம் ஏனடி..
பெத்தப் பிள்ளை தந்த பணம் உப்புக்கு ஆகுமா..
தாய்பாலுக்கு கணக்கு கேட்டா தாலி மிஞ்சுமா..
வாயக் கட்டி வளத்த புள்ளே..
மல்லுக் கட்டி நிக்குதடி..
வாங்கித் தந்த காசுக்கெல்லாம் வட்டிக் கட்ட சொல்லுதடி..
கோடு ஒன்னு கிழிக்க வசி கும்மி அடிக்குது அம்மாடி..

சம்சாரம் அது மின் சாரம்..
சம்சாரம் அது மின் சாரம்..
அன்புக் கொள்ள யாரும் இல்லே..
எந்த நெஞ்சும் ஈரமில்லே சம்சாரம்..
பந்தமில்லை பாசமில்லை..
சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம்..
நேரம் வந்து நெருங்கித் தொட்டா ஷாக் அடிக்கிற மின் சாரம்..
சம்சாரம் அது மின் சாரம்..
சம்சாரம் அது மின் சாரம்..

சனி, 11 ஜூன், 2011

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..

இன்றும் இளமை மாறாப் பாடல். இசையும் குரலும் பாடல் வரிகளும் அற்புதம்.


திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: P B ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, சிவாஜி, சாவித்திரி, தேவிகா
இயக்கம்: பீம்சிங்http://www.divshare.com/download/15065115-955

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..

பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
ஒ..ஒ..ஒ..ஒ..
பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
கனிகளிலே அவள் மாங்கனி.. கனிகளிலே அவள் மாங்கனி..
காற்றினிலே அவள் தென்றல்..

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..

பால்போல் சிரிப்பதில் பிள்ளை.. அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி..
பால்போல் சிரிப்பதில் பிள்ளை.. அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி..

கண்போல் வளர்ப்பதில் அன்னை.. கண்போல் வளர்ப்பதில் அன்னை..
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை..

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..

வியாழன், 9 ஜூன், 2011

பாடலுக்கு பெண் அழகு..கலை ஆடலுக்கு பொன் அழகு..

ஆரம்பகால தனது இனிமையான குரலில் S ஜானகி அம்மாவின் இன்னுமொரு பாடல். K V மகாதேவனின் அருமையான இசையமைப்பு மனதை சுண்டியிழுக்கிறது.


திரைப் படம்: தேடி வந்த திருமகள் (1966)
இயக்கம்: சதயம்
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
 
 


http://www.divshare.com/download/15056812-535

பாடலுக்கு பெண் அழகு..

கலை ஆடலுக்கு பொன் அழகு..
அதை பாராமல் என்னென்ன நினைவு..
பாடலுக்கு பெண் அழகு..
கலை ஆடலுக்கு பொன் அழகு..
அதை பாராமல் என்னென்ன நினைவு..
அதை பாராமல் என்னென்ன நினைவு..

பார்வை ஊஞ்சல் ஆடும்..
அன்பு வண்ணம் தூது போகும்..
பார்வை ஊஞ்சல் ஆடும்..
அன்பு வண்ணம் தூது போகும்..

காளை நெஞ்சம் வாடும்..
அந்த கானம் காண வேண்டும்..
காளை நெஞ்சம் வாடும்..
அந்த கானம் காண வேண்டும்..
பாடலுக்கு பெண் அழகு..
கலை ஆடலுக்கு பொன் அழகு..
அதை பாராமல் என்னென்ன நினைவு..
அதை பாராமல் என்னென்ன நினைவு..

வாழ்வில் ஒன்று சேரும்..
இன்ப நாளை எண்ணும் போது..
வாழ்வில் ஒன்று சேரும்..
இன்ப நாளை எண்ணும் போது..
காலம் கூடும் போது..
காணும் இன்பம் கோடி கோடி..
காலம் கூடும் போது..
காணும் இன்பம் கோடி கோடி..

பாடலுக்கு பெண் அழகு..
கலை ஆடலுக்கு பொன் அழகு..
அதை பாராமல் என்னென்ன நினைவு..
அதை பாராமல் என்னென்ன நினைவு..

புதன், 8 ஜூன், 2011

என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

ஜானகி அம்மாவின் இனிமையான குரலில் ஒரு வித்தியாசமான தாலாட்டு பாடல். அபூர்வமான பாடலும் கூட.. பெற்ற மகனை தவற விட்ட ஒரு தாய் பாடுவது போலுள்ளது.


திரைப் படம்: கல்யாண மண்டபம்

பாடும் குரல் : S ஜானகி

இசை: M R பார்த்தசாரதி

நடிப்பு: C L ஆனந்தன், K R விஜயா

இயக்கம்: மல்லியம் ராஜகோபால்
http://www.divshare.com/download/15048931-53a
என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு..

என் பகலை மொழி புரிகிறதா உனக்கு..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..முன்பு நான் தவமிருந்தேன் முன்னூறு நாள் சுமந்தேன்..

பின்பு உன்னை நான் அடைதேன் நான் அடைந்தேன்..

அன்பு மகன் ஓரிடத்தில் அன்னை மட்டும் வேறிடத்தில்..

கோடி துண்பம் நான் அடைந்தேன் ஏன் அடைந்தேன்..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு..

என் பகலை மொழி புரிகிறதா உனக்கு..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..தங்கத்தால் கோவில் கட்டி வண்ணத்தால் வாச்ல் வைத்தே..

தெய்வத்தை நான் அடைந்தேன் நான் அடைந்தேன்..

கோவில் மட்டும் ஓரிடத்தில்..

தெய்வம் மட்டும் வேறிடத்தில்..

கோடி துண்பம் நான் அடைந்தேன் ஏன் அடைந்தேன்..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு..

என் பகலை மொழி புரிகிறதா உனக்கு..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..

ஆராரோ ஆராரோ..செவ்வாய், 7 ஜூன், 2011

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது

சற்று வேகமான பாடல். இனிமையான இசையில் அழகான குரல்களில்.


திரைப் படம்: மழை மேகம் (1977)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: முத்துராமன், சாரதா
இயக்கம்:A S பிரகாசம்
http://www.divshare.com/download/14998365-87d

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது

ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது

உள்ளம் ரெண்டும் ஆடட்டும் ஒன்றில் ஒன்று கூடட்டும்..

ஆ....ஹாஹா... ஹாஹா..ஆ ஆ .ஹே ...ஹே... ..ல.ல...ல..ல..ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது

ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது

உள்ளம் ரெண்டும் ஆடட்டும் ஒன்றில் ஒன்று கூடட்டும்..

ஆ....ஹாஹா... ஹாஹா..ஆ ஆ .ஹே ...ஹே... ..ல.ல...ல..ல..மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து

மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து

மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து

மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்துவானத்து மீண்களில் மல்லிகை தெளித்து

மன்மத மந்திரம் மயங்கிட படித்து

வானத்து மீண்களில் மல்லிகை தெளித்து

மன்மத மந்திரம் மயங்கிட படித்துபாடம் சொல்ல கூடாதோபார்வை ஒன்று போதாதோஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது

ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னதுஎண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு

என்னை உன் இடை எனும் சிறையினில் பூட்டு

எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு

என்னை உன் இடை எனும் சிறையினில் பூட்டுமங்கள இசை தரும் வீணையை மீட்டு

மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு

மங்கள இசை தரும் வீணையை மீட்டு

மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டுமாலை தென்றல் தீயாககாணும் இன்பம் நீராக

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்ததுஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னதுஉள்ளம் ரெண்டும் ஆடட்டும்ஒன்றில் ஒன்று கூடட்டும்..ஆ....ஹாஹா... ஹாஹா..ஆ ஆ .ஹே ...ஹே... ..ல.ல...ல..ல..

திங்கள், 6 ஜூன், 2011

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்..

நல்ல இனிமையான பாடல். சிறப்பான இசையமைப்புடன் வளமான குரல்கள்.


திரைப் படம்: நெற்றிக்கண் (1981)
குரல்கள்: ஜானகி, K J யேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு: மோனிகா, ரஜினிகாந்த்http://www.divshare.com/download/15021677-8c7

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்..
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்..
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்..
தெய்வீகமே உறவு..

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்..

இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஓ ஓ ஓ..
இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது..
இளவேனிற் காலம் வசந்தம்..
ஒரு கோவில் மணியின் ராகம்
ல ல ல ல..
ஒரு கோவில் மணியின் ராகம்..
ஒரு வானில் தவழும் மேகம்..
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே..
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்..
தெய்வீகமே உறவு.. ஹோ ஹோ..
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்..

இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும்..
ஹொ ஹோ ஹோ..
எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்தத் திறனும் இல்லை..
இலை மூடும் வாழைப் பருவம்..
மடிமீது கோயில் கொண்டு..
ல ல ல...
மடிமீது கோயில் கொண்டு..
மழைக்காலம் வெயில் கண்டு..
சிலையாக நான் நிற்பதே அற்புதம்..
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்..
தெய்வீகமே உறவு..

ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்..
தெய்வீகமே உறவு..
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்..
ல ல ல ல ல ல..

சனி, 4 ஜூன், 2011

வண்ணம் கொண்ட வெண்ணிலவே..வானம் விட்டு வாராயோ


மறைந்த அன்பு காதலிக்காக காதலன் பாடுவதாக அமைந்த பாடல். மென்மையான இசையும் அளந்து பாடி இருக்கும் குரலும் அற்புதம்.
 
திரைப் படம்: சிகரம் (1991)

இசை: SPB
இயக்கம்: அனந்து
பாடும் குரல்: SPB
நடிப்பு: SPB, ரேகா, ராதா
பாடல்: வைர முத்து

மறைந்த அன்பு காதலிக்காக காதலன் பாடுவதாக அமைந்த பாடல். மென்மையான இசையும் அளந்து பாடி இருக்கும் குரலும் அற்புதம்.


http://www.divshare.com/download/15006950-ef6வண்ணம் கொண்ட வெண்ணிலவே


வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை

உன்னை தொட ஏணி இல்லை

விண்ணிலே பாதை இல்லை

உன்னை தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவேபக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரம் இல்லை

சொந்தத்தில் பாஷை இல்லை

சுவாசிக்க ஆசை இல்லை

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரம் இல்லை

சொந்தத்தில் பாஷை இல்லை

சுவாசிக்க ஆசை இல்லைகண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞாயமில்லை

நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;

தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்

நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்

நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்;

ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன்தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை

உன்னை தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வியாழன், 2 ஜூன், 2011

வைகைகரை காற்றே நில்லு..

வசன நடையும் கவிதை நடையும் கொண்ட புதிய பாணி திரைப் பாடலாக அமைந்துவிட்ட இந்த பாடல் திரு ஜேசுதாஸ் குரலில் மனதை கிள்ளுகிறது.


திரைப் படம்: உயிருள்ளவரை உஷா (1983)
பாடல்: இயக்கம்: தயாரிப்பு: இசை: நடிப்பு: ராஜேந்தர்http://www.divshare.com/download/14949661-57f

வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கைதனை தேடுதென்று..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கைதனை தேடுதென்று..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

திருகோவில் வாசலது.. திறக்கவில்லை..
தெருக்கோடி பூஜை அது.. நடக்கவில்லை..
தேவதையை காண்பதற்க்கு.. வழியுமில்லை..
தேன்மொழியை கேட்பதற்க்கு.. வகையுமில்லை..
காதலில் வாழ்ந்த.. கன்னி மனம்..
காவலின் வாடையில்.. கன்னி விடும்..
கூண்டுகுள்ளே அலை மோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
கூண்டுகுள்ளே அலை மோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
காதல் கிளி அவள் பாவம்..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

மாக்கோலம் போடுதற்க்கு வரவில்லையே..
அவள் கோலம் பார்ப்பதற்க்கு வழியில்லையே...
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே..
ஜாடை ஒலி சிந்த அவள். இன்று இல்லையே..
நிலவினை மேகம்.. வானில் மறைக்க..
அவளினை யாரோ.. வீட்டில் தடுக்க..
மேகமது விலகாதோ..
சோகமது நீங்காதோ..
மேகமது விலகாதோ..
சோகமது நீங்காதோ..
சோகமது நீங்காதோ..
காற்றே.. பூங்காற்றே
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
வைகைகரை காற்றே நில்லு..
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கைதனை தேடுதென்று..
காற்றே.. பூங்காற்றே..
என் கண்மணி அவளை.. கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு


யாரோ நீ யாரோ.. பேரழகு என்பதுன் பேரோ..

ஆரம்ப காலத்தின் இளமையான குரல்களில் T M Sஉம் P சுசீலாவும் பாடிய ஒரு இனிமை பாடல்.

திரைப் படம்: பிரசிடெண்ட் பஞ்சாசரம் (1959)
இசை: G ராமனாதன்
நடிப்பு: S S R, சரோஜா தேவி
இயக்கம்: A பீம்சிங்கு
பாடல்: கண்ணதாசன்http://www.divshare.com/download/14200691-05a

யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..
செவ்வானும் தேனும் சிறு மீனும் மானும்..
வடிவாகிய பெண்ணோ..
யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..

மானோ செந்தேனோ..
அம் மங்கை ஒவியம் தானோ..
செவ்வாழை போலும் கனி பாவை இங்கே..
வந்ததுவும் வீணோ..
மானோ செந்தேனோ..
அம் மங்கை ஒவியம் தானோ..

மரத்து கொம்பிலே பழுத்த மாங்கனி..
மடியில் வீழ்ந்ததோ இங்கே..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..
மரத்து கொம்பிலே பழுத்த மாங்கனி..
மடியில் வீழ்ந்ததோ இங்கே..
ஒரு வார்த்தை சொன்னவள் எங்கே..
பொன் வண்ண கோவையே அன்ன பாவையே..
மறைந்து நிற்பதேன் அங்கே..
வெளி வந்து காணுவாய் இங்கே..
யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..

மாலை சூடவும் மகிழ்ந்து ஆடவும்..
மங்கை நேரிலே வந்தாள்..
ஆ ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ..
மாலை சூடவும் மகிழ்ந்து ஆடவும்..
மங்கை நேரிலே வந்தாள்..
ஒரு வார்த்தை சொன்னதும் தந்தாள்..
எழில் வண்ண ஓவியம் மங்கை நாதனை..
வாங்கிக் கொண்டதை கண்டாள்..
தான் வந்த பாதையில் சென்றாள்..
மானோ செந்தேனோ..
அம் மங்கை ஒவியம் தானோ..

பேசும் பாவையும் காதல் மீறி நான்..
பெண்மை கொண்டவன் ஆனேன்..
பேராசையாலே அலை மோதும் நெஞ்சில் நான்..
ஆண்மைக் கொண்ட பெண் ஆனேன்..
ஒருவர் மாறினால் உலகம் யாவையும்..
துன்பமாகவே தோன்றும்..

நாம் இருவர் மாறினோம் மனமும் நாடினோம்..
இனியும் வேறெது வேண்டும்..
யாரோ நீ யாரோ..
பேரழகு என்பதுன் பேரோ..

புதன், 1 ஜூன், 2011

கண்களின் வெண்ணிலவே-உல்லாச காதல் தரும் மதுவே

அழகான பாடல். பாடல் முழுவதும் ஆண் குரல் உச்சஸ்தாயிலும் பெண் குரல் மத்தியஸ்தாயிலும் பாடியிருகிறார்கள். இறுதியில் இருவரும் இணைந்து பாடலை முடித்திருக்கும் விதம் அருமையாக இசையமைத்து இருக்கிறார் G R.


திரைப் படம்: மணிமேகலை (1959)
இசை: G ராமனாதன்
இயக்கம்: V S ராகவன்
பாடும் குரல்கள்: நடிப்பு: T R மகாலிங்கம், பானுமதி
 

 
http://www.divshare.com/download/14955944-717
 
கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

இளமையின் தேன் அலையே
விண் மீது ஒளி தரும் தாரகையே
மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

இளமையின் தேன் அலையே
விண் மீது ஒளி தரும் தாரகையே
மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

வெண் மலர் மேல் பனியே
அன்பாக சொல்வது நம் கதையே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
வெண் மலர் மேல் பனியே
அன்பாக சொல்வது நம் கதையே
பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

காவிரி ஆழ் கடல் போல்
கண் காணா காற்றொடு மென் குளிர் போல்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
காவிரி ஆழ் கடல் போல்
கண் காணா காற்றொடு மென் குளிர் போல்
ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

என்னுயிர் மாமணியே இப்பாரில்
யாருமில்லை தனியே மெய்க் காதல்
கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

இன் செயும் கார் முகிலே
ஒன்றாக கொஞ்சுதல் உன் எழிலே
தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்