பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

தங்கத் தேரோடும் அழகினிலே

இனிமையான பாடல்
பாடலின் படக் காட்சி கொஞ்சமில்லை...ரொம்பவே சுமார்தான்.

திரைப்படம்: ரகுபதி ராகவ ராஜாராம் (1977)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடலாசிரியர்: வாலி
நடிகர்: ரஜினிகாந்த், சுமித்ரா 
இசை: சங்கர் கனேஷ்
இயக்கம்: துரை தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான் 
ஆஆஆஆ
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
  ஆஆஆஆ
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் . ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோககினாள்
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்  . பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள் . தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்  . தாகங்களில் வரும் ராகங்களில் 
முகம் செந்தூர கடலாடினாள்
தாகங்களில் வரும் ராகங்களில் 

முகம் செந்தூர கடலாடினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள் 
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள் 
. தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் 
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்  
ஆஆஆஆ
தங்கத் தேரோடும் அழகினிலே

இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் 
இந்த ராஜாவும் தவமிருந்தான்

ஞாயிறு, 19 ஜூலை, 2015

என்ன சொல்லி நான் எழுத...enna solli naan ezhutha...


ராணி தேனி திரைப்படம் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் 1982 இல் வெளிவந்திருந்தது. பாடகர் தீபன் சக்ரவர்த்தியை நாயகனாக்கி விஷப்பரீட்சை செய்திருந்த அந்தப்படத்தில் நாயகியாக மகாலஷ்மி நடித்திருப்பார். முன்னர் கல்யாணராமன் என்ற மெகா மசாலா வெற்றியைக் கொடுத்த இயக்குனர் என்ற நன்றிக்கடனுக்காக வை.ஜி.மகேந்திரனுடன் ஒரு துணை நடிகர் லெவலுக்கு கமலஹாசன் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதே நன்றிக்கடனை ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கமல் செய்து கொ(கெ)டுத்தவர்.

"என்ன சொல்லி நான் எழுத, என் மன்னவனின் மனம் குளிர" என்ற அருமையான பாடல் இந்த ராணி தேனி திரைப்படத்தில் இசையரசி பி.சுசீலாவின் குரலில் என்றுமே கேட்பதற்கு இனியதொரு பாடலாக இருக்கின்றது. 
நன்றி:isaiarasi.blogspot.com

படம் : ராணித்தேனீ
இசை : இளையராஜா
பாடியவர் : பி. சுசீலா


என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும் 
வெட்கம் விடுமோ ஹோய்

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

அறியாதவள் நான் தெரியாதவள்
உன் அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே
அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்ல
எப்படி எழுத
ம் ம் ம் ஹூம் ஹூம்
மஹாராஜ ராஜஸ்ரீ

காற்றாகப் போனாலும் 
அவர் கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும் 
அவர் கன்னங்களை நான் தொடுவேன்
பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா
கண்ணா கண்ணா

என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர

இதயம் துடிக்குது என் செவிக்கே 
கேட்குதம்மா  கேட்குதம்மா
வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா குளறுதம்மா
என்ன செய்ய
என்ன செய்ய
ம் ம் ம் ஹூம் ஹூம்

காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணா
கண்ணா கண்ணா
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர


செவ்வாய், 14 ஜூலை, 2015

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்...amara jeevitham..


தமிழ் மக்களின் அஞ்சலி... MSV அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

ஸ்ரீ கிருஷ்ண கானம்.
பாடியவர், இசை : M S விஸ்வனாதன்
பாடல் வரிகள் எழுதியவர்: கண்ணதாசன்


ஓம் ஓம் ஓம் ஓம்

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 


பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 


ஓம் ஓம்


அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 


ஓம் ஓம்

முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 


ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்


ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்!


நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம் 


நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் 

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம் 


கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்


ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்


அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 


ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்


சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம் 


சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம் 


ராக பந்தனம் சுவாமி ராச லீலகம் 


கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்


ஓம் ஓம் ஓம் ஓம்


ஓம் ஹரி ஓம் 


அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 


ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

வெள்ளி, 10 ஜூலை, 2015

ஹேய் ஹேய் ஓராயிரம்... hey hey orayiram...

கூகு குக்குக்கு கூகு குக்குக்கு
கிகிகிகி கேகே லிலிலி லேலேலே
என்றெல்லாம் பாடலில் பாதி இடத்தை இது போன்ற வரிகள் ஆக்ரமிக்க ஆரம்பித்த காலம் இளையராஜா காலம்தான். அதற்கு முன் வெகு அபூர்வமாகவே இது போன்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். சுவாராசிமில்லாத பல குட்டி பாடலாசிரியர்களை காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் அனுமதித்தார் இளையராஜா எனலாம். அதுவே வழக்கம் போல பின்னர் நமது திரைபாடல் பாடல் இசை கலாச்சாரம் ஆகிப் போனது.
இவைகளை தள்ளிவிட்டு பார்த்தால் பல பாடல்கள் இளையராஜாவின் இசையாலும், SPB அவர்களின் குரலாலும் நடிகர்களின் திறமையினாலும் சாகாவரம் பெற்றுவிடுகின்றன. அந்த வகையில்தான் இந்தப் பாடலும்..

திரைப்படம் - மீண்டும் கோகிலா (1981)
பாடியவர்கள் - S P B
இசை - இளையராஜா
இயக்கம்: G N ரங்கராஜன்
நடிப்பு: கமல், ஸ்ரீதேவி
பாடல்: பஞ்சு அருணாசலம்
கூகு குக்குக்கு கூகு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு
குக்குக்கு குக்குக்கு குக்குக்கு

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண
கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண

விடிகாலையின் பூந்தென்றலில் நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன் 
புதுமையே இயற்கையை ரசிக்காதோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனாதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனாதே வாழ்வில்

இளஞ் ஜோடியின் விழி ஜாடையில் 
பேராசைகள் ஒரு கோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன் 
இளமையே இனிமையை ரசிக்காதோ 
ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

ஹேய் ஹேய் லாலாலா

சனி, 4 ஜூலை, 2015

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு..veyirkerra nizhalundu...

Kalvanin Kadhali had tuneful music (composers Gantasala-Govindarajulu Naidu, lyrics S. D. Sundaram, Mahakavi Bharathiar, Desiga Vinayagam Pillai) with one song ‘Veyilukketha nizhal wundu…’(Ghantasala-Bhanumathi) becoming popular.
V. S. Raghavan produced and directed the film in his own studio in Kodambakkam called Revathi. Later it was acquired by B. Nagi Reddi who made it part of his vast building complex housing Vijaya-Vauhini Studios, Chandamama Publications and all. Regretfully, Kalki did not live to see his dream come true.

நன்றி: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kalvanin-kadhali-1954/article3023585.ece

கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி ) அவர்களின் கதை படமாகப் பட்டது.

இரு குரலாகவும், கண்டசால தனியாகவும் பாடிய இரு பாடல்கள் இணைத்துள்ளேன் 

திரைப்படம்: கள்வனின் காதலி (1955)
பாடியவர்கள் : கண்டசாலா, P. பானுமதி
இயற்றியவர்: எஸ். டி. சுந்தரம்
இயக்கம்: V S ராகவன்.

நடிப்பு: சிவாஜி, P பானுமதி 


வெய்யிற்கேற்ற நிழலுண்டு 

வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு 

வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு


கையில் கம்பன் கவியுண்டு 

கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறை அமுதுண்டு 

கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு 

வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு 

தெய்வ கீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு 

தெரிந்து பாட நீயுண்டு 

பாட நீயுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு 

வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வையந்தரும் இவ்வனமன்றி 

வையந்தரும் இவ்வனமன்றி

வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ 

வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ

ஸ்வர்க்கம் வேறுண்டோ

வெய்யிற்கேற்ற நிழலுண்டு 

வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு