பின்பற்றுபவர்கள்

திங்கள், 31 மார்ச், 2014

இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா

கேட்டிராத பாடல். 1995 தான் வந்திருக்கிறது. படம் வெளியாகவில்லை போலிருக்கிறது. படத்தினை பற்றிய மற்ற விபரங்கள் தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் இனிமைதான்.


திரைப்படம்: சந்நதிப்பூக்கள் (1995) 

பாடியவர்கள்: எஸ் பி பி, சித்ரா 
இசை :விஜய் ஆனந்த்http://asoktamil.opendrive.com/files/Nl8zMTY4OTgzOV9HaU1uOV9jNzhl/Ithu%20Thaan%20Ithu%20Thaan%20Sparisam%20Enbatha.mp3செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில் 
தென்றலும் தீண்டியதே 
தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில் 
சிந்தனை மாறியதே 
சிந்தனை மாறிய வேளையில் மன்மதன் 
அம்புகள் பாய்ந்தனவே 
மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர் 
வாழிய வாழியவே 

இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா

இளமை எழுதும் சரஸம் என்பதா

இது கனவா நிஜம்தானா
வந்து சொல்வாய் மன்மதா

உயிர் கரையும் ஒலி கேட்கும் 
இதை காதல் என்பதா

மின்னல் ஒன்று என்னை தீண்டவும்  
மேனி எங்கும் பூக்கள் பூக்கும்
இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா

இளமை எழுதும் சரஸம் என்பதா

ஆசைக்கனி தொடவா விடவா 
அடி மனதில் போராட்டம்

ஆடை என்ன உறவா பகையா 
பட்டி மன்றம் அரங்கேற்றமே

உள்ளிருந்த காதல் மெல்ல 
கண் திறந்து பார்க்குமே

விதையாய் இருந்தால் 
ஸ்பரிஸம் நீர் வார்க்குமே 
ஹோய்
இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா

இளமை எழுதும் சரஸம் என்பதா

கன்னம் தொட்டு இறங்கும் விரலோ 
கழுத்தில் வந்து ஏன் நின்றது

கழுத்தில் உள்ள வேர்வைதானே 
காதலுக்கு தேன் என்றது

இன்னும் கொஞ்சம் போங்கள் என்று 
இயற்கை நம்மை கேட்டது

இதயம் தவிக்க பருவம் 
பால் வார்த்தது 
ஹோய்

இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா

இளமை எழுதும் சரஸம் என்பதா

இது கனவா நிஜம்தானா
வந்து சொல்வாய் மன்மதா

உயிர் கரையும் ஒலி கேட்கும் 
இதை காதல் என்பதா

மின்னல் ஒன்று என்னை தீண்டவும்  
மேனி எங்கும் பூக்கள் பூக்கும்

இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா
ம் ம் ம் ம் ம் ம் ம் 
இளமை எழுதும் சரஸம் என்பதா
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் 

சனி, 29 மார்ச், 2014

சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா


 சீர்காழியின் இளமை குரலில், அழகாக வடிவமைக்கப் பட்ட பாடல். மிக அமைதியாகவும் பண்பான முறையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
சீர்காழியின் தமிழ் உச்சரிப்பை நாம் கவனிக்க வேண்டும்.
பாடல் கவிதை வரிகளும் தெளிந்த நீரோடை போல தங்கு தடையின்றி ஓடுவது போலிருக்கிறது.

சோகமான படம் என்பதாக எனக்கு ஞாபகம். ரொம்பவும் ஏழ்மையான ஒரு குமாஸ்தா தன்  மகள்களை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறாரென்பது கதை.
கன்னட நடிகை ஆர்த்தி அறிமுகமான தமிழ் படம்.

திரைப் படம் : குமாஸ்தாவின் மகள் (1974)
இயக்கம்: A P நாகராஜன்
இசை: V குமார்
நடிப்பு: சிவகுமார், ஆர்த்தி
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
மறற விபரங்கள் தெரியவில்லை.http://asoktamil.opendrive.com/files/Nl8zNTI1MTMzN19CczdPUl9hNWI1/Sirikiraley_Kanni_Muthamma_Song.mp3
சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா
என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

ஆற்றங்கரையினிலே
கன்னி முத்தம்மா
ஆற்றங்கரையினிலே
கன்னி முத்தம்மா
காற்றாக நடை நடந்தாள்
கன்னி முத்தம்மா
தென்றல் காற்றாக
நடை நடந்தாள்
கன்னி முத்தம்மா

பச்சைக் கிளியாக
கானம் பாடும் குயிலாக
பச்சைக் கிளியாக
கானம் பாடும் குயிலாக
பக்கம் நின்று கொஞ்சுகின்றாள்
கன்னி முத்தம்மா
வந்து பக்கம் நின்று கொஞ்சுகின்றாள்
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
மண்ணென்னும் தொட்டில் கட்டி
கன்னி முத்தம்மா
அன்பு மகனாக ஆசை வைத்தாள்
கன்னி முத்தம்மா
மண்ணென்னும் தொட்டில் கட்டி
கன்னி முத்தம்மா
அன்பு மகனாக ஆசை வைத்தாள்
கன்னி முத்தம்மா

விண்ணென்னும் வெளியினிலே
கன்னி முத்தம்மா
விண்ணென்னும் வெளியினிலே
கன்னி முத்தம்மா
விளையாட்டு காட்டுகின்றாள்
கன்னி முத்தம்மா
புது விளையாட்டு காட்டுகின்றாள்
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா ஆ ஆ ஆ

வியாழன், 27 மார்ச், 2014

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க

அபூர்வமான பாடல். இனிமையாக பாடப்பட்டுள்ளது. புதிய இசையமைப்பாளரா? நன்றாக உள்ளது.

திரைப் படம்: புதிய தென்றல் (1993)
பாடியவர்கள் : எஸ்.பி.பி, கே.எஸ்.சித்ரா
நடிப்பு: ரமேஷ் அரவிந்த், சிவரஞ்சனி
இசை: ரவி தேவேந்தரன்
இயக்கம்: பிரபாகர்
http://asoktamil.opendrive.com/files/Nl8zNDgyNTc5N19OTXFwZl8wZDBm/Thendralile%20Mithanthu.mp3

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க
நீ மண்ணில் வந்த அந்த நேரங்கள் வாழ்க
நீ என்னை கண்ட அந்த காலங்கள் வாழ்க
உந்தன் பூம்பாதம் போகின்ற பொன் வீதி வாழ்க

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க

நட்சத்திர மண்டலத்தில் நமக்கு ஒரு மண்டபமா
உன் பெயரை எழுதி வைக்கிறேன்
உன் அழகை தொழுது வைக்கிறேன்

நட்சத்திர மண்டலமா நமக்கு அது தேவையில்லை
மண்ணுலகில் எழுதி வைக்கிறேன்
மடியில் விருந்து வைக்கிறேன்

இலையிட்ட விருந்திலே அறு சுவைதான்

இள்மையின் விருந்திலே நூறு சுவைதான்

இது காமன் பாதி காதல் பாதி
கவிஞன் நமக்கு சொன்னது தான்

தென்றலுக்கு மேடை தந்த தேவ ராஜன் வாழ்க
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்ன கன்னன் வாழ்க

பறவைகள் பறந்து செல்ல பன்னம் ஏதும் வானில் இல்லை
நீயும் அந்த பறவை ஜாதியே
நிம்மதிக்கு தடைகள் இல்லையே

சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்
சொல்லை விட்டு பிரிவதில்லை
சோகம் இனி வருவதில்லையே
சூரியனில் இரவு இல்லையே

கன்னியருக்கு பெயரிலே கவியரங்கம்

காதல் பற்றி பாடினால் தமிழ் வணங்கும்

அந்த காமன் சோலை எங்கும்
நாளை காதல் ரதங்கள் சுற்றி வரும்

தென்றலுக்கு மேடை தந்த தேவ ராஜன் வாழ்க
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்ன கன்னன் வாழ்க
பூவோடு வந்த இந்த பொன் மாறன் வாழ்க
நீ வாழும் மண்ணில் அதை நான் கொண்டு வாழ்க
நம் பொன் வீதி போகின்ற பூத்தென்றல் வாழ்க

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க

செவ்வாய், 25 மார்ச், 2014

நான் எண்ணும்பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம்


இது மறைந்த இயக்குனர் பாலு மகேந்தரா அவர்களுக்கு சமர்ப்பணம்.
இந்தியில் ஆனந்த் என்ற படத்தில் சலீல் சௌத்ரி இசையமைத்த பாடலை அப்படியே தமிழில் எஸ் பி பி, கங்கை அமரன் உதவியுடன் மிகப் பிரமாதமாக வழங்கியிருக்கிறார். எவ்வளவு முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல். எஸ் பி பி நம்மை கனவு உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார்.
ஒரிஜினல் ஹிந்தி பாடலையும் கீழே வழங்கியிருக்கிறேன்.
ரசித்துப் பாருங்கள்.

திரைப் படம்: அழியாத கோலங்கள் (1979)
பாடியவர்: S P பாலசுப்ரமணியம்
இசை: சலில் சௌத்ரி
பாடல்: கங்கை ஆமரன்
இயக்கம்: பாலு மகேந்தரா
நடிப்பு: ஷோபா, ப்ரதாப்போத்தன்


http://asoktamil.opendrive.com/files/Nl8zNDk2NTU3M19HQlk2bl8zYjdj/Naan%20Ennum%20Pozhuthu.mp3
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது

நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை
நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை

அந்த நாள்
அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே

நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது
நான் எண்ணும்பொழுது

 ஆ ஆ நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்க்கின்றது
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் என்னை சேர்க்கின்றது
நெஞ்சிலே

ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
அங்கு வந்த காற்றினிலே
தென்னை இளங்கீற்றினிலே
ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
அங்கு வந்த காற்றினிலே
தென்னை இளங்கீற்றினிலே

அம்மம்மா
அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்

நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது

ஞாயிறு, 23 மார்ச், 2014

சந்திப்போமா இனி சந்திப்போமா

இனிமையான பாடல். அடாவடியானப் பாடல்களுக்கு மட்டுமின்றி மென்மையான குரலுக்கும் சொந்தக் காரர்
 L R ஈஸ்வரி அம்மா அவர்கள். அவர் பி பி எஸுடன் இணையும் இந்தப் பாடல் அருமை.
ஆனால் சந்தோஷமான பாடலுக்கும் சோகமான பாடலுக்கும் அவ்வளவாக வித்தியாசம் தெரியவில்லை.


திரைப்படம்: சித்தி (1966)
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், L R ஈஸ்வரி
நடிப்பு: முத்துராமன், பத்மினி

http://asoktamil.opendrive.com/files/Nl8zNDY5NDEwM19Tb0U5MV81MjEy/Santhipoma%20(H).mp3http://asoktamil.opendrive.com/files/Nl8zNDk2MzkyMl9XQjRvcF81MjY1/Santhipoma-Chithi-Sad.mp3சந்திப்போமா
இன்று சந்திப்போமா

சந்திப்போமா
இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா

சந்திப்போமா
இன்று சந்திப்போமா

அதிசய சோலையில் சந்திப்போமா

ரகசிய காதலை சிந்திப்போமா
அதிசய சோலையில் சந்திப்போமா

ரகசிய காதலை சிந்திப்போமா


சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்ன சிட்டு போலே பறப்போமா
ஹா ஹா ஹா ஹா

சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்ன சிட்டு போலே பறப்போமா
ஹா ஹா ஹா ஹா

சந்திப்போமா
இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா
சந்திப்போமா
இன்று சந்திப்போமா

மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவரையில் கை பற்றுவோமா
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவரையில் கை பற்றுவோமா< br />முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
ஹா ஹா ஹா ஹா

முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
ஹா ஹா ஹா ஹா ஹா
சந்திப்போமா

இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா

சந்திப்போமா

இன்று சந்திப்போமா

வெள்ளி, 21 மார்ச், 2014

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

 அன்று பலரும் சிலாகித்து ரசித்த பாடல்.
வித்தியாசமான பின்னணி இசையில் பிண்ணியிருக்கிறார் இளையராஜா. ஒரு முறைக் கேட்டால் ரொம்ப நேரம் மனதை விட்டு அகலாத பாடல்.
பாடிய குரல்களின்  இனிமையே தனிதான்.

திரைப்படம்: உன்னை நான் சந்தித்தேன் (1984)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
 நடிப்பு: சிவகுமார், ரேவதி, சுரேஷ் 
இயக்கம்: K ரெங்கராஜ் 
பாடல்: வைரமுத்துவாக இருக்கலாம்.http://asoktamil.opendrive.com/files/Nl8zNDc4NjAyMV9WUUd6NV8yOGQy/Unnai%20kaanum%20neram%20nenjam.mp3


ஆஆஆஆஆஆஆஆஆஆ
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி

கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை

மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும்  ஆயுள் காலம்
 மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும்  ஆயுள் காலம்

பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
 உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

செவ்வாய், 18 மார்ச், 2014

சித்திரத்தில் பெண்ணெழுதி

வழக்கம் போல மகாதேவனின் இனிமையான, மனதைக் கிளரும் இசையில் ஜமுனா ரானி அவர்களின் அரிய பாடல்.

திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)
இசை: K V மகாதேவன்
பாடியவர்: K ஜமுனாராணி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி
இயக்கம்: R யோகானந்த்
http://asoktamil.opendrive.com/files/Nl8zMjgzMjQ3Nl9XQWpSRl83M2Q2/Chitthiratthil%20Penn.mp3சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே

காவியத்தில் காதலென்றால்
கரைந்துருகும் கற்பனையே
காவியத்தில் காதலென்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கே
கண்ணீர்தான் உன் வழியோ
கண்ணிறைந்த காதலுக்கே
கண்ணீர்தான் உன் வழியோ
கண்ணீர்தான் உன் வழியோ

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
 ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே

அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன்தானோ
இன்னமுதத் தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன்தானோ

மன்னர் குலக் கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மன்னர் குலக் கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கு
வாய்த்த விதி இதுதானோ
மண்டலத்தில் பெண்களுக்கு
வாய்த்த விதி இதுதானோ
வாய்த்த விதி இதுதானோ

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே

ஞாயிறு, 16 மார்ச், 2014

கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

இரண்டு இசை வித்தகர்களின் குரலில் அட்டகாசமான பாடல்.
ஒரே பாடல்  இரண்டு முறை காட்சியாக வருவதுதான் புரியவில்லை. படத்தை பார்த்தால் புரியலாம். இனிய இசையும் பாடலும்.

 திரைப்படம்: கலை அரசி (1963)
 நடிப்பு: எம்.ஜி.ஆர், பானுமதி
 பாடகர்கள்: சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்பானுமதி
 இசையமைப்பாளர்: கே.வி.மகாதேவன்
 பாடலாசிரியர்: கண்ணதாசன்
 இயக்குநர்: ஏ.காசிலிங்கம்


http://asoktamil.opendrive.com/files/Nl8zNDQ5MjYxOV9KWXByaV84ODRj/Kalaiye%20Unn%20Ezhil%20Meni.mp3

கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கன நேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கண நேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்

உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன்
உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன்
இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்

பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே

சிரிக்கின்ற இதழ்கூடக் கலைபேசுதே
சிரிக்கின்ற இதழ்கூடக் கலைபேசுதே
வாய் மணக்கின்ற மொழியாவும் கவிபாடுதே
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
 கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கன நேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்

நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே
அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே
நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே
அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே

எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே

கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா

எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே

கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா
கனம் கூடப் பிரியாமல் உறவாடுவோம்
நம் மனம் நாடும் சுகம் யாவும் தினம் காணுவோம்
கனம் கூடப் பிரியாமல் உறவாடுவோம்

வெள்ளி, 14 மார்ச், 2014

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு....
தன்னம்பிக்கைத் தரும் பாடல் வரிகள். சொல்வது மிக சுலபம்தான். நடை முறை வாழ்க்கை என்பது வேறு என்றும் சிலர் சொல்வது காதில் விழுகிறது.
நல்ல இனிமையான பாடல்.


திரைப் படம்: பந்த பாசம் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், டி எம் எஸ்
நடிப்பு: சிவாஜி, தேவிகா, சாவித்ரி
இயக்கம்: A பீம்சிங்க்


http://asoktamil.opendrive.com/files/Nl8zNDI4NDY1MV9PZUpndl9lNThl/Kavalaigal%20Kidakkattum-BanthaPaasam.mp3)

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை
என்னையும் பழியோ விடவில்லை

சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ
தொட்டதும் மலர்களின் மணம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனைக் கதையாமோ

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல்கடை தூர வழி
நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல்கடை தூர வழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி
சுற்றமும் சுகமும் வேறு வழி

வந்ததில்லெல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

அண்ணனில் ஆயிரம் பேருண்டு
ஆயினும் உன் போல் யாருண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு

புதன், 12 மார்ச், 2014

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே


எஸ் பி பியின் ஆரம்ப கால பாடல். வழக்கம்போல P சுசீலா அம்மா பாடலை கலக்கியிருக்கிறார்கள். T R பாப்பா அவர்களிடமிருந்து ஒரு அருமையான பாடலிது.

திரைப் படம்: யார் ஜம்புலிங்கம் (1972)
இசை: T R பாப்பா
இயக்கம்: M S கோபிநாதன்
நடிப்பு: ஜெய்க்குமார் (யார்???), ஜோதிலட்சுமி
பாடியவர்கள்: எஸ் பி பி, P சுசீலா
பாடல்: தெரியவில்லை.


http://asoktamil.opendrive.com/files/Nl8zMTU5ODQ1NV85OFVQaV8xOWE1/Kani%20Muthu.mp3

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே

வா வா என்னை ஆதரிக்க நீ வா

வா வா என்னை காதலிக்க நீ வா

லா லா லா லலலலா ஹ ஹ ஹ ஹ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூவிழியால் ஒரு ஓவியம் வரைந்தேன் காதலன் உள்ளத்திலே
புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே

பூவிழியால் ஒரு ஓவியம் வரைந்தேன்
காதலன் உள்ளத்திலே

புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன்
காதலி நெஞ்சத்திலே

பூவிழியால் ஒரு ஓவியம் வரைந்தேன்
காதலன் உள்ளத்திலே

புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன்
காதலி நெஞ்சத்திலே

எழுதிய கவிதைக்கு பரிசென்னவோ

கொடுப்பதை கொடுத்தால் சுவையல்லவோ

வா வா என்னை ஆதரிக்க நீ வா

வா வா என்னை காதலிக்க நீ வா

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே

தேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனியை
நான் தொடும் நேரத்திலே

நூலிடை மேலொரு நாடகம் நடந்ததை
கண் சொல்லும் நாணத்திலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனியை
நான் தொடும் நேரத்திலே

நூலிடை மேலொரு நாடகம் நடந்ததை
கண் சொல்லும் நாணத்திலே

இரவினில் ரகசியம் வெளிப்படுமோ

இளமையின் அதிசயம் புலப்படுமோ

வா வா என்னை ஆதரிக்க நீ வா

வா வா என்னை காதலிக்க நீ வா

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே

ல ல ல ல ல ல லஞாயிறு, 9 மார்ச், 2014

joyful singapore colorful malasiya

நான் பிறந்து வளர்ந்த  மலேசியாவிற்கு நீண்ட காலம் கழித்து எனது உறவினர் ஒருவரை பார்க்க தோஹாவிலிருந்து மிக மிக குறுகிய லீவில் (4 நாட்கள்) வந்தேன். இன்றைய காட்சிகளும் பழைய நினைவுகளும் மறக்கமுடியாதவை. உண்மையாகவே colorful malasiya தான் இன்னமும்.

திரைப்படம்: வருவான் வடிவேலன் (1978)
இயக்கம்: கே சங்கர்
இசை: M S விஸ்வநாதன்
நடிப்பு: விஜயகுமார், லதா, K R விஜயா
பாடல்: கண்ணதாசன்


http://asoktamil.opendrive.com/files/Nl8zMTA5MTM5OV9uTGRCdl9iODNl/Joyfull%20Singapore%20ஜாய்ஃபுல்%20சிங்கப்பூர்.mp3

joyful singapore singapore singapore
colorful malasiya malasiya malasiya

joyful singapore colorful malasiya

joyful singapore colorful malasiya

ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் 
அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள் 

ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் 
அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள் 

சீனக்கிளி போல் சிரிக்கும் அழகை 
காணக் கண்கோடி இப்போது தேவை 

நீலக்கடல் போல மிதக்கும் விழியில் 
காதல் கவிபாட வந்தாள் உன் பாவை 


joyful singapore 

colorful malasiya

ர ர ர ர ப ப ப ப

ர ர ர ல ல ல ர ர ர

திருந்திய பூங்காவைப் போலே
அடி திருமகள் உன் கூந்தல் மேலே
ஒரு மலர் நான் சூட வேண்டும்
இன்னொரு மலர் நீயாக வேண்டும்

அரும்பிய குளிர் காற்று மோதும்
அரும்பிய குளிர் காற்று மோதும்
என் அழகிய இளமேனி வாடும்
கரும்பென இதழ் தந்த சாறும்
என் கரை மீறும் ஆசையைத் தூண்டும்

joyful singapore 

colorful malasiya

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா 

மரத்திலும் பெண் போன்ற குணங்கள்
அதன் மடியிலும் பாலூறும் இடங்கள் 

நிழலுக்கு சுகமான வனங்கள்
நாம் நெருங்கிட சரியான இடங்கள் 


joyful singapore 
ப ப ப ப ப 

colorful malasiya

ஆடுதொட்டில் மஞ்சம் போடும் 
தண்ணீர் மலையின் பக்கம் வந்து 
ஆடு கண்ணா ஆடு இங்கே 

நாடு விட்டு நாடு வந்து 
காதலிக்கும் இன்ப நிலை 
பாடு கண்ணே பாடு இங்கே 

காமனுடன் போட்டியிட்டு 
கைகலந்து மெய் கலந்து 
காதலிக்கும் ஜோடி இங்கே 

காலமகள் ஆசை கொண்டு 
பூவிரித்த மெத்தைதன்னில் 
சேர்ந்திருக்க வாடி இங்கே 

ஆடுதொட்டில் மஞ்சம் போடும் 
தண்ணீர் மலையின் பக்கம் வந்து 
ஆடு கண்ணா ஆடு இங்கே 
ஆடு கண்ணா ஆடு இங்கே 


joyful singapore 

colorful malasiya

வியாழன், 6 மார்ச், 2014

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்

இளம் ஜோடிகளின் கொண்டாட்டம். வாசுவின் கணீர் குரலில் இளமை ஊஞ்சலாடும் ஒரு பாடல்.

திரைப்படம்: சரணாலயம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
இசை : M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
இயக்கம்: R சுந்தர்ராஜன்
நடிப்பு: மோகன், நளினி

http://asoktamil.opendrive.com/files/Nl8zMzQzMDA0Nl9YaUI5VF8zZmY4/Indru%20Kaatrukkum-Saranalayam.mp3
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்
நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

பாக்கு மரங்களின் நிழலோரம்
நல்ல பவள மல்லிகைகள் பாய் போட

அஹா ஆ ஓஹ் ஓஹ் ஓஹ்

பாக்கு மரங்களின் நிழலோரம்
நல்ல பவள மல்லிகைகள் பாய் போட

மாலை பொழுதோடு பனி தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
மாலை பொழுதோடு பனி தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
ரதிமாறன் விளையாட்டு அரங்கேற

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

சோலை வனங்களின் வழிதோரும்
சின்னஞ்சிறிய மின்மினிகள் விளக்கேற்ற

அஹா ஆ ஹே ஹே ஹே

போதை மெதுவாக தலைக்கேற
மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற
வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்க்காலமாம்
 இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு காண கருங்குயில்கள் கச்சேரியாம்

செவ்வாய், 4 மார்ச், 2014

குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க

இனிமையான தமிழ்ப் பாடல். நல்ல இசை, குரல் பாடல் வரிகள்.


திரைப் படம்: பச்சை விளக்கு (1964)
பாடியவர்கள்: டி.எம்.எஸ் - P.சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி
இயக்கம்:   A பீம்சிங்


http://asoktamil.opendrive.com/files/Nl8zMjk0MjUzN19Hc2s2cl9kZmI5/vaarathiruppaalo%20vanna%20malar.mp3


குத்து விளக்கெரிய
கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

கண்ணழகு பார்த்திருந்து
காலமெல்லாம் காத்திருந்து
பெண்ணழகை ரசிப்பதற்கு
பேதை நெஞ்சம் துடி துடிக்க
பேதை நெஞ்சம் துடி துடிக்க

வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள்
சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை

பக்கத்தில் பழமிருக்க
பாலோடு தேனிருக்க
உண்ணாமல் தனிமையிலே
உட்கார்ந்த மன்னனவன்
உட்கார்ந்த மன்னனவன்

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

கல்வி என்று பள்ளியிலே
கற்று வந்த காதல் மகள்
காதலென்னும் பள்ளியிலே
கதை படிக்க வருவாளோ
கதை படிக்க வருவாளோ

வாராதிருப்பாளோ வண்ண
மலர் கன்னி அவள்
சேராதிருப்பாளோ
தென்னவனாம் மன்னவனை

வாராதிருப்பானோ வண்ண
மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப்
பூம்பாவை தன்னை

சனி, 1 மார்ச், 2014

தண்ணீரிலே மீன் அழுதால்

மீண்டும் இன்று டி ராஜேந்தரின் இனிய பாடல் ஒன்று. இசை, பாடல் வரிகள், குரல் என எல்லா விதத்திலும் ஒரு சிறந்த பாடல் என்பேன். small and sweet என்பார்கள்.
ராஜேந்தரின் நடித்து பாடிய முதல் பாடல்  என நினைக்கிறேன்.

திரைப்படம்: மைதிலி என்னைக் காதலி (1986)
இயக்கம், இசை, பாடல்: டி.ராஜேந்தர் 
பாடியவர்: எஸ் பி பி.
நடிப்பு:  டி.ராஜேந்தர், அமலா.

  http://asoktamil.opendrive.com/files/Nl8zMzE4Mjg3N19QbDRDQl9mOWYz/Thanneerile%20Meen%20Azuthal.mp3


தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்

முள் மீது விழுந்தபடி
முகாரி பாடும் கிளி
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ
முள் மீது விழுந்தபடி
முகாரி பாடும் கிளி

கண் துடைப்பார் இல்லை
கை கொடுப்பார் இல்லை
கண் துடைப்பார் இல்லை
கை கொடுப்பார் இல்லை

உன்னை புரிந்தோரில்லை
உள்ளம் அறிந்தோரில்லை

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்

மனமே மனமே மனமே மனமே