பின்பற்றுபவர்கள்

திங்கள், 31 ஜனவரி, 2011

வள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்..கம்பன் கவியில் சுவை எடுத்தேன்

மானே தேனே என்ற பாடல் வரிகள் இல்லாத பாடலை தேடுகையில் கிடைத்த பாடல் இது. ஆனாலும் காதலர்கள்  உலகப் பொருளாதாரம் நிறைய பேசி இருப்பது போல தெரிகிறது


திரைப்படம்: கல்யாண வளையோசை
இசை: M L ஸ்ரீகாந்த்
பாடியவர்கள்: M L ஸ்ரீகாந்த், S ஜானகி
மேற்க் கொண்டு விபரங்கள் ஏதும் என்னிடம் இல்லை. தெரிந்தவர்கள் பின்னோட்டத்தில் எழுதுங்கள்.
Music Hosting - Download Audio -


லல்ல லால ல ல ல
வள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழில் எடுத்தேன்
பாடுவோம் நாம் ஆடுவோம்
மலரின்றி வண்டு இனம் மகிழ்ந்து வாழ்வதில்லை
மதியின்றி மண்ணுலகம் நிலைத்து இருப்பதில்லை

ஆ ஆ ஆ
ஒளியின்றி பூவுலகம் செழித்து வளர்வதில்லை
உனையன்றி என் உள்ளம் சிரித்து மகிழ்வதில்லை

மின்னல் இடை அன்னம் நடை புனைந்தேன் பாடல் ஒன்றை
ராதா உன்னை கொஞ்சும் உள்ளம் கொண்ட கண்ணன் இங்கே

லல்ல லால ல ல ல

லல்ல லால ல ல ல

வள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழில் எடுத்தேன்
பாடுவோம் நாம் ஆடுவோம்
துணையின்றி கொடிகளெல்லாம் தானே படர்வதில்லை
நதியின்றி நாடுகளெல்லாம் வளமாய் இருப்பதில்லை

ஆ ஆ ஆ ஆ
கவியின்றி இசையெல்லாம் தேனாய் இனிப்பதில்லை
கலை இன்றி தலை உள்ளம் பாலாய் சுவைப்பதில்லை
மன்னன் உள்ளம் கள்ளம் இல்லை நினைத்தேன் காதல் கொண்டேன்
கண்ணா உன்னை கொஞ்சும் உள்ளம் கொண்ட ராதை இங்கே

லல்ல லால ல ல ல

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

அம்மா அடி அம்மா..சுகம் சும்மா வருமா

இன்றும் மற்றொரு இனிமையான பாடல்.


திரைபடம்: ரசிகன் ஒரு ரசிகை (1986)
நடிப்பு: சத்யராஜ், அம்பிகா
இசை: ரவிந்தரன்
இயக்கம்: பாலு ஆனந்த்http://www.divshare.com/download/13916856-5aa

ஹ ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ல ல ல ல் ல் ....ல் ல் ல ல் ல
ஹா ஹா ஹா ஹா
ல ல ல ல் ல...

அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆசை வெள்ளம் பாயும் என்னாளும்
ஹை ஹை ஹை
அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆசை வெள்ளம் பாயும் என்னாளும்
ஹொய் ஹொய் ஹொய்
அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா

அருகில் இழுத்து
அணைத்து பிடித்து
மடியில் உறங்க வா
இளைய நிலவின்
மழையில் நனைந்து
அழகை சுமந்து வா
ஆசை மனம் பாடும்
யாரை அது நாடும்
வாச மலர் சூடும்
தேவி முகம் தேடும்
கொதித்து கிடந்து
குளிர்ந்த விறகு
நாளும் காண்போம்
காதல் சந்தோஷம்
ஹ ஹ ஹ
அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா

பழக பழக
பசியும் எடுக்கும்
விருந்து படைக்க வா
தொடர தொடர
இதயம் இனிக்கும்
இனியும் அருகில் வா
காலையிலே கூடி
மாலைவரை தேடி
காணும் சுகம் பாதி
நாளை வரும் மீதி
விளக்கை அணைத்து
இருட்டை ரசிக்கும்
வேளை வந்தால்
தானே நன்னான்ன...
ம் ம்..ம்..ம் ம்.. ம்..

அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆசை வெள்ளம் பாயும் என்னாளும்
ஹ ஹ ஹ ஹ

ல ல் ல ல....

சனி, 29 ஜனவரி, 2011

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

 இந்த பாடல் இளையராஜாவின் Master piece என்றே சொல்லலாம். சரியான வேகத்தில் தேவையான இசைகருவிகளுடன் மிகச் சரியான குரல்களை சேர்த்து பாடலை மிக அழகாக பின்னி இருக்கிறார். சரணம் வழக்கம் போல மயிலே குயிலே என்றிருந்தாலும் பல்லவி நன்றாக இருக்கிறது. இடையில் சந்தங்களும் அருமை. மொத்தத்தில் இது போல பாடல்கள் கேட்க சுகம்தான்.


திரை படம்: ஒருவர் வாழும் ஆலயம் (1988)
இயக்கம்: ஷண்முக ப்ரியன்
பாடல்: பொன்னடியான்
குரல்கள்: மலேஷிய வாசுதேவன், சித்ரா
நடிப்பு: சிவகுமார், பிரபு, அம்பிகா,
http://www.divshare.com/download/13905282-ca8

 மலையோரம்...விளையாடும்...

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

ஆ அப்புறம்..

விளையாட்டச் சொல்லித்தந்த

ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே


பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத்தானே சேரனும் நீயே
ஆ ஆ ஆ ஆ...

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
தந்தனதன தான ந தானன
தகிட தகிடததோம் தடததோம் தக்கதிம்மி தக்கதிமி தக்க ஜிமி தக்க ஜிமி
தந்தனதன தான ந தானன
தக்க திமி தக்கதிமி தரிகிடதோம் தரிகிடதோம் தகிட தகிட தகிட

காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே

ஆடிடும் பூவும் ஆசையைத்தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
ஆ ஆ ஆ ஆ...

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

வெள்ளி, 28 ஜனவரி, 2011

ஆகாயம் பூ பூக்கும் நேரம் நித்தம் ஆனந்த சங்கீத ராகம்..

இன்றைய இனிமை காதல் டூயட் ஒன்று


திரைப் படம்: சாட்சி
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: விஜயகாந்த், விஜி
இயக்கம்; S A சந்த்ரசேகர்
குரல்கள்: S N சுரேந்தர், P சுசீலாhttp://www.divshare.com/download/13898724-a0d


ஆகாயம் பூ பூக்கும் நேரம் நித்தம் ஆனந்த சங்கீத ராகம்..
சுகமான பேரின்ப யாகம்... சுகமான பேரின்ப யாகம்...
இங்கு தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்...

ஆகாயம் பூ பூக்கும் நேரம் நித்தம் ஆனந்த சங்கீத ராகம்..
சுகமான பேரின்ப யாகம்...
இங்கு தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்...

ஆகாயம் பூ பூக்கும் நேரம்..

நித்தம் ஆனந்த சங்கீத ராகம்..

ஒரு கண்ணில் நாணம் குடி கொண்டது..

மறு கண்ணில் மோகம் பிடி என்றது
ஒரு கண்ணில் நாணம் குடி கொண்டது..

மறு கண்ணில் மோகம் பிடி என்றது

என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ..

இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ

என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ..

இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ

காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ..

உன் கண்ணில் பூவும் பெண் ஜாதியோ..

ஆகாயம் பூ பூக்கும் நேரம் நித்தம் ஆனந்த சங்கீத ராகம்..
சுகமான பேரின்ப யாகம்...
இங்கு தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்...

ஆகாயம் பூ பூக்கும் நேரம்..

நித்தம் ஆனந்த சங்கீத ராகம்..

ல ல ல ல ல ல லல லல லல

மணிப் பிள்ளை ஒன்று கருவானது...
எதிர் காலம் இங்கே உருவானது..
மணிப் பிள்ளை ஒன்று கருவானது...
எதிர் காலம் இங்கே உருவானது..

தாலாட்டு பாடும் தமிழ் அன்னமே..
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே..
தாலாட்டு பாடும் தமிழ் அன்னமே..
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே..

பல்லாக்கு எந்தன் இரு தோளிலே

பாராள வேண்டும் ஒரு நாளிலே..

ஆகாயம் பூ பூக்கும் நேரம் நித்தம் ஆனந்த சங்கீத ராகம்..
சுகமான பேரின்ப யாகம்...
இங்கு தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்...

ஆகாயம் பூ பூக்கும் நேரம்..

நித்தம் ஆனந்த சங்கீத ராகம்வியாழன், 27 ஜனவரி, 2011

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே... தீண்டாதிரு...

SPBயின் அழகானப் பாடல். உண்மையாகவே விடியலில் கேட்டால் அற்புதமே.


திரைப்படம்; கல்யாணக் காலம் (1982)

இயக்கம்: ராஜசேகர், ராபர்ட்
பாடல் வரிகள்: வைரமுத்து
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: தியாகு, சுஹாசனி
Share Music - Download Audio -அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...
அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...

பூக்கள் விழித்து கண்கள் துடைத்து
காலை வணக்கம் சொல்லும்
தூங்கி கிடந்த சூரியன் எழுந்து
சோம்பல் முறித்து கொள்ளும்
குளிக்கும்போது தெரிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்
குளிக்கும்போது தெரிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...

அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைபற்ற முந்து
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைபற்ற முந்து

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...

பார்த்து புளித்து கசந்தபோதும்
பழகி போன பந்தம்
உயிரில் நிறைந்து மனதில் வழிந்து
சுகங்கள் வளர்க்கும் சொந்தம்
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும்
ஆ ஆ ஆ ஆ
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும்

அதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன்
குளிரே... தீண்டாதிரு...
குளிரே...ஹா ஹா ஹா ஹா தீண்டாதிரு...

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

தமிழ் உதயனின் விருப்பப்படி இந்த பாடல். வழக்கம் போல் எல்லா புகழும் SPBக்கே. இசையமைப்பாளர் திரு ரவி தூர்தர்ஷன் செய்தி அறிவிப்பாளர் திருமதி ஷோபனவின் கணவர். இவர் சலனங்கள் என்ற படத்திற்க்கும் இசையமைத்திருக்கிறார். அப்பட பாடல்கள் கிடைத்தால் தரமேற்ற முயற்சிக்கிறேன்.திரைப் படம்: ஸ்பரிசம்
இசை: ரவி என்று திருத்தப்பட்டேன்
நடிப்பு: S V சேகர், ஸ்ரீலட்சுமி
இயக்கம்: R C சக்தி

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

ஊடல் சிறு மின்னல் ஹாஹா ஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹா ஹாஹா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி

புதன், 26 ஜனவரி, 2011

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து..ஆனந்தம் வெளியில் முகில்கள் திரிந்து

1980களில் தோன்றிய பல இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். ஒரு படத்துக்கு இசையமைத்து காணாமல் போனார் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அந்த நேரத்து டிரெண்டில் பாடல் இருக்கிறது. பாராட்டலாம். ஆனால் பாடல் வரிகளில் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் புரியவில்லை. பாடலை எழுதியவர் A V ரமணன் என்று நினைக்கிறேன்.


திரைப் படம் : ஸ்பரிசம் (1982)
பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி , ஷைலஜா
இசை : காமேஷ் அல்லது ரவி
நடிப்பு: S V சேகர், ஸ்ரீலக்ஷ்மி
இயக்கம்: R V ஷக்தி


ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து ஹ
ஆனந்தம் வெளியில் முகில்கள் திரிந்து ஹ
பாவை என் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
 ஹ
ஆனந்தம் வெளியில் முகில்கள் திரிந்து
 ஹ
பாவை என் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்

மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும்
கண்கள் கார்த்திகை தீபங்களோ ஹே ஹே ஹே
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
காலம் கதவினை மெல்ல திறந்து
ப ப ப ப ப ப
கடந்த காதலை மறந்து
காலம் கதவினை மெல்ல திறந்து
கடந்த காதலை மறந்து
இந்த கணதில் நாம் பிறந்து வளர்ந்து
தவழ்ந்தோம் .ஸ்பரிசம்

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
 ஹ
ஆனந்தம் வெளியில் முகில்கள் திரிந்து
 ஹ
பாவை என் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்

வைரம் படைக்கலாம் நடுவே நாம்
கைகள் இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம்
அதற்குமேல் தேவர் இருக்கலாம்
அவர்க்கெல்லாம் பாடல் தொடுக்கலாம்
வைரம் படைக்கலாம் நடுவே நாம்
கைகள் இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம்
அதற்குமேல் தேவர் இருக்கலாம்
அவர்க்கெல்லாம் பாடல் தொடுக்கலாம்
இந்திர பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறுக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா ஸ்பரிசம்

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
 ஹ
ஆனந்தம் வெளியில் முகில்கள் திரிந்து
 ஹ
பாவை என் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளமம்மா என் ஸ்பரிசம்
லலல்ல ல லல்லலலல் ல ல்லல்லல்ல லா

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

இளையராஜாவின் இதமான சுகமான வருடல்..... மறைந்த ஸ்வர்னலதாவுடன் ஜெயசந்திரன் இதமாய் பாடிய பாடல். சரியான படத்தில் இடம் பெறாமல் வீணடிக்கப்பட்டுள்ளது
 

திரைப் படம்: தம்பிக்கு ஒரு பாட்டு (1991)
நடிப்பு: ஸில்க் ஸ்மிதா, ரிச்சி ஏனையோர்
இயக்கம்: அஷோக் குமார்
 


http://www.divshare.com/download/13866472-9faதை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...


மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...தினம் தினம்....சுகம் வரும்...

தினம் தினம்....சுகம் வரும்...சுவை தரும்...தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...சேர்த்தது சிந்தாமலே கோர்க்கவா உன் தோளிலே..நான் ஒரு சிந்தாமணி பாடவா உன் லாவணி...தேவி நீ என் மோகினி..தெய்வ ரூப வாகினி...நான் இனி உன் மாங்கனி நாடி வந்த தேன் கனி..ராணி நீ வாணி நீ..வாயேன் நீ...தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...

தினம் தினம்....சுகம் வரும்...

தினம் தினம்....சுகம் வரும்...சுவை தரும்...தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...மோகமா உன் ராகமா முழுவதும் என் யோகமா...ராகமா உன் பாவமா நாளலாம் உன் வேகமா...போதுமா பெண் வேண்டுமா மோக மேகம் தோன்றுமா...நாதமா சங்கீதமா நாடும் காதல் வேதமா...தூண்டுமா கண் தேடுமா.. பாடுமா...தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...

மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...தினம் தினம்....சுகம் வரும்...

தினம் தினம்....சுகம் வரும்...சுவை தரும்...தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...மெய்யோடு மெய் சேரும் இரு மேனி இசை பாடும்...

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே

மீண்டும் ஒரு தவிர்க்க முடியாத இனிமையான பாடல்


திரைப்படம்: டிசம்பர் பூக்கள் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJY, சித்ரா
நடிப்பு: மோகன், ரேவதி


http://asoktamil.opendrive.com/files/Nl8zNjE0MTg3MV9GTVY5Tl8yODZk/Maalaigal%20Idam%20maaruthu%20maaruthu.mp3

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும்
மங்கலம் மங்கலம் மங்கலம் ம் ம் ம்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே
நெஞ்சிலே தாலாட்டும் நெடு நாள் ஆசை
இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடு நாள் ஆசை
இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை

தொட்டுவிட்டு போகாமல் தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல் தோளோடு மோதல்

தாகங்கள் வரும் மோகங்கள் இனி தத்தளிக்கும்

ம் ம் ம் ம்
தேகங்கள் தரும் வேகங்கள் வெள்ளி முத்தெடுக்கும்

ம் ம் ம் ம்
தந்த சுகம் கண்ட மனம் சந்தம் படித்திடும் சொந்தம் இனித்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே

மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே

தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன

கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளில்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளில்

கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடி காலைக் கூடும்

ஆரங்கள் பரிவாரங்கள் பல அற்புதங்கள்

ம் ம் ம்
எண்ணங்கள் பல வண்ணங்கள் எழில் சித்திரங்கள்

ம் ம் ம் ம்
இன்று முதல் இன்னிசைகள்
இன்று பிறந்திடும் எங்கும் பறந்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும்
மங்கலம் மங்கலம் மங்கலம் ம் ம் ம்

மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே

திங்கள், 24 ஜனவரி, 2011

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

மனோஜ் கியானின் எளிமையான இனிமையான இசையில் K J யேசுதாஸ் பாடிய ஒரு அழகான பாடல்


திரைப் படம்: வெளிச்சம் (1987)
நடிப்பு: கார்த்திக், ரஞ்ஜனி
இயக்கம்: சுந்தர் K விஜயன்http://www.divshare.com/download/13860662-ab0துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?
கன்னி உந்தன் பேர் என்ன?
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?
கன்னி உந்தன் பேர் என்ன?
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?

ஹோ ஹோ
பூமி என்னும் பெண்ணும்
பொட்டு வைத்து கொண்டு
பச்சை ஆடை கட்டி பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்துப் போகிறாள்?

பூமி என்னும் பெண்ணும்
பொட்டு வைத்து கொண்டு
பச்சை ஆடை கட்டி பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்துப் போகிறாள்?

பூமி பெண்ணுக்கும் கன்னி பெண்ணை போல்
நெஞ்சில் ஈரம் உண்டு

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?

ஹோ ஹோ

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூ சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூ சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி

மண்டி இட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா வா

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?
கன்னி உந்தன் பேர் என்ன?
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன?

ஹோ ஹோ

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனது....


திரு தேவாவின் எளிமையான இசையுடன் நல்லதொரு பாடல். சித்ரா தனியாகவும், SPBயுடன் சேர்ந்தும் பாடியிருக்கும் இரண்டு பாடல்களும் தரமெற்றி இருக்கிறேன். இசை கருவிகள், பாடும் குரல்களை விழுங்காத நல்ல இசையமைப்பு. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத சமீபத்திய பாடல். இரண்டு பாடல்களிலும் வரிகளில் மாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடதக்கது.


திரைப் படம்:  காலமெல்லாம் காத்திருப்பேன்  (1997)
நடிப்பு: விஜய், டிம்பள்
இயக்கம்: R சுந்தரராஜன்
 
 
சித்ரா தனியாக
 
 

http://www.divshare.com/download/13848410-63d

 
 
 
சித்ரா, SPBயுடன்.
 

 
 
http://www.divshare.com/download/13848371-13d
 
நில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனது....

ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்க்கு.. இரவிலே அல்லியை அணைப்பதற்கு...

நான் உனை அணைத்தேனே ... இரவெதற்க்கு..

நில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனது....

ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்க்கு.. இரவிலே அல்லியை அணைப்பதற்கு...

நான் உனை அணைத்தேனே ...இரவெதற்க்கு..நில்லடி என்றது உள் மனது...சொல்லவா சொல்லவா நான் நல்ல செய்தி... பக்கம் வா வெட்கம் ஏன் நீ சரி பாதி...தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்...நெருங்கினேன் மயங்கினேன் மலையருவி ஓரம்...கங்கை கரை ஓரம் வந்து பாட்டில் சொல்லக் கூடாதா...மங்கை அந்த மாலை பொழுதில் மயங்குவேனே தானாக...ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே...நில்லடி என்றது உள் மனது...செல்லடி என்றதுபெண் மனது....

நில்லடி என்றது உள் மனது...

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத் தானா...வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்...மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்...கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கன்னன் மனம் கவி பாட...என்றும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனை தேட...ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே...நில்லடி என்றது...உள் மனது...செல்லடி என்றதுபெண் மனது....ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்க்கு..இரவிலே அல்லியை அணைப்பதற்கு...நான் உனை அணைத்தேனே ...இரவெதற்க்கு..நில்லடி என்றது...உள் மனது...செல்லடி என்றதுபெண் மனது....நில்லடி...

சனி, 22 ஜனவரி, 2011

நான் பாடும் பாட்டிலே...வான் மீனும் தூங்குமே...

மீண்டும் ஒரு அருமையான தாலாட்டு பாடல் கிடைத்தது. இதுவும் சுசீலா அம்மா குரலில் கம்பீரமாக ஒலிக்கிறது


திரைப் படம்: பவானி (1967)

நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயலக்ஷ்மி, விஜயகுமாரி, அசோகன்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம், தயாரிப்பு: K ஷங்கர்

http://www.divshare.com/download/13278206-8b3


நான் பாடும் பாட்டிலே...

வான் மீனும் தூங்குமே...

அது ஏன் கண்ணே....

நான் தாயென்றோ...

அது ஏன் கண்ணே....

நான் தாயன்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....

கொடியொன்று கனியொன்று இங்கே....

தளிர் தொடும் கார் முகில் எங்கே...

கொடியொன்று கனியொன்று இங்கே....

தளிர் தொடும் கார் முகில் எங்கே...

விழிகளை இமைத் தொடும் முன்னே...

விடிவெள்ளி தோன்றுது அங்கே...

அது ஏன் கண்ணே....

நான் தனியென்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....இரவுக்கு நான் மட்டும் காவல்...

எனக்கொரு துணை இந்தப்பாடல்...

உறவுக்கு மனம் கொண்ட ஆவல்...

உன்னுடன் முடிந்தது கண்ணே...

அது ஏன் கண்ணே....

நான் பெண்ணென்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....

நான் பாடும் பாட்டிலே...

வான் மீனும் தூங்குமே...

அது ஏன் கண்ணே....

நான் தாயென்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....தவிக்கும் இதயங்கள் இங்கே...

என் தாலாட்டு போகட்டும் அங்கே...

தவிக்கும் இதயங்கள் இங்கே...

என் தாலாட்டு போகட்டும் அங்கே...

இருக்கும் உலகங்கள் இங்கே...

தேடிவராதோ இங்கே...

எனைப் பார் கண்ணே...

நான் தாயன்றோ...

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ ஆராரிரோ....

ஆரிரரோ...உல்லாயிலாயிலாயி...

ஆராரிரோ....உல்லாயிலாயிலாயி...

அன்னை மடி மெத்தையடி/ அத்தை மடி மெத்தையடி

தாலாட்டு பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல் மிக முக்கியமானது. நல்ல இசையமைப்பும் P. சுசீலா அம்மாவின் அழகான குரலும் தனி இன்பம். அதுவும் சுவை மாறாமல் இரண்டு வகையில் பாடல்களைப் பதிவாக்கி இருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டு பாடல்களையும் தரமேற்றி இருக்கிறேன். சுவையுங்கள்.திரைப் படம்: கற்பகம் (1963)
நடிப்பு: ஜெமினி, முத்துராமன், சாவித்திரி, K R விஜயா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்


லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ
அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அன்னை மடி மெத்தையடீ

லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ
வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்
வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்

தந்தால் என்னுயிர் தந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன்

ம் அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அன்னை மடி மெத்தையடி
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ
ஓ ஓ ஓ ஆரோ
ஓ ஓ ஓ ஆரோ

அத்தை மடி மெத்தையடி

http://www.divshare.com/download/13839303-43a

லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ

லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்

ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேரோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

ம் ம் ம் அத்தை மடி மெத்தையடி...
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ.

புதன், 19 ஜனவரி, 2011

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இளையராஜாவின் பின்னனி இசையுடன் KJY, S  ஜானகி குரலில் ஒரு சமீபத்திய இனிமையான பாடல்


திரைப் படம்: உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (1992)
நடிப்பு: பார்த்திபன், சுமா ரங்கனாதன்
பாடல்: மூ மேத்தா
தயாரிப்பு: கோவை தம்பிhttp://www.divshare.com/download/13814550-67dஆ ஆ ஆ ஆ ஆ ஆ ந ந ந ந ந நன நன நன நன ந
ஒரு ராகம் தராத வீணை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை

ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிப்போகும்
நாலும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழிலாறும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்திப் பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவுக் காலம் தெரிந்ததே
நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை

ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவைப் பறிக்கும் வீரம் இருக்கும்போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
பாணம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா
கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை

ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

இளையராஜாவின் அருமையான இசையில் K J Y மற்றும் S. ஜானகி குரல்களில் இது எனக்கும் பிடித்தப் பாடல்களில் ஒன்றுதிரைப்படம்: ஆனந்த ராகம் (1982)
நடிப்பு: சிவகுமார், ராதா
தயாரிப்பு/பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம்http://www.divshare.com/download/13804184-9c0

சோகமாக அதே பாடல்:ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம் ம் ம்

ம் ம் ம் ம் ம் ம்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும் என்னை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்
காலம் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்
ஜீவ நாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..

கிளு கிளுவென ஒரு பாடல். SPBயும் வாணி ஜெயராமும் கலக்கி இருக்கிறார்கள். இளமை திரும்ப வரும்


திரைப்படம்: ஆயிரம் முத்தங்கள் (1982)
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: சிவகுமார், ராதாநம்தத்தா நம்தத்தா நம்த நம்த நம்த நம்த நம்தத்தா
நம்தனம்தனம் தனம் தனம் தனம் தனம் தனம் த தம் தம் தம் தம்
நிதச நிதச தப தப ப தப ப ப ப ம மக கரி ரி நிச ச தத நிரி சா

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி..ஹா
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி..

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது
ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது
ஈரமும் காயாது அம்மாடி என்னுடல் தாங்காது

ம் ம்
அதற்க்கென்ன கேள்வி இன்ப வேள்வி செய்வோமே
நாக்ருதிர் திர் நாக்ருதிர் திர் நாக்ருதிர் திர் தானெனா தனெ நானனா நா
தனெ நா தனெ நா தானெனா தனெ நானனா நா ம் ம் ம் ம் ம்

காதலின் முத்தங்கள் தீயாக காரணம் சொல்லுங்கள்
காதலின் முத்தங்கள் தீயாக காரணம் சொல்லுங்கள்

உனைக் கண்ட நேரம் நெஞ்சில் மோகம் உண்டாச்சி
விரகமும் ஒரு வகை தீயல்லவா ஆ ஆ ஆ
விரகமும் ஒரு வகை தீயல்லவா

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது ஹா
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது

பட்டினி என்னோடு இப்போது பாட்டென்ன உன்னோடு
பசிகென்ன கேள்வி உந்தன் தேவை சொல்லைய்யா

தானானனான தானானனான தானான தானான்னா
தானானனான தானானனான தானான தானான்னா
தனனானனா தனனானனா தானன தானேன்னா
நனெனானெனா தனெனானெனா
கற்களும் கற்கண்டாம் என் ஆசை காதலி கைப் பட்டால்
கற்களும் கற்கண்டாம் என் ஆசை காதலி கைப் பட்டால்

உதட்டுக்குள் காமன் இன்பத் தேனை வைச்சானே
நினைத்ததும் இனித்திடும் தேன் அல்லவா ஹா
நினைத்ததும் இனித்திடும் தேன் அல்லவா

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி..

வாசிக்கத் தெரியாது சங்கீத வாசனை எனக்கேது

அதுகென்ன ஞானம் தொட்டால் நாதம் உண்டாகும்..

பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக
பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக

வயலினும் பெண்ணும் ஒன்றே எண்ணிக் கொள்ளம்மா
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது

ம் ம்
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி.

திங்கள், 17 ஜனவரி, 2011

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

T ராஜேந்தர் இசையமைப்பில் பல பாடல்கள் அருமையானவை. சமீபத்தில் அவர் சோடை போனது ஏன் என்பது தெரியவில்லை. அவருடைய சிறந்த பாடல்களில் ஒன்று இது.  SPB குரலினிமையும் இதில் ஒரு சிறப்பு.


படம்: ராகம் தேடும் பல்லவி (1982)
இசை/இயக்கம்/பாடல் வரிகள்: ராஜேந்தர்
http://asoktamil.opendrive.com/files/Nl8zODYxNTA1Nl9MZnNUNF84ZTk3/Moongilile%20paatisaikkum.mp3மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

இரு விழி கவிதை தினசரிப் படித்தேன் பொருளதை அறிய வழியேதும் இல்லை
ஆ ஆ ஆ ஆ ஆ
இரு விழி கவிதை தினசரிப் படித்தேன் பொருளதை அறிய வழியேதும் இல்லை
புது புது வார்த்தை தினம் தினம் தேடி பார்வையில் அமுதாய் அவள் வடித்தாள்
நீரலைப் போலவே நீல விழிக் கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்
மூங்கிலிலே ஹா ஹா ஹா ஹா பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ காற்றலையை ஹெ ஹெ ஹெ ஹெ தூதுவிட்டேன் தரர தரர தரர தரர

ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ
செங்கரும்புச் சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக் கொண்டது
ஆ ஆ ஆ ஆ ஆ
மாது இதழிடத்திலே மாதுளங்கனி முத்தை சிவப்பாக்கவே மாதவம் செய்தது
அவள் வரம் தரவே சென்னிறமானது
ஹை ஹை ஹை ஹை
அவள் வரம் தரவே சென்னிறமானது
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

புதன், 12 ஜனவரி, 2011

கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ

மிக அருமையான பாடல். மிக சாதாரண இசையும் SPBயின் குரலில் மிக பிரமாதமாகிவிடுகிறது.


திரைப்படம்: மகரந்தம் (1981)
இயக்கம்: கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: மோகன் ராம், ராதிகா, அருணா
இசை: சங்கர் கணேஷ் (அப்படியா பிரமாதம்!!!)
http://www.divshare.com/download/13756597-b56ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ

சின்ன சின்ன காரணத்தால் கண்ணமதில் நீர்த்துளிகள்
சின்ன சின்ன காரணத்தால் கண்ணமதில் நீர்த்துளிகள்
என்னை மட்டும் புரிந்துக் கொண்டால் அத்தனையும் தேன் துளிகள்
என்னை மட்டும் புரிந்துக் கொண்டால் அத்தனையும் தேன் துளிகள்
தேன் துளியை தேக்கி வைக்கும் தாமரையில் இதயமம்மா
தேன் துளியை தேக்கி வைக்கும் தாமரையில் இதயமம்மா
தாமரையை மலர வைக்கும் ஆதவனின் உதயமம்மா
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா
கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா
கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா
கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா
நீரிடித்து நீர் விலகீ பார்த்ததில்லை பூமியிலே
நீரிடித்து நீர் விலகீ பார்த்ததில்லை பூமியிலே
நீ பிரிந்து நானிருந்தால் வாழ்க்கையில்லை பொன்மகளே
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை

திருமதி சுசீலா அம்மாவின் குரலில் இனிமையாக இசையமைக்கப்பட்ட  இனிமையான ஒரு பாடல்.


திரைப்படம்: கொடிமலர் (1966)
இயக்கம்: C V ஸ்ரீதர்
இசை: M S விஸ்வனாதன் T ராமமூர்த்தி
நடிப்பு: முத்துராமன், விஜயகுமாரி
 
http://asoktamil.opendrive.com/files/Nl8zNzk5ODEzMF9iZWd5Ul9mNDM2/malare%20nee%20solla%20.mp3

 
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை

மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே - நான்
பார்வையினாலும் பாசத்தினாலும்
பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேனே வாழ்க்கையில்லாமல்
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனமில்லை மலரே - நான்
கோவிலைத் தேடும கொடிமலராக
கோவிலைத் தேடும  கொடிமலராக
வாடுகிறேனே வாழ்க்கையைத் தேடி
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை - உன்
நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை

மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..

திருமதி P சுசீலா அம்மாவின் குரலில், இனிமையாக இசையமைக்கப்பட்ட மற்றொறு இனிமையான அரியதான ஒரு பாடல்.


திரைபடம்: தென்றல் வீசும் (1962)
இயக்கம்: B S ரங்கா
இசை: M S விஸ்வனாதன் T K ராமமூர்த்திhttp://www.divshare.com/download/13727130-f70


ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ம் ம் ம் ம் ம் ம் ம்

மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..
தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை..
பளிங்கான பதுமை இது பழகாத இளமை..
தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை..
பளிங்கான பதுமை இது பழகாத இளமை..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..

ஆசையுடன் ஓடிவரும் அழகு முகம் ஒன்று..
அஞ்சியே நடுங்கி வரும் அன்பு முகம் ஒன்று..
பாச மலர் கொண்டு வரும் பருவ முகம் ஒன்று..
பார்த்தவுடன் நானமென்ன சிவந்த முகம் ஒன்று..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..

மை வடியும் கண் பார்த்து மலரென்று சொல்வார்..
மயங்கி வரும் நடை பார்த்து அன்ன நடை என்பார்..
கையழகு பார்த்தவுடன் கவிதை மழை பொழிவார்..
காலமகள் பெற்றதொரு கோல மயில் என்பார்..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்.....

வியாழன், 6 ஜனவரி, 2011

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...

 இந்தப் பாடல் காதல் தேவதை எங்கின்ற வெளி வராத படத்திலிருந்து ஒலிக்கின்றது.

பாடலைக் கேட்ட உடனேயே புரிந்து போகும் இதன் வரலாறு. ஆனால் இந்த பாடலிலும் இதன் மறு பதிப்பான அடுத்தப் பாடலிலும் கவிதை வரிகளின் முதிர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரிகிறது. முதல் பாடலில் பல வரிகள் அர்த்தமே இல்லாமல் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நல்ல இசை இந்த இடத்தில் வீணடிக்கப்பட்டுள்ளது.
முதல் பாடல் 1991 இல் வெளியானதாக குறிப்பு உள்ளது ஆனால் அடுத்த பாடல் 1987 எங்கிறார்கள். இது இளையராஜா இசையில் வந்தது அடுத்தது கங்கை அமரன் இசையில் வந்தது. ஒரே குழப்பம்தான். இளையராஜாவா கங்கை அமரன் இசையை மறுபதிவு செய்திருப்பார்?

நன்றி தமிழ் உதயம்.

எனது மற்றொரு நண்பர் சொல்கிறார். காதல் தேவதை 1991 இல் வெளியானது. அது தெலுங்கு படத்தின் மறுபதிப்பு. தெலுங்கு படத்தில் இந்த இசையை இளையராஜா பயன்படுத்தி உள்ளார். அதுவே தமிழில் மொழி மாற்றம் பண்ணும் போதும் பாடலாக வெளிவந்துள்ளது என்று.
நன்றி என் குழப்பம் தீர்ந்தது

இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து கேட்டு பாருங்கள்

திரைப்படம்: காதல் தேவதை (1971) (வெளிவராத படம் எங்கிறார்கள்)
இசை: இளையராஜா
மேற்கொண்டு எந்த விபரமும் தெரியவில்லை 

 

http://www.divshare.com/download/13699947


அடுத்த பாடல்

திரைப்படம்: எங்க ஊரு பாட்டுக் காரன் (1987)

இசையும் பாடல் வரிகளும்: கங்கை அமரன்
நடிப்பு: ராம ராஜன், நிஷாந்தி, ரேகா
பாடியவர்கள்: நாகூர் பாபு எங்கின்ற மனோ மற்றும் சித்ரா
http://www.divshare.com/download/13699486-af5நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...


நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

ஊறும் பூந்தேனும் அமுதம்தான் வாடி பொன்வண்டும் நாடும் மொய்க்காத பாடி..

அடி ஆத்தி உண்டாகும் உள்காயம் நல்லா  புரிஞ்சாசி பொன்வண்டின் முன் மாயம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

அங்கெங்கே நீ தொட மெல்ல நான் தொட மெல்ல கையை தட்டி..
கொஞ்சிதா சின்ன குட்டி வெள்ளியிலான வெத்தலைப் பெட்டி..
என்னை நீ தாலி கட்டி மத்தளம் கொட்டி போடனும்ன் மெட்டி..
மன்னனே  மெல்ல கட்டி அள்ளுற பொண்ணு வெல்லக் கட்டி..
சின்ன சின்ன தீபமிட்டு நானும் நல்ல மெத்தையிட்டு..
நெஞ்சும் நெஞ்சும் ஆசை பட்டு சேரும் சேரும் தூக்கம் கெட்டு...

மின்னும்  பொன்னா வந்து நின்னாச்சு கை பட்டதாலே கூச்சம் விட்டாச்சு..
வண்டத்தான் பூந்தோப்பு யம்மா தொட்டு முத்தாட சந்தோஷம் அம்மா..
அடி கை தொடவும் கண் படவும் பாட்டுச் சொன்ன மாமன் இதோ...

நமக்குள்..
ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னா என்ன லாபம்...

பட்டு மேத்தை வாங்கி வச்சி பாலும் வச்சி பழமும் வச்சி...
பக்கம் இந்த பூவும் கொஞ்ச மெல்ல மெல்ல சூடும் இங்கே
நீயும் உன் வெட்கம் விட்டு தோளை தட்டி அழகாய் தொட்டு..
போதையில் சொல்லும் மெட்டு பருவக் கதை பேசுமடி..
சேலையொன்னு கட்டும் பெண்ணு ஏங்கும் இந்த கன்னிப் பெண்ணு..
ஆசையோடு ஒட்டிக் கட்டி யவனத்தை பாடுமடி..

உன்னை பாத்து வந்தேன் இங்கு மாமா நானும் கொஞ்சும்படி கண்டேன் இன்று மாமா
வச்சிக்க தண்ணியத்தா கூட தினம் கட்டிலிலே பொங்கி எங்கும் ஓட..
அதை நீ சொல்லவா நான் சொல்லவா ஆசை உன்னை அசத்திடுதோ..

நமக்குள்..
ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்னால் என்ன லாபம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்...இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

ஊறும் பூந்தேனும் அமுதம்தான் வாடி பொன்வண்டும் நாடும் மொய்க்காத பாடி..

அடி ஆத்தி உண்டாகும் உள்காயம் நல்ல புது காட்சி பொன்வண்டின் முன் மாயம்...

நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..இங்கு நிற்காது சின்ன பெண்ணின் ஆட்டம்...

அடுத்த பாடல்


பச்சரசி மாவிடிச்சி மாவிடிச்சி சக்கரையில் பாவு வச்சி பாவு வச்சி..
சுக்கீடிச்சி  மிளகிடிச்சி மிளகிடிச்சி பக்குவமா கலந்து வச்சி கலந்து வச்சி..
அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும் தாயே
மதுர  மரிக் கொழுந்து வாசம்..என் ராசாத்தி உன்னுடைய நேசம்..
மதுர மரிக் கொழுந்து வாசம்..என் ராசாத்தி உன்னுடைய நேசம்..

மானோட பார்வை மீனோட சேரும்..மானோட பார்வை மீனோட சேரும்..

மாறாம என்னை தொட்டு பேசும்.. இது மறையாத என்னுடைய  பாசம்..
மதுர மரிக் கொழுந்து வாசம்..என் ராசாத்தி உன்னுடைய நேசம்..

பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு.. பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..

பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு.. பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..
கட்டுனா கட்டிபுட்டே நெஞ்சை கொஞ்சம் தட்டிபுட்டே..
வெட்டும் இரு கண்ணை வச்சி என்னை கட்டி போட்டுபுட்டே..

கட்டுரது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா..
எப்போதோ விட்ட குறை மாமா அது இரவு சிறை கட்டுதையா தானா..
அது இப்போது வாட்டுதென்னை பாட்டு ஒன்னை அவிழ்த்துவிடு..
மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாவே உன்னுடைய நேசம்..
அடி மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாவே உன்னுடைய நேசம்..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தந்த தனனா...தந்த தனனா...தந்த தனனா...தந்த தனனா...
மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
சுத்தினா சுத்தி அதைஎன் கழுத்தில் போட்டுபிட்டே
ஒன்னை மட்டும் விட்டு பிட்டேன்..
தாலி கட்ட மறந்துபுட்டேன்..
நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் ஒன்னை பாடும் ஒன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ தெரிஞ்சதடி சிறகடிச்சி பறக்குதடி..

மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாத்தி உன்னுடைய நேசம்..

மானோட பார்வை மீனோட சேரும்..
மானோட பார்வை மீனோட சேரும்..
மாறாம என்னை தொட்டு பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
மதுரே
மரிக் கொழுந்து வாசம்..

என் ராசாத்தி உன்னுடைய நேசம்..
மதுரே
மரிக் கொழுந்து வாசம்..
என் ராசாவே உன்னுடைய நேசம்....

திங்கள், 3 ஜனவரி, 2011

காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

காதலில் ஊடலும் பின்னர் அனுசரிப்பும் இனிமையானது


திரைப்படம்: பாக்யலக்ஷ்மி (1961 )
இயக்கம்: K V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, சௌகார் ஜானகி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்திhttp://www.divshare.com/download/13677373-a35காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ...

முன்னாலே உறவும் வேண்டுமன்றோ...

முன்னாலே உறவும் வேண்டுமன்றோ...தூது சொல்வார்க்கென யாருமில்லை...சொல்வதில் முன் பின் பழக்கமில்லை...

நேரடியாகவே தேடி வந்தேன்...நேரிழியே நீ அருள் புரிவாய்...வாங்கிய பூஜைகள் போதாதா...மங்கையின் பின்னால் வரலாமா...

ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்...என் ஆசையும் அன்பும் கிடைக்காது...ஹா ஹாஹாஹா ஹாஹா ஆ ஆ ஆ ஆஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹாஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்... பாடச் சொன்னாலும் பாடுகிறேன்...

பாவையே உந்தன் காதலிலே பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்...காதல் பைத்தியம் பொல்லாது..கையும் காலும் நில்லாது..

வாராய் எந்தன் பைத்தியமே மனசுக்கு செய்வேன் வைத்தியமே...ஹா ஹாஹாஹா ஹாஹா ஆ ஆ ஆ ஆஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹாகாதலை படைத்தவன் பேர் வாழ்க..அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க..கடற்கரை சோலை தினம் வாழ்க...கலந்தோம் இணைந்தோம் நாம் வாழ்க...ஹா ஹாஹாஹா ஹாஹா ஆ ஆ ஆ ஆகாதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...

காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே

அழகான காதலை அளவாக தெரிவிக்கும் பாடல்


திரைப்படம்: திருமகள் (1971 )
இயக்கம்: A S A ஸ்வாமி
நடிப்பு: ஜெமினி, பத்மினி
இசை: K V மகாதேவன்

http://www.divshare.com/download/13677166-94dகாலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வேன்...

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வேன்...

காதோரம் கூந்தல் இறங்க...கட்டழகு  மேனி மயங்க...கையோடு வளையல் குலுங்க...கட்டிக் கொள்வேன் காதல் விளங்க...

காதோரம் கூந்தல் இறங்க...கட்டழகு மேனி மயங்க...கையோடு வளையல் குலுங்க...கட்டிக் கொள்வேன் காதல் விளங்க...

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வேன்...குறுஞ்சி பூவைப் போல் மணக்கும்...உன் குறு நகை என்னை இழுக்கும்...

குறுஞ்சி பூவைப் போல் மணக்கும்...உன் குறு நகை என்னை இழுக்கும்...கோவைச் செங்கணி இனிக்கும்... அதை கொடுக்க ஆசைதான் எனக்கும்...கொட்டும் விழி என்ன அதில் முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் இட்டுவிடவோ...ஓ ஓ ஓ கொண்டு வந்த தேன் குடத்தை வண்டு வந்து பார்த்த பின்பு...உண்டுவிடக் கேள்வி என்னவோ...ஹொ ஹோ கொட்டும் விழி என்ன அதில் முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் இட்டுவிடவோ...கொண்டு வந்த தேன் குடத்தை வண்டு வந்து பார்த்த பின்பு...உண்டுவிடக் கேள்வி என்னவோ...காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வாய்...

பவளப் பூவைப் போல் இருக்கும்...உன் பருவம் கையிலே மிதக்கும்...

பவளப் பூவைப் போல் இருக்கும்...உன் பருவம் கையிலே மிதக்கும்...தவழும் பிள்ளைப் போல் துடிக்கும்..இந்த சரசம் வேறெதில் கிடைக்கும்...அத்தை மகள் முத்து நகை ரத்தினத்தை மெத்தையிட்டு மத்த கதை சொல்லித் தரவோ...ஹா ஹா விட்ட குறை தொட்ட குறை மிச்சமில்லை என்றபடி அத்தனையும் அள்ளித் தரவோ...ஹோ ஹோ அத்தை மகள் முத்து நகை ரத்தினத்தை மெத்தையிட்டு மத்த கதை சொல்லித் தரவோ...விட்ட குறை தொட்ட குறை மிச்சமில்லை என்றபடி அத்தனையும் அள்ளித் தரவோ...காலாலே...நிலம் அளந்து ...கண்ணாலே...முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து...நூறு முறை ஜாடை செய்வேன்...ஹா ஹா ஹா ஹா... ம் ம் ம் ம் ம் ....

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இனிமையானது அந்த இறைவன் போன்றது ,,,இறைவன் போன்றது ,,,

ச்பாஷ் சரியான ஆரோக்கியமான போட்டி என்றே சொல்லத் தோன்றுகிறது.


திரைப்படம்: மன்மத ரதங்கள்  (1980)
நடிப்பு: அருண் குமார், ஸ்ரீகீதா
இசை: K V மகாதேவன்
இயக்கம்: K ஷங்கர்
பாடியவர்கள்: SPB, வாணி ஜெயராம்
http://www.divshare.com/download/13588859-517


இனிமையானது அந்த இறைவன் போன்றது... இறைவன் போன்றது...

அது புனிதமானது... காதல் பொருள் நிறைந்தது...காதல் பொருள் நிறைந்தது...

ஆஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஹா...காதல் என்பது வெறும் கவிதை சொல்வது கவிதை சொல்வது...

கடமை என்பதே அந்த கடவுள் தந்தது...கடவுள் தந்தது...

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்மௌனக் கலையிலே மயங்கும் நிலையிலே ஞானம் பெறுவது நன்றி மிகுந்தது காதல்...பள்ளி வயதிலே...பருவ வெறியிலே..துள்ளி விழுவது...துண்பம் தருவது காதல்...கண்ணாலே கோவில் கட்டும் காதல்...மண்ணாலே வீடு கட்டும் காதல்...இனிமையானது அந்த இறைவன் போன்றது...இறைவன் போன்றது...கடமை என்பதே அந்த கடவுள் தந்தது...கடவுள் தந்தது...நெஞ்சம் அறியவே வஞ்சம் புரிபவர் நெஞ்சை சுடுவது நெருப்பாய் எரிவது காதல்...உள்ளத் திரையிலே உண்மை வடிவிலே...கள்ளம் புரிவது கபடம் நிறைந்தது காதல்...கண்ணாலே கோவில் கட்டும் காதல்...மண்ணாலே வீடு கட்டும் காதல்...

காதல் என்பது வெறும் கவிதை சொல்வது கவிதை சொல்வது...அது புனிதமானது... காதல் பொருள் நிறைந்தது...காதல் பொருள் நிறைந்தது...

கடல்கள் பிரிக்கலாம்...கண்ணை மறைக்கலாம்...உடல்கள் பிரியலாம் உயிர்கள் இணைவதே காதல்...ஓடிச் சென்ற நாள்...உதிர்ந்த பூக்களே..தாலியின் மங்களம் தர்மத்தின் மந்திரம் காதல்...கண்ணாலே கோவில் கட்டும் காதல்...மண்ணாலே வீடு கட்டும் காதல்...காதல்...

காதல்...

காதல்...

பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

இனிமையான பாடல்


படம்: ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு (1974)
இசை: V குமார்
நடிப்பு: சிவகுமார்
இயக்கம்: R சண்முகம்
பாடியவர்: SPB, P சுசீலாhttp://www.divshare.com/download/13363008-5f0


பால் மணம் பூ மணம் பாவை மணம்

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட...

கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட...

காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்ச வா...

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கிது பிருந்தாவனம்

வாடைதான் பட்டாடை இழுக்கும் செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்...

கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ கண் பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ..

பூ முத்தம் வேண்டும் கன்னம் புண் படும் என்றா எண்ணும்...

எல்லாம் இன்று தந்தால் நாளை மிச்சம் வேண்டுமே...

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கிது பிருந்தாவனம்

கால் முதல் என் கூந்தல் வரையில் உன் காவியம் சொல் பள்ளியறையில்...

சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை...

சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை...

அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை...

ஆனந்த ராகம் ஒன்று..ஆரம்பம் ஆகும் அன்று..

ஆனந்த ராகம் ஒன்று..ஆரம்பம் ஆகும் அன்று..

ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே...

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கிது பிருந்தாவனம்