பின்பற்றுபவர்கள்

சனி, 29 ஜூன், 2013

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

எண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

சந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந்திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ “வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்” என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த “அண்ணனுக்கு ஜே” படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் “உங்கப்பனுக்கும் பே பே” என்று “ராஜா சின்ன ரோஜா”விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள்.


1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் ‘இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே” ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.

இப்படி சொல்பவர் கானாபிரபா...

நன்றி: http://www.radio.kanapraba.com

இதயத்தை மயிலிரகால் வருடுவது போல ஒரு பாடல் மறைந்த திரு சந்திரபோஸ் அவர்களிடம் இருந்து. நடிகர் ராம்ஜிகென S P B மிக மென்மையாக பாடியிருக்கிறார்.

எவ்வளவோ முயன்றும் பாடல் காட்சி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். பாடல் காட்சி கிடைத்து இன்று இங்கே தரமேற்றியிருக்கிறேன். ரசிப்போம்..

திரைப் படம்: வடிவங்கள் (1982)

நடிப்பு: ராம்ஜி (ராம்ஜி வேறு ராம்கி வேறா?), ராதிகா???

இயக்கம்: மதுக்கூர் கண்ணன்

குரல்கள்: S P B, வாணி ஜெயராம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xNDkyNTk5MF94ZEJOZ19iZDNi/IdhayaVaanil.mp3இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்பு தருகின்றதே

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்பு தருகின்றதே

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

கரையோரம் அலைகளே விளையாடும் பொழுதிலே
ஆசைக்கு முடி சூட்டவா
இமையோரம் விழிகளே கதை பேசும் நிலையிலே
இன்பங்கள் நெஞ்சோடு உறவாடுமே

இது என்ன கூந்தலா
மலாராடும் ஊஞ்சலா
இதழென்ன தேனடைதானோ
நீயே என் கண்மணி
சுவையூரும் மாங்கனி
சிந்தாமல் சிரிக்கின்ற சிந்தாமணி

இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

ல லா லா லா லா ல

செதுக்காத சிற்பமோ
படிக்காத நாவலோ
சிங்கார கலைக் கூடமோ
கவி பாடும் வேளையில்
ரவிவர்மன் ஓவியம்
கண்ணான கண்ணே உன் உருவானதோ

ஒரு கோடி ஆசைகள்
உள்ளத்தின் ஓசைகள்
உருவாகும் சங்கீதமே
உன் பார்வை மோகனம்
நானே உன் சீதனம்
உனக்காக என்றென்றும் நான் சொந்தமே
இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே

இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

வசந்தங்கள் அழைக்கின்றதே

வரவேற்பு தருகின்றதே
ந ந ந நான ந ந ந நானன ந ந ந நான நா
ந ந ந நான ந ந ந நானன ந ந ந நான நா

வியாழன், 27 ஜூன், 2013

நீல வண்ண கண்ணா வாடா

அருமையான தாலாட்டு பாடல். படமாக்கி இருக்கும் விதம் அழகு. மனசு குளிர ஒரு பாடல். மென்மையான தாலாட்டு.

திரைப் படம்: மங்கையர் திலகம் (1955)
இசை: S தக்ஷிணாமூர்த்தி
பாடியவர்கள்: R பாலசரஸ்வதி
பாடல் வரிகள்: மருதகாசி
இயக்கம்: L V பிரசாத்
நடிப்பு: சிவாஜி, பத்மினி

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDczMzc2NV9hSDJWcF8wNjFk/Neela%20Vanna%20Kanna[128].mp3

நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா
நீல வண்ண கண்ணா வாடா

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லா கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா
என்னவென்று சொல்வேனப்பா

நீல வண்ண கண்ணா வாடா

வானம்பாடி கானம் கேட்டு
வசந்த கால தென்றல் காற்றில்
வானம்ப்பாடி கானம் கேட்டு
வசந்த கால தென்றல் காற்றில்

தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

நீல வண்ண கண்ணா வாடா

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீல வண்ண கண்ணா வாட

நடுங்க செய்யும் வாடை காற்றே
ஞாயமில்லை உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை என்றே
கேட்கும் மதியை பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லா செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே

நீல வண்ண கண்ணா வாடா

செவ்வாய், 25 ஜூன், 2013

வண்டு வந்து மெல்ல மெல்ல

From vikatan
‘ஆச்சி’ மனோரமா:
”நாகேஷோடு நான் சேர்ந்து நடிச்ச முதல் படம் ‘நாகமலை அழகி’. அப்ப நாகேஷ், ரொம்ப ஒடிசலா இருப்பார். என் கையைப் புடிச்சுக்கிட்டு நாகேஷ் நடிக்கிற காட்சிகளின்போது எங்கம்மாவுக்குப் பயங்கரமா கோபம் வரும். ‘அவரைச் சாதாரணமா நினைக்காதீங்க. திறமைசாலி… நிச்சயம் பெரிய ஆளா வருவார்’னு நான் என் அம்மாவைச் சமாதானப்படுத்துவேன். ஆரம்ப நாட்களில் டான்ஸ் காட்சிகள் என்றாலே நாகேஷூக்கு அலர்ஜி. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷன்ல ‘தெய்வத்தின் தெய்வம்’ படப்பிடிப்பு சமயம், நாகேஷ் நடனக் காட்சிகளில் நிறைய டேக்குகள் வாங்கினார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆயிட்ட டைரக்டர், அந்தப் பாட்டையே படத்திலிருந்து தூக்கிட்டார். அந்த சம்பவம் நாகேஷ் மனசுல ஆறாத காயத்தை உண்டாக்கிடுச்சு. அனா, அதையே வைராக்கியமா எடுத்துக்கிட்டு, சுந்தரம் மாஸ்டர்கிட்ட சில மாதங்கள் இரவும் பகலும் நடனத்தைக் கத்துக்கிட்டார். அப்புறம் சினிமாவில் ‘நாகேஷ் டான்ஸ்’னு ஒரு புது வகை நடனம் உருவாகிற அளவுக்கு டான்ஸ்ல பிரமாதப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.
பாலசந்தர் சாரின் ‘நவக்கிரகம்’ படத்தில் நடிக்கும்போது நாகேஷோடு எனக்கு மனஸ்தாபம் ஆயிருச்சு. அதைச் சரிசெய்து, எங்களை நடிக்கவைக்க பாலசந்தர் சார் ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனா, அவரால முடியலை. அதுக்கப்புறம் முப்பது வருஷத்துக்கும் மேல நான் நாகேஷோடு சேர்ந்து நடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழாவுல நான், நாகேஷ், பாலசந்தர் சார் மூணு பேரும் கலந்துக்கிட்டோம். அப்போ பாலசந்தர் சார், எங்க ரெண்டு பேரையும் மேடைக்குக் கூப்பிட்டு, பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சுக்கிட்டு, ‘இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்க, எனக்கு 30 வருஷத்துக்கு மேலாயிடுச்சு’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். ‘ஹாலிவுட் நடிகர் ஜெரி லூயிஸ்தான் என் குருநாதர்’னு அடிக்கடி என்கிட்டே சொல்வார் நாகேஷ். நான் ஒரு சமயம் அவர்கிட்ட, ‘ஆனா நீங்க நடிச்ச ‘வைத்தி’, ‘தருமி’ கேரக்டர்களை லூயிஸை நடிக்கச் சொன்னா, அவரால நிச்சயமா முடியாது’ன்னு சொன்னேன். என்னை ஆச்சர்யமா பார்த்தார்.
ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்காம, எப்பவுமே துறுதுறுன்னு சுறுசுறுப்பா இருப்பார். அப்படிப்பட்டவர் இப்போ சலனமே இல்லாம கண்ணாடிப் பெட்டிக் குள்ள படுத்திருக்கிறதைப் பார்க்குறப்போ, ‘சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ’ன்னு கண்ணதாசன் பாட்டுதான் ஞாபத்துக்கு வருது!” கண்ணீரோடு முடிக்கிறார் ஆச்சி.
nanri: http://awardakodukkaranga.wordpress.com/

படம்: நாகமலை அழகி
பாடகர்கள்: எ.ல். ராகவன், ஜமுனாராணி
மேற்கொண்டு இந்த படத்தினைப் பற்றிய விபரங்கள் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை.

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDYwNTk5OF9yelFnb18yYmQ1/Vandu%20Vanthu%20Mella.mp3வண்டு வந்து மெல்ல மெல்ல
வண்டு வந்து மெல்ல மெல்ல
கண்ணுக்குள்ளே செல்ல செல்ல
ஏனோ இங்கு வந்த அழகன்
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல

பிள்ளை மொழி சொல்ல சொல்ல
வெல்லும் விழி கொல்ல கொல்ல
ஏனோ இங்கு வந்த அழகி
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
மலரோடு மனம் போல நாமே
இந்த உடலோடு உறவாடும் நிலவே
மலரோடு மனம் போல நாமே
இந்த உடலோடு உறவாடும் நிலவே
என் நெஞ்சோடு நீயாடும் சுவையே
நெஞ்சோடு நீயாடும் சுவையே
இனி நீயின்றி என் வாழ்வும் இல்லையே
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல

பேசாமல் பேசும் உன் விழியே
தேடாமல் தேடும் என் உயிரே
பேசாமல் பேசும் உன் விழியே
தேடாமல் தேடும் என் உயிரே

காணமல் காணும் என் எழிலே
காணமல் காணும் என் எழிலே
இனி நீயின்றி என் வாழ்வும் இல்லையே
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல

வண்டு வந்து மெல்ல மெல்ல
கண்ணுக்குள்ளே செல்ல செல்ல

ஏனோ இங்கு வந்த அழகி
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல

ஞாயிறு, 23 ஜூன், 2013

மாமா பிள்ளை மாப்பிள்ளே மாலையிட்டான் தோப்புளே

ஜானகி அம்மாவின் குரல் இனிமையோ இனிமை. கிராமத்து சாயலில் ஒரு இனிமை நிறைந்த காதல் டூயட். பட காட்சியில் தோன்றுபவர் தேவிகாவா?

திரைப் படம்: ஆயிரம் காலத்துப் பயிர் (1963)
நடிப்பு: T S துரைராஜ், பாலாஜி, தேவிகா.
இயக்கம்: T S துரைராஜ்
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: T M S, S ஜானகி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDYwNDI4Nl9iOXAxMV85ODBj/maama%20pillai%20maapillai-Aayiram%20kaalathu%20payir.mp3மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே
சாதி சனம் பார்க்கலே
தடையிருந்தும் நினைக்கலே
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
தொட்டு வந்தா பின்னாடி
தொடர்ந்து வந்தா முன்னாடி
அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

பூ முடிச்சான் தலையிலே
பொட்டும் வச்சான் முகத்திலே
பூ முடிச்சான் தலையிலே
பொட்டும் வச்சான் முகத்திலே
கட்டி வச்சான் கையிலே
கலந்துவிட்டான் நெஞ்சிலே
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

கட்டி வெல்லம் மாம்பழம்
கரைச்சி வச்சேன் தேன் குடம்
வெட்டி விட்டா கண்ணிலே
விழுந்துவிட்டேன் பெண்ணிலே
அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

மானம் காக்க சேலையும்
மனசு போல புருஷனும்
சேர்ந்து வந்த பொண்ணுக்கு
தெய்வம் தோனும் கண்ணுக்கு
சேர்ந்து வந்த பொண்ணுக்கு
தெய்வம் தோனும் கண்ணுக்கு
மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

கூட்டி வச்ச கடவுளே
கோடிக் காலம் வாழ்கவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கூட்டி வச்ச கடவுளே
கோடிக் காலம் வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே

மாமா பிள்ளை மாப்பிள்ளே
மாலையிட்டான் தோப்புளே

அம்மா பொண்ணு ராசாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

வெள்ளி, 21 ஜூன், 2013

எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

நானும் கேட்டிராத பாடல். இந்தப் பாடலின் மெட்டில் இதற்கு பிறகு ஒரு பாடல் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 


திரைப்படம்: ஆலய தீபம் (1984)

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: C V ஸ்ரீதர் 
நடிப்பு: ஜெயஷங்கர், சுஜாதா, ராஜேஷ், சுரேஷ், இளவரசி.
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு
ஹா ஹா ஹா ஹா  ஆஆஆ
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு


கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

மோகம் தாளாமல் நானே மாற
என்னை பாராட்டு நான் ஏமாற
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

 உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு

ஹா ஹா ஹா ஹா   ஆஆஆ

வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணின் தீபம் போதும்
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணின் தீபம் போதும்

காதல் யாகங்கள் செய்யும் போதும்
தேகம் உண்டாக்கும் தீயே போதும்
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு
முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை
என்னைச் சூடாக்கும் ஈரப்பார்வை

பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை
உந்தன் நோய் தீர ஏதோ தேவை
எண்ணிச்சொல்லவா உன் முத்தக்கணக்கு

முன்னூறைத்தொட்டது ஏன் இன்னும் வழக்கு

உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு
ஹா ஹா ஹா ஹா   ஆஆஆபுதன், 19 ஜூன், 2013

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

தெளிந்த நீரோடை போல் கருத்துள்ள ஒரு பாடல். இதில் உள்ள எழுத்துக்களின் விளக்கம் நமக்கு எல்லோருக்கும் தெரிந்தே நாம் இன்னமும் இல்லாத இடத்தில் நமக்கான பொருளைத தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். விதி வலியது.

(எனக்கொன்னும் ஆகவில்லை நண்பர்களே....சொன்னால் நம்புங்கள்!!)

நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்

இவர்கள்தான் இன்றைக்கு  நம் நாட்டில் அதிகம்.


நல்ல, அர்த்தம் பொதிந்த பாடல். சீர்காழியின் கம்பீரமானப் பாடல்.

படம் : திருவருட் செல்வர் (1967)
இசை : K V மஹாதேவன்
பாடியது : சீர்காழி S கோவிந்தராஜன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி
இயக்கம்: A P  நாகராஜன்
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTE2Nzc2OV9hZ2haQ19lMDFk/Irukkumidathai%20vittu.mp3இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளி  விட்டு
தொட்டிலை ஆட்டிவிட்டு
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே


 

திங்கள், 17 ஜூன், 2013

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்

திரு மருதூர் கோபாலகிருஷ்ணன், சத்யா பாமா ஆகியோருக்கு இலங்கையில் கண்டி அருகே நாவலபட்டியாவில் பிறந்தவர்கள் சக்கர பாணி, ஒரு பெண் குழந்தை மற்றும் எம் ஜி யார். அந்தப் பெண்  குழந்தை  சிறிய  வயதில் இறந்து போனது.

தந்தையார் மாஜிஸ்ட்ரேட் ஆக வேலை செய்தவர்.
அவரது இறப்புக்குப பின் சொந்த ஊரான கேரளாவில் அவரது தந்தையின் இன்னொரு மனைவியுடன் தங்க வந்தார்கள். அங்கே அவரது கொடுமை தாங்காமல், ரங்கூன் சென்றார்கள். பின்னர் தமிழ் நாட்டில் ஈரோடில் வந்து குடியிருந்தார்கள். அங்கிருந்து விரைவில் கும்ப கோணம் சென்றார்கள். அங்கே ஏழ்மை காரணமாக மூவரும் அங்கே இயங்கிக் கொண்டிருந்த நாடக ட்ரூப்பில் சேர்ந்தார்கள்.

M G R க்கு திரைப் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. பார்கவி என்ற பெண்ணை மணந்தார். அவர் 3 மாதங்களில் நோய்வாய்பட்டு இறந்தார். பின்னர் சதானந்தவதியை மணந்தார். அவரும் விரைவில் இறந்தார்.

பின்னர் அவரது வாழ்வில் வந்தவர் V N ஜானகி. இவர் தனது முந்தய கணவரை விலக்காமல் (கணபதி பட்) M G Rய் மணந்தார் என்கிறார்கள்.

பின்னர் M G R வாழ்க்கை வரலாறு பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இதுவரை நான் கூறிய M G R இன் வரலாறும் எந்த அளவுக்கு சரியானது என்பது எனக்குத் தெரியாது. இது எம் ஜி யாரின்  பேரன் M G C B பிரதீப்  அவரது  இணைய  தளத்தில் ஆங்கிலத்தில் உள்ளதின்
தமிழாக்கம்.  ஏதாவது தவறு இருப்பின் அவரைப் பற்றிய முழு விபரம் தெரிந்தவர்கள் என்னை மன்னிப்பார்களாக.

நன்றி: M G R பேரன் M G C B Pratheeb.-mgrperan.blogspot.com

padagoti_reserve


 M G R காதல் வாகனம் என்ற திரைப் படத்தில்.

M G R அவர்களின் முதல் மனைவி தங்கமணி பார்கவி

MGR அவர்களின் அட்டகாசமானப் பாடல்களில் ஒன்று.
இசை, பாடும் குரல்கள், நடிப்பு, பாடல் வரிகள், பட பிடிப்பு, கலர், நடன அமைப்பு என எதிலும் குறை சொல்ல முடியாத ஒரு பாடல்.

"ஆயிரம் சுகமல்லவா
ஹோய்
ஆயிரம் சுகமல்லவா" எனச் சொல்ல வைக்கும் பாடல்.

திரைப் படம்: படகோட்டி (1964)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ்ராவ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDczMjk0N19oeTEza184YTFj/thottal%20poo%20malarum.mp3

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை

நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை
ஹோய்
ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை
ஹோய்
இளமை முடிவதில்லை

எடுத்துக்கொண்டாலும்
கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை
ஹோய்
பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பக்கம் நில்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை
ஹோய்
பித்தம் தெளிவதில்லை

வெட்கமில்லாமல்
வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை
ஹோய்
சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லவா
ஹோய்
பாவை முகமல்லவா

அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா
ஹோய்
ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

ஆஹா ஹா ஆஹா ஹா  ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹ ஹ ஹ ஹா 

சனி, 15 ஜூன், 2013

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி

ஹிந்தி திரையுலகின் கனவுக் கன்னி ஹேமமாலினியின் முதல் திரைப் படம் இது. ஒரு பாடலுக்கு மட்டுமே தலைக் காட்டினார். பின்னர் வெண்ணிற ஆடைக்காக 1965ல் ஸ்ரீதர் அவரை மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என ஒதுக்கிவிட்டார். 1968 ல் முதல் இந்தி படத்தில் நடித்தவர் பின்னர் பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்கவே இல்லை

கணீர்க்குரலோன் சீர்காழியும் ஈஸ்வரியும் பாடியுள்ள இந்தப் பாடலை இயக்கி இருந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். 
பாடலின்  ஆரம்ப இசையே மனதை அள்ளிக் கொண்டு போகும். 


திரைப்படம்: இது சத்தியம் (1963)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
நடிப்பு: அசோகன், சந்திர காந்தா 
இயக்கம்: தெரியவில்லை 
ஒஹோ  ஹோ யாஹு யாஹு
ஒஹோ  ஹோ யாஹு யாஹு
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி 
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
தேருக்கு முன்னாலே காளை கட்டி
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேராத மனசுக்குப் பாலமாகும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலுவென  இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேராத மனசுக்குப் பாலமாகும்

சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்

அது  அங்குமிங்கும் ஓடாம அடுத்தத நாடாம 
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்

ஆஹா கொள்ளையோ கொள்ளையென்று உள்ளமே மதுவுண்டு
தள்ளாடித் தள்ளாடி நடமாடும் 
ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி 
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலுவென  இழுத்து வந்தா 
அது தேராத மனசுக்குப் பாலமாகும்


சிங்காரத் தேருக்கு சேலை கட்டி 
சின்னச் சின்ன இடையினில் பூவைக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா 

இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்