பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 மார்ச், 2011

பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...


மீண்டும் S P Bயின் அழகான பாடல் ஒன்று.


திரைப் படம்: அன்னப் பறவை (1980)
இசை: R ராமானுஜம்
இயக்கம்: A பட்டாபிராமன்
நடிப்பு: ஸ்ரீகாந்த், லதா





http://www.divshare.com/download/14450652-7eb



ஹா ஹா ஹா ஹா ம் ம் ம் ம் ஹா ஆ ஆ ஆ
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
ஆ ஆ ஆ ஆ ஆ
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
இடை என்ன இடையோ கொடி வந்த மலரோ..
அழகே உயிரே பூச்சரமே...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...ஓ ஓ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
ஆ ஆ ஆ ஆ ஆ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
இனியென்ன தடையோ இனிக்கின்ற கனியோ..
வருவாய் தருவேன் இதழ் ரசமே..
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...





துளித் துளித் துளித் துளி மழைத் துளி..

இனிமையான பாடல். வாலிப வயதில் ஒரு வித கிறக்கத்தை உண்டு பண்ணிய பாடல் இந்த பாடல்.

முரட்டு சிவகுமாரை கன்னட மஞ்சுளா வசியம் பண்ணும் பாடல். திருமதி P சுசீலா அவர்களும் அதே இளமை ததும்ப பாடி இருக்கிறார்.

திரைப் படம்: புது வெள்ளம் (1975)
இசை: M B  ஸ்ரீனிவாசன்
இயக்கம்: K விஜயன்
குரல்: P சுசீலா



http://www.divshare.com/download/14370271-997


துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..
ஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..

இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்..
இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..
ஆ ஆ ஆ ஆ ஆ
பூமிக்கு தீர்ந்தது தாபம்..
இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா...
ல ல ல ல லலல...
ம் ம் ம் ம் ம் ம்..

நான் வாழ்வது வேறொரு உலகம்..
அங்கு நீயின்றி எனக்கது நரகம்..
நான் வாழ்வது வேறொரு உலகம்..
அங்கு நீயின்றி எனக்கது நரகம்..
என்னை வாட்டுது வாலிப விரகம்...
என்னை வாட்டுது வாலிப விரகம்...
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்..
ல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..
ஹா ஹா ஹா ஹா..
ம் ம் ம் ம் ம்..
துளித் துளித் துளித் துளி மழைத் துளி..

இங்கு சில்லென வீசிடும் காற்று..
என்னை கொல்வது ஏனென்று கேட்டு..
உந்தன் கையெனும் போர்வையை போட்டு..
உந்தன் கையெனும் போர்வையை போட்டு..
கொஞ்சம் கதகதப்பை நீ ஏற்று..
துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
அது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..
ஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..
ல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..
ஹா ஹா ஹா ஹா..
ல ல ல ல ல..
ம் ம் ம் ம் ம்..

புதன், 30 மார்ச், 2011

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா

ஒரு குடும்பப் பெண்ணின் நல்ல எதிர்ப்பார்ப்புக்களை அழகாக வடித்திருக்கிறார்கள் .


திரைப் படம்: வாழ நினைத்தால் வாழலாம் (1978)
பாடியவர்: S ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்



http://www.divshare.com/download/14335048-844

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,
உலகமே புகழ்ந்ததே, அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே,

கண்ணனோடு ராதை என்றார், ராமனோடு சீதை என்றார்,
அருகு போல வேர்கள் கண்டோம், மூங்கில் போல சொந்தம் கொண்டோம்,
எனை உனக்கென ஈசன் வைத்தான், இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம், உலகம் எங்கும் பாட்டு
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,

ஆறு ஒன்று ஓடும்போது கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மை போல வாழ வேண்டும்
இது இறைவனின் காதல் கட்டில், ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை, தலைவி என்னும் வீணை
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,

செவ்வாய், 29 மார்ச், 2011

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா

மீண்டும் ஒரு இளமையான இனிமையான பாடல் எஸ் பி பி யிடமிருந்து. அதே கொஞ்சல், குறும்புகளுடன். இனிய தென்றலே எஸ் பி பி இனிமையாக பாடி வா வா என்று அழைக்கலாமா?


திரைப் படம்: அம்மா பிள்ளை (1990)
இசை: சங்கர் கணேஷ்
பாடல்: வாலி
நடிப்பு: ராம்ஜி, சீதா
இயக்கம்: R C சக்தி



http://www.divshare.com/download/14435325-a83








இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஓ ஓ ஓ ஓ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

தரையில் வந்த சொர்க்கம் எனத் தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும் அது அழகின் ஆலயம்
பவளம் போலும் தேகம் அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும் நல்ல அமுத பாத்திரம்
இளமை என்னும் நாவல் அவள் தான் அவள் தான்
கனவில் அதை நாளும் படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

கருமையான கூந்தல் நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்
அசைந்து மெல்ல அசைந்து என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல் இவள் இடை காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து என்னை அணைக்கச் சொன்னது
நடந்தால் வண்ண பாதம் சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் எந்தன் நெஞ்சம் தவிக்கும் தவிக்கும்
இதை நான் எங்கு சொல்வது

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவிவர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
ஓ ஓ ஓ ஓ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடி வா

ஞாயிறு, 27 மார்ச், 2011

மலர்கள் நனைந்தன பனியாலே...மலர்கள் நனைந்தன பனியாலே

பாடலாசிரியர்கள் கண்ணதாசனும் வாலியும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஆண் பென் உறவை கொச்சைப் படுத்தாமல் அழகாக கவி நயத்துடன் வெளிப் படுத்துவதில் வல்லவர்கள். அந்த வரிசையில் இந்த பாடல் ஒரு பெண்ணின் முதல் இரவுக்கு பின் அவள் அந்த இரவின் உறவை ரசித்து பாடுவதாக அமைந்தது. குரலும் இசையும் கவிதையுடன் இணைந்து ஒலிக்கின்றது


திரைப் படம்: இதயக் கமலம் (1965)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ரவிசந்திரன். K R விஜயா:
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்: P சுசீலா




http://www.divshare.com/download/14405876-d41






மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே


சனி, 26 மார்ச், 2011

பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...

S P B அவர்களின்  ஆரம்ப கால பாடல்களே தனிச் சுவைதான்...

திரைப் படம்: நிலவே நீ சாட்சி (1970)

பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: SPB
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: P மாதவன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா



http://www.divshare.com/download/14405862-dcf



ம் ம் ம் ம் ம் ம் ம் ஹா ஹா ஹா ஹா ஹா

பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...

பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...
பெண்ணை பார்த்தால் சொல்ல தோன்றும் இன்னும் நூறாயிரம் ..
இன்னும் நூறாயிரம்..

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து..
மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து...
கோதை மதுவாக பொன் மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து...
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து...
பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...
பெண்ணை பார்த்தால் சொல்ல தோன்றும் இன்னும் நூறாயிரம்...

கோடை வசந்தங்கள் குளிர் காலம் என்று...
ஓடும் பருவங்கள் கண நேரம் நின்று...
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு..
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று..
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று..

கன்னி இளம் கூந்தல் கல்யான பள்ளி..
கண்கள் ஒளி வீசும் அதி காலை வெள்ளி...
கன்னி இளம் கூந்தல் கல்யான பள்ளி...
கண்கள் ஒளி வீசும் அதி காலை வெள்ளி...
தென்றல் விளையாடும் அவள் பேரை சொல்லி...
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி...

இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி..



புதன், 23 மார்ச், 2011

கண்களும் காவடி சிந்தாகட்டும்,காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்


உண்மையிலேயே சில தமிழ் திரைப் படப் பாடல்கள் கோழையையும் வீரனாக்கும் வகையில் கவிதைகள் எழுதி, இசையமைக்கப்பட்டு பாடலாகி இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்று.


திரைப் படம்: எங்க வீட்டு பிள்ளை (1965)
இயக்கம்: சாணக்கியா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
குரல்: L R ஈஸ்வரி குழுவினருடன்
பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு






http://www.divshare.com/download/14308918-b53








கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்,
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ
 ஹா ஹா ஹா ஹா ஹா..
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளயர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்,
மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்
கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்
என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கையிலே அன்பு ஒலி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

செவ்வாய், 22 மார்ச், 2011

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா..ஏனடி நீராடுது...

1976 இல் வெளி வந்த படங்களில் இடம் பெற்ற பாடல்களில் இந்த பாடல் தனி இடம் பிடித்தது. கர்னாடக ஸங்கீதத்தின் அடிப் படையில் அமைந்த அருமையான பாடல்களில் ஒன்று. சங்கீத வித்வான் K J ஜேஸுதாசுக்கு இணையாக ஈடு கொடுத்து பிரமாதமாக பாடி இருக்கிறார் திருமதி P சுசீலா அவர்கள்.


திரைப் படம்: மதன மாளிகை (1976)
இசை: M B ஸ்ரீனிவாசன்
நடிப்பு: சிவகுமார், அல்கா, மஞ்சுளா
இயக்கம்: K விஜயன்




http://www.divshare.com/download/14357656-d11





ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...

அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..ஆ.. ஆ..
அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..ஆ.. ஆ..

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..
ஆ ஆ ஆ ஆ
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..

அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
ஆ..ஆ..ஆ..ஆ..

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும்
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும்

காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


பூரண கும்பம் ஏந்தி நடந்தால்
நூலிடை பாவம் வருந்தாதோ
காதலன் கைகள் தாங்கி நடந்தால்
பாரமும் கொஞ்சம் குறையாதோ
என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
சோதனை போட்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..

அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
ஆ..ஆ..ஆ..ஆ..

ஏரியிலே ஒரு..
ஆ ஆ ஆ
காஷ்மீர் ரோஜா..
ஆ ஆ ஆ ஆ
ஏனடி நீராடுது...
ஆ ஆ ஆ ஆ


திங்கள், 21 மார்ச், 2011

என் அன்னை செய்த பாவம்..நான் மண்ணில் வந்தது..

சோகத்தை குரலிலும் இசையிலும் அப்படியே பிழிந்தெடுத்தாலும் மனதுக்கு நிறைவான பாடல்.


திரைப் படம்: சுமைதாங்கி (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்: S ஜானகி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
நடிப்பு: முத்துராமன், ஜெமினி, தேவிகா



http://www.divshare.com/download/14237119-aa6







என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..

என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..

என் அன்னை செய்த பாவம்..
நம் கண்கள் செய்த பாவம்..
நாம் காதல் கொண்டது..
இதில் கடவுள் செய்த பரிகாரம்..
பிரிவு என்பது..
பிரிவு என்பது..

என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..
என் அன்னை செய்த பாவம்..

இரவெனவும் பகலெனவும்
இரண்டு வைத்தானே..
அந்த இறைவன் அவன்
மனதை மட்டும் ஒன்று வைத்தானே..
ஒரு மனதில் ஒரு விளக்கை
ஏற்றி வைத்தானே..
அதில் ஒளியிருக்க
வழியை மட்டும் மூடிவிட்டானே..
மூடிவிட்டானே..
என் அன்னை செய்த பாவம்..

உறவினராம் பறவைகளை
நீ வளர்த்தாயே..
அதில் ஒரு பறவை நானும்
என்றே நினைத்திருந்தேனே..
சிறிய கூண்டு எனக்கு மட்டும்
திறக்கவில்லையே..
அது திறந்த போது
என் சிறகு பறக்கவில்லையே..

என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..

என் அன்னை செய்த பாவம்..



ஞாயிறு, 20 மார்ச், 2011

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு..பருவம் பதினெட்டு..

மனைவி தரப் போகும் மழலைக்காக கணவன் பாடும் இந்த இனிமையான பாட்டு மனதுக்கு இதமானது. எந்த கவலையையும் மறக்கச் செய்யும் கவிதை வரிகள், குரல் மற்றும் இசை.


திரைப் படம்: இவள் ஒரு சீதை (1978)

இசை: V குமார்

நடிப்பு: விஜயகுமார், சுமித்திரா

இயக்கம்: A ஜெகனாதன்



http://www.divshare.com/download/13571687-0e6







பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..

அவள் பழமுதிர் சோலையில்

தாமரை போலே..

மலர்ந்தது ஒரு மொட்டு..

மலர்ந்தது ஒரு மொட்டு...

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..



எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை..

சட்டையை இழுக்கும் கைகளில் வளையல்..

கண்ணன் வருகிறான்

என் மன்னன் வருகிறான்..

புல்லாங்குழலின் ஓசையடி ..

பூமெத்தை தென்றலின் வாசமடி.

அம்மா என்கிறான்

கையை அசைக்கிறான்..

அம்மா என்கிறான்

கையை அசைக்கிறான்..



பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..

அவள் பழமுதிர் சோலையில்

தாமரை போலே..

மலர்ந்தது ஒரு மொட்டு

மலர்ந்தது ஒரு மொட்டு ..

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு..



ஒன்பது மாசம் போனது கண்ணே..

ஒரு மாதத்தில் வருவான் கண்ணன்..

கனவே பலித்தது

என் நினைவே ஜெயித்தது..

அங்கே எனது வெள்ளி நிலா ..

ஆண்மை சொல்லும் பிள்ளை நிலா..

சீதை தருகிறாள்

ராமன் பெறுகிறான்..

சீதை தருகிறாள்

ராமன் பெறுகிறான்..



பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.



சனி, 19 மார்ச், 2011

நீரில் ஒரு தாமரை..neeril oru thamarai...

தமிழ் உதயன் விருப்பப் பாடல் இது. நல்லதொரு பாடலைத் தான் கேட்டிருக்கிறார். நானும் இந்த பாடலை இப்போதுதான் முதல் முறை கேட்கிறேன்.
நீங்கள் கேட்ட மற்றொரு பாடலான இரவு பூக்களே..இரவு பூக்களே.. ஆரம்ப வரிகள் சரிதானா? அல்லது அந்த பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தெரிந்தால் உதவியாக இருக்கும்.

திரைப் படம் நெஞ்சத்தை அள்ளித் தா (1984)
நடிப்பு: மோகன், லக்ஷ்மி, சாதனா சர்கம்
குரல்: ஜெயசந்திரன்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமீர் ஜான்



http://www.divshare.com/download/14337006-66c







நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ
நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ

வீட்டிலொரு ஓவியம்
ஓவியத்தில் பெண் முகம்
வீட்டிலொரு ஓவியம்
ஓவியத்தில் பெண் முகம்
பெண் முகத்தில் சிந்தனை
சிந்தனைகள் யார் வசம்
பெண் முகத்தில் சிந்தனை
சிந்தனைகள் யார் வசம்
சித்திரத்தை பார்த்ததும்
முத்தமிட ஓடினேன்
முத்தமிட போகையில்
சித்திரத்தை தேடினேன்
நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ

நேற்று சொன்ன வார்த்தைகள்
நீல விழிப் பார்வைகள்
நேற்று சொன்ன வார்த்தைகள்
நீல விழிப் பார்வைகள்
ஊட்டி வைத்த ஆசைகள்
உன் சிரிப்பின் பாஷைகள்
ஊட்டி வைத்த ஆசைகள்
உன் சிரிப்பின் பாஷைகள்
காதலித்த ஞாபகம்
கடைசி வரை போகுமோ
கூட வந்த நாட்களை
மறப்பதென்ன நியாயமோ

பாட்டு ஒன்று பாடினேன்
பாடியது கேட்டதோ
பாட்டு ஒன்று பாடினேன்
பாடியது கேட்டதோ
கேட்ட குரல் வாடுமோ
வாட்டுவதும் நியாயமோ
கேட்ட குரல் வாடுமோ
வாட்டுவதும் நியாயமோ
பாதை பல மாறலாம்
மாறியது சேரலாம்
சேர்ந்து வர எண்ணினேன்
எண்ணியது பாவமோ

நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ



வெள்ளி, 18 மார்ச், 2011

அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..

இசையும், பாடலும் M S ராஜேஸ்வரி அவர்களின் குரலும் கச்சிதமாக ஒன்றாக இணைந்து சிறப்பாக ஒரு ரெண்டும் கெட்டான் குழந்தையை கண்ணுக்கு முன் கொண்டு வந்திருக்கிறார்கள்..


திரைப் படம்: செல்லப் பெண் (1969)
நடிப்பு: A V M ராஜன், புஷ்பலதா
இசை: B A சிதம்பர நாத்
இயக்கம்: K கிருஷ்ண மூர்த்தி



http://www.divshare.com/download/14342471-618


அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..
எங்க அப்பா சொன்னது போலவே அம்மா சொன்னாங்க..
அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..
எங்க அப்பா சொன்னது போலவே அம்மா சொன்னாங்க..
அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருந்தாங்க..
அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருந்தாங்க..
ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க..
அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..
எங்க அப்பா சொன்னாங்க..

மாமா கூட டூவா டூவா மாமி மூஞ்சி நல்லாலே..
ஒன்னுக்கு ரெண்டு மிட்டாய் தந்தா ஓடிவரா தன்னாலே..
மாமி பொண்ணுக்கு பொடவையில்லே மார்க்கெட்டுக்கு போயி வாங்க..
மாப்பிள்ளை பொண்ணு ஜோடியா போயி..
எல்லாம் வாங்கிட்டு வாங்க..
அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..
எங்க அப்பா சொன்னாங்க..

சைனா பஜார் சினிமா பீச்சு ஜாலியாக போய் வாங்க..
சைனா பஜார் சினிமா பீச்சு ஜாலியாக போய் வாங்க..
பணமில்லேனா நான் தாரேன் பத்து காசு இந்தாங்க..
பணமில்லேனா நான் தாரேன் பத்து காசு இந்தாங்க..
எங்க வீட்டு தொட்டிலைப் போலே ஏன் மாமா மூடலே..
உங்க பாப்பா எப்போ வருவா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க..

அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..
எங்க அப்பா சொன்னது போலவே அம்மா சொன்னாங்க..
அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருந்தாங்க..
ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க..
தவமிருக்காங்க..
தவமிருக்காங்க..



வியாழன், 17 மார்ச், 2011

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்..

ஆரம்பம் முதலே பின்னனி இசையின் ஆதிக்கம் மென்மையாகவும் இனிமையாகவும் நல்ல அளவோடும் இருக்கிறது. பாடலையும் இந்த கால ஸ்டீரியோ இசை தரத்தில் வழங்கி இருக்கிறார்கள்.


திரைப் படம்: இதயக் கமலம் (1965)

இசை: K V மகாதேவன்

பாடல்: கண்ணதாசன்

பாடிய குரல்கள்: .P B ஸ்ரீனிவாசன், P சுசீலா

நடிப்பு: முத்துராமன், ரவிசந்திரன், K R விஜயா, நாகேஷ்

இயக்கம்: C V ஸ்ரீதர்



http://www.divshare.com/download/14308898-e55



போ போ போ ஓ ஓ ஓ ஓ ஓ

வா வா வா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ
போ போ போ ஓ ஓ ஓ ஓ ஓ

நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன்
வா வா வா
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன்
வா வா வா
வா வா வா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்
எங்கும் உன்னை நாடுவேன்

நீ பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்
எங்கும் உன்னை நாடுவேன்
போ போ போ

உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம்

உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம்

வா வா வா

போ போ போ

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ

நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன்
வா வா வா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னை பாடலாம்
மாதர் உன்னை போற்றலாம்
மனதில் எனையே காணலாம்
காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னை பாடலாம்
மாதர் உன்னை போற்றலாம்
மனதில் எனையே காணலாம்
போ போ போ

பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேன் உன்னிடம்
பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேன் உன்னிடம்

வா வா வா
போ போ போ
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ

நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன்
வா வா வா

ஹா ஹா ஹா ஹா ஹா

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஹா ஹா ஹா ஹா

புதன், 16 மார்ச், 2011

காத்திருந்த கண்களே..கதையளந்த நெஞ்சமே..

இந்த பாடல் படமாக்கப் பட்டிருக்கும் விதம் (picturisation) மிக நன்றாக இருக்கும். நல்ல இசையமைப்பில் இனிமையான குரல் வளத்துடன் கூடிய ஒரு நல்ல பாடல். திருமதி P. சுசீலா அவர்கள் சற்று விஷேசமாகவே இந்தப் பாடலை பாடியிருப்பது போல எனக்கு தெரிகிறது.


திரைப் படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
நடிப்பு: சிவாஜி, ரவிசந்திரன், ஜெயலலிதா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: பாலு
குரல்கள்: P B S, P. சுசீலா
பாடல்: கொத்தமங்கலம் சுப்பு




http://www.divshare.com/download/14319238-85d


காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

கண்ணிரண்டில் வெண்ணிலா..
கதைகள் சொல்லும் பெண் நிலா..
கண்ணிரண்டில் வெண்ணிலா..
கதைகள் சொல்லும் பெண் நிலா..
நான் இருந்தும் நீ இல்லா..
வாழ்வில் ஏது தேன் நிலா..

கண்ணிரண்டில் வெண்ணிலா..
கதைகள் சொல்லும் பெண் நிலா..
நான் இருந்தும் நீ இல்லா..
வாழ்வில் ஏது தேன் நிலா..


மைவிழி வாசல் திறந்ததிலே..
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே..
புன்னகை விளைந்ததென்ன..

மைவிழி வாசல் திறந்ததிலே..
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே..
புன்னகை விளைந்ததென்ன..

பொழுதொரு கனவை விழிகளிலே..
கொண்டு வருகின்ற வயதல்லவோ..
பொழுதொரு கனவை விழிகளிலே..
கொண்டு வருகின்ற வயதல்லவோ..
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து..
தருகின்ற மனதல்லவோ..
தருகின்ற மனதல்லவோ..

காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

கைவிரலாலே தொடுவதிலே இந்த..
பூமுகம் சிவந்ததென்ன..
இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே..
வையகம் இருண்டதென்ன..

செவ்விதழ் ஓரம் தேன் எடுக்க..
இந்த நாடகம் நடிப்பதென்ன..
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து..
மயக்கத்தை கொடுப்பதென்ன..
மயக்கத்தை கொடுப்பதென்ன..

காத்திருந்த கண்களே..
கதையளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே..
பொங்கிப் பெருகும் உள்ளமே..

லலலாலலலலலா லலலலாலாலாலா..
லலலலாலா....

செல்லபிள்ளை சரவணன்.. திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

நன்றாக நினைவில் இருக்கிறது. இந்த பாடல் வெளியான புதிதில் எனக்கு தெரிந்த எல்லா பெண்களும் (அட! தப்பா நினைக்காதீர்கள் எனது சகோதிரிகள்தான்) இந்த பாடலைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பிரபலம்.




திரைப் படம்: பெண் ஜென்மம் (1977)

இசை: இளையராஜா

நடிப்பு: முத்துராமன், ஜெயப்ரபா

இயக்கம்: திருலோகசந்தர்

பாடியவர்கள்: KJY, P சுசீலா



http://www.divshare.com/download/14327280-215



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

கோபத்தில் மனஸ்தாபத்தில்

குன்றம் ஏறி வந்தவன்





செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்



ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான்

பின்பு ஊடலில் கொஞ்சம் ஆடுவான்

கூந்தலில் மலர் சூடியே

அவன் கூட நான் வர வேண்டுவான்

மயங்கி நான்

மயங்கி நான் மெல்ல தடை சொல்ல

சினம் கொள்வான்



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

வள்ளியை இன்பவல்லியை

அள்ளிக்கொண்ட மன்னவன்

செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்



மாலையில் ஒரு மல்லிகை என

மலர்ந்தவள் இந்த கன்னிகை

மன்மதன் கணை ஐவகை அதில்

ஓர் வகை இவள் புன்னகை

மடியில் நான்

மடியில் நான் துயில

இடை துவள கலை பயில



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்



கார்குழல் உந்தன் பஞ்சணை

இரு கைகளே உந்தன் தலையணை

வேலவன் கொஞ்சும் புள்ளிமான்

அதன் வடிவம்தான் இந்த வள்ளிமான்

அருகில் நான்

அருகில் நான் வந்தேன் இதழ் செந்தேன்

இதோ தந்தேன்



செல்லபிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

செவ்வாய், 15 மார்ச், 2011

தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு

தாய், தந்தையாகப் போகும் இருவரின் கற்பனையில் குழந்தை வளர்ப்பு சுகம் சுகமே.


திரைப் படம்: அச்சாணி (1978)
நடிப்பு:லக்ஷ்மி, முத்துராமன்
இயக்கம்: காரைக்குடி நாராயணன்
பாடிய குரல்கள்: S P B, P சுசீலா
இசை: இளையராஜா




http://www.divshare.com/download/14297452-bb3



தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு

மணித் தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனி கன்னம் முத்தமிட்டு

பாராட்டு... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்

தாலாட்டு..

நாம் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெற வேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்

தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
தாலாட்டு..

வாழ்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
வருத்தமுறும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
கண்ணன் வண்ணம் கண்டு
துள்ளும் உள்ளம் ரெண்டு
தென் பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்

பாராட்டு... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்

திங்கள், 14 மார்ச், 2011

அமுத தமிழில் எழுதும் கவிதை..புதுமை புலவன் நீ..

பொதுவாகவே எம் ஜி யாரின் படப் பாடல்கள் மிக நுணுக்கமாக தேர்ந்தெடுக்கப் பட்ட பாடல்களாகத்தான் இருக்கும். அதுவும் அவரது சினிமா உலகின் இறுதிக் காலக் கட்டத்தில் இளையத் தலைமுறைக்கும் பழையவர்களுக்கும் நிறைய இடைவெளி தோன்ற ஆரம்பித்த நேரமது. அப்போது இரு சாராரையும் சுண்டியிழுக்கும் விதமாக பாடல்கள் அமையவேண்டிய கட்டாயத்தில் உருவான பாடல்களில் இது ஒன்று. நல்ல சுகமான பாடலிது.


திரைப் படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978)
நடிப்பு: எம் ஜி யார், லதா, வீரப்பன்
இயக்கம்: எம் ஜி யார்
இசை: விஸ்வனாதன்
குரல்கள்: வாணி ஜெயராம், ஜெயசந்திரன்
பாடல் ஆசிரியர்: புலமைபித்தன்




http://www.divshare.com/download/14299723-105
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..

புவி அரசர்க்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ..
புரட்சி தலைவன் நீ..

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ..
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ..

சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ..
விளக்க உரையும் நீ..

நானம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன..
நானம் ஒரு புறமும்
ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன..

உன்னை ஒரு கனமும்
என்னை மறு கனமும்
உள்ளம் நினைப்பதென்ன
உள்ளம் நினைப்பதென்ன

நாதம் இசைத்து வரும்
பாத மணிசிலம்பு
என்னை அழைப்பதென்ன..
நாதம் இசைத்து வரும்
பாத மணிசிலம்பு
என்னை அழைப்பதென்ன..

ஊஞ்சல் அசைந்துவரும்
நீல விழி இரண்டின்
வண்ணம் சிவப்பதென்ன..
வண்ணம் சிவப்பதென்ன..

எதுகை அது உனது
இருக்கை அது எனது
பெண்மை ஆடட்டுமே..
எதுகை அது உனது
இருக்கை அது எனது
பெண்மை ஆடட்டுமே..

ஒரு கை குழல் தழுவ
மறு கை உடல் தழுவ
இன்பம் தேடட்டுமே..
இன்பம் தேடட்டுமே..

வைகை அணை நெருங்கி
வைகை அணை மதுரை
வை கை அணைப் போலவே..
மங்கை எனும் அமுத
கங்கை பெருகுவது
நீந்தி கரைக் காணவே..
நீந்தி கரைக் காணவே..

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ..

புவி அரசர்க்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ..
புரட்சி தலைவன் நீ..

ஞாயிறு, 13 மார்ச், 2011

போக போக தெரியும்..இந்த பூவின் வாசம் புரியும்

இனிமையான கவிதை வரிகளுடன், இனிமையான குரல்களும் இசையும் இணைந்தால் அதுதான் என்றும் மனதில் நிற்கும் பாடலாகிவிடுகின்றது.


திரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)
இசை: M S விஸ்வனாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: PBS, P சுசீலா
இயக்கம்: K பாலசந்தர்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா, நாகேஷ்



http://www.divshare.com/download/14292095-686


அஹா ஹா அஹா ஹா
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன

பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரை கேட்டிருப்பென்
பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரை கேட்டிருப்பென்

என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன

என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல் இருப்பதென்ன

காலம் நேரம் பிறக்கும்
நம் காதல் கதவுகள் திறக்கும்
நம் கண்கள் அப்போது துடிக்கும்
உன் கன்னம் எப்போது சிவக்கும்

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
இந்த பூவின் வாசம் புரியும்

அஹா ஹா அஹா ஹா
அஹா ஹா அஹா ஹா

சனி, 12 மார்ச், 2011

தேவி கூந்தலோ பிருந்தாவனம்..

ஆங்கில பாடலின் தழுவல் எங்கிறார்கள். எப்படி ஆனால் என்ன காதுக்கு இனிமையாக இருக்கிறதே. 


திரைப்படம்: என் ஆசை உன்னோடுதான் (1983)
இசை: சங்கர் கணேஷ்
குரல்கள்: யேசுதாஸ், வாணி ஜெயராம்
நடிப்பு: பூர்ணிமா. ஜெய் கணேஷ்
இயக்கம்: K நாராயணன்



http://www.divshare.com/download/14284802-887


தேவி கூந்தலோ பிருந்தாவனம்..
கள்ளூரும் பூக்கள்யாவுமே என் சீதனம்..
சங்கீத வீணைதானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே..

தேவி கூந்தலோ பிருந்தாவனம்..
கள்ளூரும் பூக்கள்யாவுமே என் சீதனம்..

சங்கீத வீணைதானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே..

பூவானது பொன்னானது உன் பாதம் மண் மங்கை காணாதது..
பூவானது பொன்னானது உன் பாதம் மண் மங்கை காணாதது..

தோள் மீது சாயும் தேனாக பாயும்..
தோள் மீது சாயும் தேனாக பாயும் கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்..
இளம் மங்கையின் கன்னத்தில் மன்மத வண்ணத்தில் புதிய அமுதம் பொங்கி வரும்..

தேவி கூந்தலோ பிருந்தாவனம்..
கள்ளூரும் பூக்கள்யாவுமே என் சீதனம்..

சங்கீத வீணைதானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே..

உன் பாதமே என் கோவிலே உன் பேரே நான் பாடும் பூபாலமே..
உன் பாதமே என் கோவிலே உன் பேரே நான் பாடும் பூபாலமே..

தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை..
கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை..
நீ தினமும் அணைத்து நினைவில் நிறுத்த இதயம் திறந்து வந்தவளே..
தேவி கூந்தலோ பிருந்தாவனம்..
கள்ளூரும் பூக்கள்யாவுமே என் சீதனம்..

சங்கீத வீணைதானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே..
ல ல ல ல லாலா
லலலா
ல ல ல ல லாலா
லலலா

வெள்ளி, 11 மார்ச், 2011

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..

அப்போதே அவ்வளவாக பிரபலமாகாத பாடல் இது. ஆனால் நல்ல இசையுடன் இயற்றி பாடியிருக்கிறார்கள். SPB யின் வழக்கமான குறும்புகளுடன்.

திரைப் படம்: ராகங்கள் மாறுவதில்லை (1983)
பாடியவர்: SPB
பாடல்: கங்கை அமரன்
நடிப்பு: பிரபு, அம்பிகா
இசை: இளையராஜா
இயக்கம்: சிறுமுகை ரவி



http://www.divshare.com/download/14237669-e8d


ஆ ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ. .

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..

பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ...
ஓ ஓ ஓ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ...
நிலவின் மகளே நீ தானோ..


குழலில் மேகம் குடியிருந்தாலும்..
விழியில் ஏதோ புதுவித தாகம்..
பௌர்ணமி பார்வை பொழிகிறதே..
மனம் தனில் இன்பம் வழிகிறதே..

பெண்மையின் பாகம் தாமரையாகும்..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
இடையின் பாகம் நூலாகும்..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ...
நி ல கி க தம தம ப


விழிகள் மீனோ மொழிகள் தேனோ...
நிலவின் மகளே நீ தானோ..


சனி நி த ப ம க ரீ ரீ ரீ

ரீக கிக ம தா சனீ நீ நீ
சா ரி நின்னீ சர க க திமி
நீ த பாமீ க நி க க கனி நீ
தகிடதா தகிடதா தா தகிடதா
தா தகிடதா

அடடா கால்கள் அழகிய வாழை..
நினைத்தால் மணக்கும் ரகசிய சோலை..
நகங்கள் யாவும் பிறை நிலவு..
இவள் தான் இங்கே கலை நிலவு..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நீயே காதல் தேவாரம்..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ...
ஓ ஓ ஓ..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
ஓ ஓ ஓ..

வியாழன், 10 மார்ச், 2011

விழி வாசல் அழகான மணி மண்டபம்..

அரிய பாடல்களில் ஒன்று. தெளிவான தமிழில் கவிதையாக பொழிகிறார்கள். அள்ளிப் பருகுவோம்.


திரைப் படம்: பெண் குலத்தின் பொன் விளக்கு (1959)
இசை: மாஸ்டர் வேணு
இயக்கம்: B விட்டலா ஆச்சாரி
நடிப்பு: ஜெமினி, M N ராஜம்
பாடியவர்கள்: சீர்காழி S கோவிந்தராஜன், P சுசீலா
பாடல்: வில்லிபுத்தூரன்






http://www.divshare.com/download/14237677-f69





விழி வாசல் அழகான மணி மண்டபம்..
உன் விழி வாசல் அழகான மணி மண்டபம்..
மின்னல் விளையாடும் புதுப் பார்வை உயிர் தாண்டவம்..
விழி வாசல் அழகான மணி மண்டபம்..
வண்டாடும் மலர் வீதி அலங்காரமே..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..
வண்டாடும் மலர் வீதி அலங்காரமே..
என்னை வரவேற்க வரும் இன்ப சாம்ராஜ்யமே..
விழி வாசல் அழகான மணி மண்டபம்..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
உன் புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
பாச புது மாலை உனை நாடி வரும் தாரகை..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
புனலான தேன் கூடு பார் வெண்ணிலா..
வந்த பொழுதல்ல உன் பாடல் என் நெஞ்சிலே..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
செடியிலே பூவிருக்கு அழகாக..

உன் சிரிப்பிலே நான் இருக்கேன் உனக்காக..

கொடியிலே கோனலிருக்கு எதற்காக..

பெண்கள் குணத்திலே நானம் இருக்கு அதுக்காக..

நானம்தானே பெண்களுக்கு நாணயம்..
இந்த நல்ல பண்பு கொண்ட பெண்கள் குடும்ப வாழ்வின் ஆலயம்..

ஞானமோடு பேசுதிங்கே ஓவியம்..
தமிழ் வானில் ஆடும் தாரகை நீ உலக மகா இலக்கியம்..

முல்லையோடு தென்றல் சேரும் நேரம்..

முதல் முத்தம் ஒன்று கேட்டு வந்து பாடுதே சிங்காரம்..

குறும்பு வார்த்தை ஏனோ தமிழ் பண்பு கண்கள் பாரும்..

திரை அரும்பும் இதழில் ஊரும் தேனை எனக்கு சாயும் நேரம்..
மிகப் பொருத்தமான நேரம்..
விழி வாசல் அழகான மணி மண்டபம்..

உன் புகழ் மாலை அமுதான கவி மாளிகை..

எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்...



வழக்கமான காதல் பாடலானும் நல்ல கவிதை வரிகளில் இனிமையான இசையில்.

திரைப் படம்: அன்பு சகோதரர்கள் (1973)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: ஜெயஷங்கர், A V M ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா
பாடும் குரல்கள்: SPB, P சுசீலா
இயக்கம்: லஷ்மி தீபக்



http://www.divshare.com/download/14237081-1b0









எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

ம் ம் ம் ம் ம் ம் ம்

பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல் வெளி இங்கே படர்ந்திருக்க

பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல் வெளி இங்கே படர்ந்திருக்க

காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க

காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க

உன் மடி வேண்டும் நான் படுக்க

கண் உறக்கமில்லாமல் நான் துடிக்க

அதற்காக

எதிர்ப்பார்த்தேன்

ம் ம் ம் ம் ம் ம்ம்

உன்னை எதிர்ப்பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலை முடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

மலை முடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க

ஒருவரை ஒருவர் மறைத்திருக்க

அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க

அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

அதற்காக

எதிர்ப்பார்த்தேன்

ம் ம் ம் ம் ம் ம்

உன்னை எதிர்ப்பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஞாயிறு, 6 மார்ச், 2011

இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை..

என்றும் இளமை மாறா பாடல். அழகாக நீரோட்டமாக அமைந்த கவிதை வரிகள். காதலியின் ஊடலும்  நாயகனின் சமாதானமும்   இலக்கியச் சுவையில்  வழங்கியிருக்கிறார்கள்


திரைப் படம்: பந்த பாசம் (1962)
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, தேவிகா
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
இயக்கம்: பீம்சிங்கு
பாடல்: வாலி
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ்,  P சுசீலா





http://www.divshare.com/download/14199890-ad0



இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை..

கண் பட்டு மறைந்தெனை விட்டு பறந்திடும் காரணம் தான் யாதோ..

இங்கு கோபமும் வரலாமோ... முகம் குங்கும நிறமாமோ...



என்னை கண்டதும் வந்து குழைந்திட நின்றவர் கவிஞனின் உறவாமோ...

சொன்ன சொல்லை மறந்தவர் என்னை மறந்தவர் யாரென தெரியாதோ..

வரத் தாமதம் எதனாலோ...அது காதலின் குணமாமோ...



இளம் தென்றலில் மணமாவாள்..

அள்ளிக் கொண்டதும் சேயாவாள்...

நான் வந்ததும் பனியாவாள்..

ஏன் இன்றவள் பகையானாள்...



கொடி கண்டதும் கிளையாவார்...

இசை வந்ததும் மொழியாவார்...

மலர் கண்டதும் வண்டாவார்...

கனி கண்டதும் கிளியாவார்..



இளம் மலருக்கு கோபமும் வருமோ...



வரும் வண்டுக்கு இது தெரியாதோ...



அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ...



அதை கண்டது யார் என்ன கதையோ...



அந்த வள்ளுவன் குறள் போலே...அவள் வகைக்கோரு சுவையாவாள்...

தரும் கள்ளினில் மணமாமோ...

என்னை கண்டதும் இளகாதோ...



அவர் கண்களும் சிறையாமோ...அதில் கன்னியர் இரையாமோ...

இழை கல்லிலும் எடுப்பாரோ... அதை பின்னியும் முடிப்பாரோ...



அன்பு தழைக்கிற இடமென்ன மனமோ..



விதை தெளிக்கிற இடமென்ன விழியோ...



நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ..



கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ...



இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் முத்தமிழ் பயிராகும்...

மனம் ஒத்து நடந்தொரு நித்த உளம் தனில் வைத்தது நெறியாகும்...



இளங்காவியம் அரங்கேறும்...



தென்றல் காதினில் சுரம் பாடும்...



ஹா ஹா ஹா ஓ ஓ ஹா ஹா ஹா ஓ ஒ

சனி, 5 மார்ச், 2011

அடடா..இதுதான்..சுகமோ..மலர்களின் இதழ்வழி பனிமழை

SPB யின் இசையமைப்பில் அவரும், S ஜானகி அம்மாவும் இணைந்து கலக்கியிருக்கும் பாடல். பாடும் குரல்களின் நெளிவு சுழிவுகளை அனுபவித்து கேட்க வேண்டும். அடடா! இதுதான்....


திரைப் படம்: துடிக்கும் கரங்கள் (1983)
இயக்கம்: A. C. ஸ்ரீதர்
நடிப்பு: ரஜினி, ராதா









அடடா..இதுதான்..சுகமோ..
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல்..தினமும்..விழாக்கோலமே..

அடடா..இதுதான்..சுகமோ
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல்..தினமும்..விழாக்கோலமே..

விழிகளும் விழிகளும் தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்..
விரல்களும் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜ்வாலைகள்..
கன்னங்களில் தாமரை தாது தூவும்..
சின்னங்களில் தேன்மழை சாரல் வீசும்..
கரும் கூந்தலின் ஊஞ்ஜலில் பூக்கள் ஆடும்..

அடடா..

ஹா ஹா ஹா..

இதுதான்..

ஹோ ஹோ ஹோ...

சுகமோ..

ஹா..மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல் தினமும் விழாக்கோலமே..

ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி..
தழுவிடும் இருவரின் நிலவொளி சுடவரும்
நேரம் இதோ பௌர்ணமி..
நீலோற்ப்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்..
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்..
உடல் வீணையின் தந்திகள் என்னை மீட்டும்..

அடடா..

ஹா ஹா ஹா..

இதுதான்..

ஹா..

சுகமோ..

மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல் தினமும் விழாக்கோலமே..

லலலால..லா....
லலலால..லா....

வெள்ளி, 4 மார்ச், 2011

ஓராயிரம் பார்வையிலே,,உன் பார்வையை நான் அறிவேன்..

வசனகர்த்தா: A L நாராயணன்


நடிப்பு: S A அசோகன், சாவித்திரி, மணிமாலா

தயாரிப்பு: R சுந்தரம்

இசை: S வேதா

பாடல் வரிகளை எழுதி வழங்கிய திரு தமிழன்பன் அவர்களுக்கு நன்றி


வேற்று மொழி படப் பாடலின் இசையென்றாலும் இசை இசைதான். இனிமையானது.



http://www.divshare.com/download/14225181-808


நூறுமுறை பிறந்தாலும்

நூறுமுறை இறந்தாலும்

உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்

ஒருநாளும் போவதில்லை

உலகத்தின் கண்களிலே

உருவங்கள் மறைந்தாலும்

ஒன்றான உள்ளங்கள்

ஒருநாளும் மறைவதில்லை!



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்



இந்த மானிடக் காதலெல்லாம்

ஒரு மரணத்தில் மாறி விடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம்

ஒரு மாலைக்குள் வாடி விடும்

நம் காதலின் தீபம் மட்டும்

எந்த நாளிலும் கூட வரும்



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்



இந்த காற்றினில் நான் கலந்தேன்

உன் கண்களை தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

உன் ஆடையில் ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்

உன் பூமுகம் காணுகின்றேன்



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

புதன், 2 மார்ச், 2011

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஒரு அர்த்தமுள்ள பாடல். திரு தமிழன்பன் ஒரு சிறந்த பாட்டை விரும்பிக் கேட்டு என்னை மகிழ்ச்சியாக்கிவிட்டார். ஒரு மனைவியின் அருமை பெருமைகளை மிக எளிதான தமிழில் கவிஞர் விளக்கி அதை T M S சரியான உணர்ச்சிகளுடன் பாடி இருக்கிறார். மனதை சிறிது புரட்டி போடும் பாடல்தான்.


திரைப் படம்: அதிர்ஷ்டம் அழைக்கிறது (1976)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்வரிகள்: கண்ணதாசன் (வாலி இல்லை)
இயக்கம்: A ஜெகனாதன்
மேற்கொண்டு விபரங்கள் எதும் கிடைக்கவில்லை.



http://www.divshare.com/download/14207026-9b8

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
அதுதான் அள்ளி இட நெருப்பை இங்கே கூட்டி வைத்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

தர்மம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீ தானே என்றது
தர்மம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீ தானே என்றது
தன் தலையில் உன் பழியை தாங்கிக் கொண்டு நின்றது
தன் தலையில் உன் பழியை தாங்கிக் கொண்டு நின்றது
தாங்கும் வரை தாங்கிவிட்டு தாளாமல் சாய்ந்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி புலியெ வந்ததடா
நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி புலியெ வந்ததடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
கை பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா
பொய் படித்த பாவமடா
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது



செவ்வாய், 1 மார்ச், 2011

நான் மெதுவாக தொடுகின்ற போது..கண் மயங்காமல்

அடக்கமான பின்னனி இசையுடன் மென்மையான குரல்களில் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: உனக்கும் வாழ்வு வரும் (1978)
பாடிய குரல்கள்: ஜெயசந்திரன், சுசீலா
நடிப்பு: முத்துராமன், ஸ்ரீபிரியா
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: ஸ்ரீனிவாசன்



http://www.divshare.com/download/14194668-0cf



நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

அழகான கண்ணங்கள் அரவிந்த கிண்ணங்கள்..
அடையாள சின்னங்கள் கேட்க..
சிறு காயங்கள் வரும் மாயங்கள்..
அதி காலைதான் ஆறுமோ..
பொன்னாகும் கண்ணம் என்னாகும்..

நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..

பூங்காலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்..
கல்யாண வைபோகம் என்று..
ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..
நாம் பெற வேண்டும் பூச்சரம்..
தை மாதம் தந்த வைபோகம்..

நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..





மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..


மிக சிறிய பாடல்தான் ஆனாலும் புதிய வித்தியாசமான குரல்களில் பாடல் இனிமையாக இருக்கிறது.


திரைப் படம்: அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978)
இயக்கம்: S C சேகர்
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகுமார், பவானி

நடிகர் விஜய்யின் தந்தை S சந்திரசேகரின் முதல் தயாரிப்பு
விஜய்யின் மாமா S N சுரேந்தர் மற்றும் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் இருவரும் முதலில் பாடிய பாடல் இது என்று நினைக்கிறேன். எனது விபரம் தவறாக இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
எது எப்படியோ பாடல் நன்றாக இருக்கிறது.




http://www.divshare.com/download/14192292-dbb


மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..

அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மனம் கேட்பது உன்னிடம் மது தாவென்று.. ரதி மன்மதன்..
ரதி மன்மதன் காவியம் இதுதான் இன்று
மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பமே அதுதான் வேண்டும்..இனி என்னவோ ஓ ஓ ஓ..
இனி என்னவோ வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும்

மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..



காதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது அதை கேட்டு

திருமதி உமா ரமணன் மறைந்த திரு மலேஷியா வாசுதேவனுடன் இணைந்து பாடிய பாடல். என்ன அழகான குரல்கள் மற்றும் இசையமைப்பு?


திரைப் படம்: அன்பே ஓடி வா (1984)
இசை: இளையராஜா  
பாடல்: வாலி
நடிப்பு: மோகன், ஊர்வசி
இயக்கம்: R ரஞ்ஜித் குமார்




http://www.divshare.com/download/14192272-b3f

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீ ஆனால்
அதன் நாதம் நான் ஆவேன்
போதை ஏறும் புது ராகம் நீ ஆனால்
அதன் பாவம் நான் ஆவேன்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு


நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து
நெஞ்சில் வைத்து பார்த்தேனே என்னை மறந்து
மானும் மீனும் வாழும் கண்ணில் என்னை வைத்தாயோ
பாசம் என்னும் நூலை கொண்டு நெஞ்சை தைத்தாயோ
நான் இனிமேல் உன்னோடு தான்
நீ நடந்தால் பின்னோடு நான்
நான் இனிமேல் உன்னோடு தான்
நீ நடந்தால் பின்னோடு நான்
என் நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீ ஆனால்
அதன் நாதம் நான் ஆவேன்
போதை ஏறும் புது ராகம் நீ ஆனால்
அதன் பாவம் நான் ஆவேன்

கூட்டில் ஒரு ஜோடி சிட்டுகுருவி
கொஞ்சி கொஞ்சி பேசும் தொட்டு தழுவி
காண காண நானும் நீயும் பக்கம் நெருங்க
கட்டி கொண்டும் ஒட்டி கொண்டும் முத்தம் வழங்க
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
போதும் என அச்சம் வரும்
போதைகளும் உச்சம் வரும்
அம்மாடி அப்பாடி உன் ஆசை பொல்லாது

காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீ ஆனால்
அதன் நாதம் நான் ஆவேன்
போதை ஏறும் புது ராகம் நீ ஆனால்
அதன் பாவம் நான் ஆவேன்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு