பின்பற்றுபவர்கள்

புதன், 30 மார்ச், 2011

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா

ஒரு குடும்பப் பெண்ணின் நல்ல எதிர்ப்பார்ப்புக்களை அழகாக வடித்திருக்கிறார்கள் .


திரைப் படம்: வாழ நினைத்தால் வாழலாம் (1978)
பாடியவர்: S ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்http://www.divshare.com/download/14335048-844

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,
உலகமே புகழ்ந்ததே, அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே,

கண்ணனோடு ராதை என்றார், ராமனோடு சீதை என்றார்,
அருகு போல வேர்கள் கண்டோம், மூங்கில் போல சொந்தம் கொண்டோம்,
எனை உனக்கென ஈசன் வைத்தான், இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம், உலகம் எங்கும் பாட்டு
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,

ஆறு ஒன்று ஓடும்போது கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மை போல வாழ வேண்டும்
இது இறைவனின் காதல் கட்டில், ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை, தலைவி என்னும் வீணை
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக