பின்பற்றுபவர்கள்

சனி, 5 மார்ச், 2011

அடடா..இதுதான்..சுகமோ..மலர்களின் இதழ்வழி பனிமழை

SPB யின் இசையமைப்பில் அவரும், S ஜானகி அம்மாவும் இணைந்து கலக்கியிருக்கும் பாடல். பாடும் குரல்களின் நெளிவு சுழிவுகளை அனுபவித்து கேட்க வேண்டும். அடடா! இதுதான்....


திரைப் படம்: துடிக்கும் கரங்கள் (1983)
இயக்கம்: A. C. ஸ்ரீதர்
நடிப்பு: ரஜினி, ராதா

அடடா..இதுதான்..சுகமோ..
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல்..தினமும்..விழாக்கோலமே..

அடடா..இதுதான்..சுகமோ
மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல்..தினமும்..விழாக்கோலமே..

விழிகளும் விழிகளும் தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்..
விரல்களும் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜ்வாலைகள்..
கன்னங்களில் தாமரை தாது தூவும்..
சின்னங்களில் தேன்மழை சாரல் வீசும்..
கரும் கூந்தலின் ஊஞ்ஜலில் பூக்கள் ஆடும்..

அடடா..

ஹா ஹா ஹா..

இதுதான்..

ஹோ ஹோ ஹோ...

சுகமோ..

ஹா..மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல் தினமும் விழாக்கோலமே..

ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி..
தழுவிடும் இருவரின் நிலவொளி சுடவரும்
நேரம் இதோ பௌர்ணமி..
நீலோற்ப்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்..
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்..
உடல் வீணையின் தந்திகள் என்னை மீட்டும்..

அடடா..

ஹா ஹா ஹா..

இதுதான்..

ஹா..

சுகமோ..

மலர்களின் இதழ்வழி பனிமழை விழும் சுகமோ..
இனிமேல் தினமும் விழாக்கோலமே..

லலலால..லா....
லலலால..லா....

1 கருத்து:

தமிழன்பன் சொன்னது…

ஞாபகப் பதிவிலிருந்து மறைந்துபோன பாடல் ஒன்றை நினைவுபடுத்தியுள்ளீர்கள்

கருத்துரையிடுக