பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 மார்ச், 2011

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..

அப்போதே அவ்வளவாக பிரபலமாகாத பாடல் இது. ஆனால் நல்ல இசையுடன் இயற்றி பாடியிருக்கிறார்கள். SPB யின் வழக்கமான குறும்புகளுடன்.

திரைப் படம்: ராகங்கள் மாறுவதில்லை (1983)
பாடியவர்: SPB
பாடல்: கங்கை அமரன்
நடிப்பு: பிரபு, அம்பிகா
இசை: இளையராஜா
இயக்கம்: சிறுமுகை ரவிhttp://www.divshare.com/download/14237669-e8d


ஆ ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ. .

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..

பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ...
ஓ ஓ ஓ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ...
நிலவின் மகளே நீ தானோ..


குழலில் மேகம் குடியிருந்தாலும்..
விழியில் ஏதோ புதுவித தாகம்..
பௌர்ணமி பார்வை பொழிகிறதே..
மனம் தனில் இன்பம் வழிகிறதே..

பெண்மையின் பாகம் தாமரையாகும்..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
இடையின் பாகம் நூலாகும்..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ...
நி ல கி க தம தம ப


விழிகள் மீனோ மொழிகள் தேனோ...
நிலவின் மகளே நீ தானோ..


சனி நி த ப ம க ரீ ரீ ரீ

ரீக கிக ம தா சனீ நீ நீ
சா ரி நின்னீ சர க க திமி
நீ த பாமீ க நி க க கனி நீ
தகிடதா தகிடதா தா தகிடதா
தா தகிடதா

அடடா கால்கள் அழகிய வாழை..
நினைத்தால் மணக்கும் ரகசிய சோலை..
நகங்கள் யாவும் பிறை நிலவு..
இவள் தான் இங்கே கலை நிலவு..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நீயே காதல் தேவாரம்..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ...
ஓ ஓ ஓ..

விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
ஓ ஓ ஓ..

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு பிடித்த பாடல். பாடலை இயற்றியது வைரமுத்து என்று நினைக்கிறேன்.

மதுரை சரவணன் சொன்னது…

thank u for sharing..

கருத்துரையிடுக