பின்பற்றுபவர்கள்

S ஜானகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
S ஜானகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது


அமைதியான, அழகானப் பாடல். ஜயன், மலையாள ஸ்டண்ட் நடிகர். நடிக்க ஆரம்பித்த காலத்திலேயே ஒரு ஸ்டண்ட் காட்சியில் விபத்தில் இறந்தார்.


திரைப் படம்: பூட்டாத பூட்டுக்கள்

இசை: இளையராஜா
குரல்: S ஜானகி
இயக்கம்: K மகேந்திரன்
நடிப்பு: ஜயன், சாருலதா
பாடல்: பஞ்சு அருணாசலம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MTg0N19mUjhsZF9hZDJk/Aanantham.mp3






ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது

ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவா
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது
அன்போடு பாசம் சேர்ந்திட ஊரும் பேரும்
வாழ்ந்திட
வாழை போல வாழ்கவே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

பாலூட்டும் போது நான் பார்க்கவா
தாலாட்டும்போது நான் தூங்கவா
மலரும் அரும்பு மடி மீது
இனிக்கும் கரும்பு
கொடுத்தாயே
இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரம் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்


மீண்டும் நமது T ராஜேந்தர். மறக்ககூடியவரா அவர். மற்றவரின் இயக்கத்தில்
T ராஜேந்தர் எழுதி இசையமைத்த பாடல். உயர்ந்த கவிதை வரிகளுடன் ஒரு இனிமையானப் பாடல்.

திரைப் படம்: கிளிஞ்சல்கள் 1981
குரல்கள்: S ஜானகி, Dr கல்யாண்
பாடல், இசை: விஜய  T ராஜேந்தர்
நடிப்பு: மோகன், பூர்ணிமா ஜெயராம்
இயக்கம்: துரை



http://www.divshare.com/download/19482124-b71



ப பப ப பப ல ல ல ல
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா ஹா
Julee I love you
ஹா ஹா ஹா

ப ப பம் ப ப பம் ப ப பம் ப ப பம்
Julee I love you
ஆஹா ஆஹா ஆஹா
Julee I love you

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மன வீணயிலே நாதமீட்டி
கீதமாக்கி நீந்துகின்ற தலைவா
இதழ் ஓடையிலே வார்த்தை என்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா
Julee I love you
ஆஹ் ஆஹ் ஆஹ்

பப ப ப
நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

மது மாலையிலே மஞ்சள் வெய்யில் கோலமென
நெஞ்சம் அதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென்ன
உள்ளம் அதில் நீ பொங்க
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ்
Julee I love you
Julee I love you
ஹா

சனி, 14 ஜூலை, 2012

பொங்கியதே காதல் வெள்ளம்


இனிமை. இசை, பாடல் வரிகள், குரல்கள் எல்லாமே. இசையமைப்பாளருக்கு இது முதல் திரைப் பாடல்

திரைப் படம்: மண்ணுக்குள் வைரம் (1986)
இசை: தேவேந்திரன்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: ரஞ்சனி, முரளி
இயக்கம்: மனோஜ் குமார்




http://www.divshare.com/download/18815499-891



ஆ ஆ ஆ ஆ
ஆ அ ஆ ஆ
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பள்ளிப்பாடம் வாசித்தால் பள்ளிப்பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன்மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு உன்னோடு
எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப்பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு என்னோடு என்னோடு
கடல் கூட குளமாகும் என் காதல் மாறாது
பொங்கியதே காதல் வெள்ளம்
..ஹா..துள்ளியதே ஆசை உள்ளம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏழை முல்லை பெண் பிள்ளை ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது
கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப்பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை நானில்லை நானில்லை நானில்லை
உனக்காக என் பெண்மை தவம் செய்தால் தப்பில்லை
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே காதல் வெள்ளம்
ம்
துள்ளியதே ஆசை உள்ளம்

புதன், 30 மே, 2012

முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி நீர் விளையாடல் எழில் மோக ரதம்

இனிமையான பாடல் சுகமான குரல்களில். இசை M S விஸ்வனாதனா அல்லது மலேஷியா வாசுதேவனா என்பதில் எனக்கு குழப்பம். மொத்தத்தில் அழகான பாடல்.

திரைப் படம்: துணைவி (1982)
குரல்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
இயக்கம்: வலம்புரி சோமனாதன்
நடிப்பு: சிவகுமார், சுஜாதா



http://www.divshare.com/download/17927410-d01



முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
சங்கத் தமிழ் தோட்டம்
வண்ண மயில் ஆட்டம்
சங்கத் தமிழ் தோட்டம்
வண்ண மயில் ஆட்டம்
தாமரையின் மொட்டு
உடல் கட்டு
அது தங்கத் தட்டு
தாழை மடல் போலே
நீண்ட கூந்தல்
அதை மெல்ல மெல்ல அள்ளிக்கொள்ளு தொட்டு
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

நெற்றியிலே வண்ணம் சுற்றும் விழிக் கிண்ணம்
நெற்றியிலே வண்ணம் சுற்றும் விழிக் கிண்ணம்
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உன்னைச் சுற்றிக்கொள்ள
நீந்தி வந்து மெல்ல கதை சொல்ல
உன்னைச் சுற்றிக்கொள்ள
ஆசை மழை வெள்ளம் என்னை அள்ள
உடல் அங்கும் இங்கும் துள்ளும் கொள்ளைக்கொள்ள
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வாழை இளம் கால்கள்
வஞ்சிக் கொடிக் கைகள்
வாழை இளம் கால்கள்
வஞ்சிக் கொடிக் கைகள்
மேடையிட்ட சொர்க்கம்
அதில் வெட்கம் அது இந்தப் பக்கம்
மேடையிட்ட சொர்க்கம்
அதில் வெட்கம் அது இந்தப் பக்கம்
போதுமெனச் சொல்லு
மனம் இல்லை
நான் தங்கத் தண்டை அங்கம் கொண்ட முல்லை
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்
முத்து மாணிக்க கண்கள் ரத்தின மேனி
நீர் விளையாடல் எழில் மோக ரதம்
ஊர்வலத்தில் பாடிடும் பாடல்

வெள்ளி, 11 மே, 2012

குத்து விளக்காக குல மகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்


நீண்ட இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் சந்தோஷம். இனி இடைவெளி இன்றி பாடல் தரமேற்றுதல் இடம் பெறும் என நான் நம்புகிறேன்.
இந்த இனிமையான பாடலுடன் நிகழ்ச்சியை தொடருவோமாக. பாடகர்களின் அனுபவ முதிர்ச்சி பாடலில் தெரிகிறது. இனிமை சேர்க்கிறது.

திரைப் படம்: கூலிக்காரன் (1987)
நடிப்பு: விஜயகாந்த், ரூபிணி
குரல்கள்:   S P B, S ஜானகி
இசை: T ராஜேந்தர்
இயக்கம்: ராஜசேகர்    



http://www.divshare.com/download/17114641-6be




http://www.divshare.com/download/17114552-4c2

குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளந்தன்னில் ஓடும் தேனே
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூயென்குது

பூவிலூறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதை தான் பண்பாடுது

சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

நீ நேசம் தர அதில் நான் வாசம் பெற
குத்து விளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு கண்ட இந்த இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது

பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம் தான் பரிமாறுது

பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம் பெற

கூச்சம்தான்

நானும் மெல்ல அள்ள
நானம் உன்னை கிள்ள

குத்து விளக்காக குல மகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா

உனக்கென பிறந்தேனே
உன் தோளில் என்றும் தவழ்வேனே  
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்



செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

காலத்திற்கேற்ற நல்ல இளமை துள்ளும் பாடல் நல்ல தமிழில்.


திரைப் படம்: தங்க மகன் (1983)
இயக்கம்: A ஜெக நாதன்
நடிப்பு: ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ்
இசை:இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
பாடல்: வாலி



ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ


வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே


இனிமையான இளையராஜா இசையில் S P Bயும் ஜானகி அம்மாவும் அடக்கி வாசித்திருக்கும் பாடல்.

திரைப் படம்: எனக்குள் ஒருவன் (1984)
நடிப்பு: கமல், ஷோபனா
இசை: இளையராஜா
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: S P B,S ஜானகி





Free Music - Upload Audio Files - Mutham Pothathe














முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே
ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே

சனி, 31 மார்ச், 2012

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்


மிக மென்மையான இசையில் அழகாக பாடி இருக்கிறார்கள் பாடகர்கள்.

திரைப் படம்: சலங்கை ஒலி (1984)
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
இயக்கம்: K விஸ்வனாத்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கமல், ஜெயபரதா




http://www.divshare.com/download/17052605-1ee



http://www.divshare.com/download/17052811-dbc

ஆ ஆ ஆ ஆ
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்


இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
ஆ ஆ ஆ
இதழில் மௌனங்கள்
ஆ ஆ ஆ
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
ம் ம் ம்
இள மனதில் என்ன பாரம்
ம் ம் ம்

சனி, 24 மார்ச், 2012

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று. உண்மையிலே ஒரு மெல்லிசை.


திரைப் படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)
குரல்கள்: S P B, S ஜானகி,
இசை: இளையராஜா
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீபிரியா
இயக்கம்: தேவராஜ்-மோகன்



நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய் மொழி மணி வாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
பட பட படவென வரும் தாபங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று
சல சல சல வென வரும் கீதங்கள்

குலமகள் நானம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஆ ஆ ஆ...
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை


கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கல கல கல என வரும் எண்ணங்கள்

ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பள பள பள என வரும் கிண்ணங்கள்

செல் என கண்ணும் நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
விடுகதை ஓர் நாள் தொடர் கதை ஆனால்
அது தான் ஆனந்த எல்லை ஆ ஆ ஆ..
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

வெள்ளி, 16 மார்ச், 2012

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்சை உசுப்புது


மென்மையான இசையும் குரல்களும் பாடலுக்கு பக்க பலமாக உள்ளன.

திரைப் படம்: திருமதி பழனிச்சாமி (1992)
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சத்யராஜ், சுகன்யா
இயக்கம்: R சுந்தர்ராஜன்





http://www.divshare.com/download/17015687-682



http://www.divshare.com/download/17015699-e5b

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம் விட்டு
நான் ஒரு கிறக்கத்திலே
கதை படிக்கிற நேரம்
சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிஷமும் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்
உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்
கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வரை காத்து கிடந்தேன்
வாலிபம் தவம் இருந்த வேளை வந்ததையா
இள மனசு இனி உன்னைத்தான் விடுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
முன் கதவை தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட
மாப்பிள்ளை மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆசை
அங்கே இங்கே கிள்ளக் கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும்
வளை குலுங்கிடும் ஓசை
என்ன செய்ய வேகம் வருது
உன்னை அள்ள மோகம் வருது
வஞ்சிப் பொண்ணு வாழ குருத்து
வித்தைகளை கட்டு படுத்து
போதையை கிளப்புதடி பூவே உன் வனப்பு
விரல் நுனி தான் உடல் முழுதும் படுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..

இந்தப் பாடல் 1992 இல் வெளிவந்தாலும் இசை என்னவோ 80 களில் வந்த பாடல்களை ஞாபகபடுத்துகிறது. இனிமையான குரல்களில், மிதமான பின்னனி இசையுடன் பாடல் நெஞ்சை வருடுகிறது.


திரைப் படம்: அன்னை வயல் (1992)
இசை: சிற்பி
குரல்கள்: S P B, S ஜானகி
இயக்கம்: பொன்வண்ணன்
நடிப்பு: ராஜ்முரளி, வினோதினி
பாடல்: பழனி பாரதி



http://www.divshare.com/download/14577673-57a






மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..
நானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..

மல்லிகை பூவழகில்...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

தேவி பாதை யாவும் திருக் கோயிலாக மாறும்..
பார்வை ஏற்றும் தீபம் உந்தன் வார்த்தை வேதம் ஆகும்..
கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்..
பெண்ணின் நானம் பூசும் அதில் வண்ணம் ஆயிரம்..
கொஞ்சும் மணிச் சந்தம் அது உந்தன் மொழியே..
எந்தன் மனச் சிற்பம் எனக் கொண்டேன் உனையே..
தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..
மல்லிகை பூவழகில்...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்..
மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாகி வாழும்..
கலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோக பூங்கதை..
ஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை..
சொந்தம் இது சொர்க்கம் என வந்தது அருகே..
சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே..
நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..
மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..
நானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..
ஆசை மணி ஓசையிலே.......