பின்பற்றுபவர்கள்

P B ஸ்ரீனிவாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P B ஸ்ரீனிவாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜூன், 2012

உன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்

ஒரு அழகானப் பெண்ணை பற்றிய வர்ணனை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு அளவுகோல்.
என்ன அழகான பாடல் இது?

திரைப் படம்: பூவும் பொட்டும் (1968)
இசை: R கோவர்த்தன்
குரல்: P B ஸ்ரீனிவாஸ்
இயக்கம்: தாதா மிராஸி
நடிப்பு: A V M ராஜன், பாரதி, முத்துராமன்
  


உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

நின்றால் கோவில் சிலையழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு

நடந்தால் அன்னத்தின் நடையழகு
நாடகமாடும் இடையழகு

நின்றால் கோவில் சிலையழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு

நடந்தால் அன்னத்தின் நடையழகு
நாடகமாடும் இடையழகு

அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே ரகசியமே

இறைவனுக்கே ரகசியம்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்ல

வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்ல

மலர் பறிக்கும் நேரமிதே
பொழுது சென்றால் வாடிவிடும்

பொழுது சென்றால் வாடிவிடும்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை




மென்மையான இசை மற்றும் குரல்களில் இனிமை பாடல். பின்னனி பாடகி ராணி அவர்கள் பிற்காலத்தில் வாய்ப்பு குறைந்ததால் இஸ்லாமிய கீதங்கள் பாட ஆரம்பித்தார்.

திரைப் படம்: இந்திரா என் செல்வம் (1962)
நடிப்பு: பாலாஜி, சாவித்திரி
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ்,K  ராணி
இசை: R ஸுதர்ஸனம்



http://www.divshare.com/download/16877862-078

ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை

தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை

மலர் கோலம் மேவுமாஞ்சோலை
மகரந்தம் தூவும் வேளை
மலர் கோலம் மேவுமாஞ்சோலை
மகரந்தம் தூவும் வேளை

கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
ஆ ஆ ஆ ஆ ஆ
கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
மனம் கான வெள்ளம் நீராடுமே
மனம் கான வெள்ளம் நீராடுமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம் ம் ம்

இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை

அமர வாழ்வினில் காதல் தெய்வம்
ஆவதேன்
அன்பினால்
ஆவதேன்
அன்பினால்
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடி பாடுவோம் ஆனந்தம் பெறவே
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடி பாடுவோம் ஆனந்தம் பெறவே

இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ