பின்பற்றுபவர்கள்

சனி, 26 செப்டம்பர், 2015

கம்மாங் கரை ஓரம்...kamma karai oram...

வழக்கமான ராமராஜன், ரேகாதான். ஆனால் அழகான இசையில், இனிமையான குரல்களில் சும்மா காலை நேரத்தில் அள்ளிக் கொண்டு போகும்...


திரைப்படம்: ராசாவே உன்னை நம்பி
பாடியவர்கள்: K S சித்ரா, மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
பாடல்:கங்கை அமரன்
இயக்கம்: T K போஸ்
நடிப்பு: ராமராஜன், ரேகாகம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்

சேலை மினுமினுக்க தாலி பளபளக்க
வேளை பொறந்துருச்சு மாமா
காலை கருக்கலில மாலை மின்னுக்கலில
மேனி கொதிக்குதடி வாமா                                      
கண்ணு ரெண்டும் மூடாம
ஒன்னை எண்ணி நூலானேன்
எண்ணி எண்ணி நான் கூட ஏக்கத்துக்கு ஆளானேன்
எனக்குள்ள இனிக்கிது நெனச்சது பலிக்கிது
பலிச்சது எனக்கிப்போ கிடச்சதைய்யா
மரகத இதழில அதில் உள்ள மதுவுல
வர வர மனம் இப்போ இறங்குதம்மா
இது மோகம் கூடும் நேரம்
மாலை போட்டா என்ன
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
தேன தினம் எடுத்து நானும் குடிச்சிருக்க
தாகம் பொறக்குதடி மானே
பாலும் புடிக்கவில்லே படுக்கை விரிக்கவில்லே
காதல் படுத்துகிற பாடு
முத்திரய காணாம சித்தம் இது ஆறாது
கட்டியதே கூடாம கண்ணு ரெண்டும் மூடாது
தலை முதல் கால் வரை பலப்பல அதிசயம்
தெரியுது தெரிஞ்ஜத எடுக்கட்டுமா
எனக்குள்ள இருப்பது உனக்கென பொறந்தது
முழுவதும் உன் கிட்ட கொடுக்கட்டுமா
இனி காலம் நேரம் கூடும்
தடையேதுமில்ல
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்
ஓஹோ ஹோ
கம்மாங் கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா
சொக்கு பொடி போடும்


ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நான் பாடிக் கொண்டே இருப்பேன்..nan padi konde irupen...

Music interlude மிக அருமை. கர்னாடக இசையில் MSV யின் மற்றொரு அற்புதம். திருமதி வாணி ஜெயராமின் இனிமைக் குரலில். அனுராதா ராமனின் கதையில் சிறை திரைப்படம்.

திரைப் படம்: சிறை (1984)
இசை: M S விஸ்வநாதன்
பாடியவர்: திருமதி வாணி ஜெயராம்
பாடல்: புலமைப்பித்தன்
இயக்கம்: R C சக்தி
நடிப்பு: லக்ஷ்மி, ராஜேஷ்ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ
ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ  ஆ
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

சாகித்தியம் நீயாக
சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சாகித்தியம் நீயாக
சங்கீதம் நானாக
வாழ்கின்ற நம் ஜீவிதம்
சங்கீதம் இல்லாது
சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்
சங்கீதம் இல்லாது
சந்தோஷம் வேறேது
சாரீரம் என் சீதனம்
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்

என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோரும் இசை அர்ச்சனை
என் வீடு பொன் கோயில்
உன் நாமம் என் நாவில்
நாள்தோரும் இசை அர்ச்சனை
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனை பார்க்க
நானே உன் வரதட்சனை
என் பாடல் நீ கேட்க
என் கண்கள் உனை பார்க்க
நானே உன் வரதட்சனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்
என் ஜென்மம் இருக்கும் வரை
என் ஜீவன் காக்கும் உனை
நான் பாடிக் கொண்டே இருப்பேன்
உன் பக்கத்துணை இருப்பேன்


திங்கள், 14 செப்டம்பர், 2015

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை...ithayathil irunthu ithayam varai...


திரைப் படத் துறையில் இறுதிக் காலங்களில் எம் ஜி யாரும், டி  எம் எஸ் உம் பாடிய சில அபூர்வமான இனிமையான பாடல்களில் ஒன்று. ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்த, மறைந்த எம் எஸ் வி அதன் பின்பு பலகாலம் தமிழ் திரை உலகில் உலாவந்தார். இன்றும் இனிமையான பாடலாகவே மின்னுகின்றது இந்தப் பாடல்.


திரைப்படம்: இன்று போல் என்றும் வாழ்க (1977)
நடிப்பு: எம்.ஜி.ஆர், ராதா சலுஜா
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் , P.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : வாலி
இயக்குநர்: கே.சங்கர்

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது காதல் கதை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்

ஆண்டவன் நீயென வணங்கி நின்று
அவள் ஆண்டாள் ஆனதனால்

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்

ஆண்டவன் நீயென வணங்கி நின்று
அவள் ஆண்டாள் ஆனதனால்

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்

ஆண்டவன் நீயென வணங்கி நின்று
அவள் ஆண்டாள் ஆனதனால்

காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன

காலடி ஒசை பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
காலடி ஒசை பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை
என்ன கதை

அது காதல் கதை

தாமரைக் கன்னி சூரியன் வந்தால்
தமிழ் போல் ஏன் சிரித்தாள்

பூங்குல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால்

நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
எந்தன் நிழலும் சுடுவதென்ன

பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
திருநாள் தேடுவதால்

இதயத்திலிருந்து இதழ்கள் வரை அது
ஏதோ ஒரு வகை புதிய கலை

மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை
என்ன கதை

அது காதல் கதை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

சனி, 5 செப்டம்பர், 2015

நான் ஆட்சி செய்து வரும்..Naan aatchi seithuvarum...

சுசீலா அம்மாவின் மிக மென்மையான குரலில் அழகு ததும்பும் பாடல் அம்மனுக்கு உகந்த இந்த ஆவணியில்...
K S கோபாலகிருஷ்ணன்இயக்கத்தில் வந்த அருமையான படங்களில் மறக்க முடியாத ஒன்று.

திரைப்படம்: ஆதி பராசக்தி (1971)
குரல்: P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி ஜெயலலிதா மற்றும் பலர்.நானாட்சி ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

நானாட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்