பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2015

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை...ithayathil irunthu ithayam varai...


திரைப் படத் துறையில் இறுதிக் காலங்களில் எம் ஜி யாரும், டி  எம் எஸ் உம் பாடிய சில அபூர்வமான இனிமையான பாடல்களில் ஒன்று. ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்த, மறைந்த எம் எஸ் வி அதன் பின்பு பலகாலம் தமிழ் திரை உலகில் உலாவந்தார். இன்றும் இனிமையான பாடலாகவே மின்னுகின்றது இந்தப் பாடல்.


திரைப்படம்: இன்று போல் என்றும் வாழ்க (1977)
நடிப்பு: எம்.ஜி.ஆர், ராதா சலுஜா
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் , P.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : வாலி
இயக்குநர்: கே.சங்கர்

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது காதல் கதை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்

ஆண்டவன் நீயென வணங்கி நின்று
அவள் ஆண்டாள் ஆனதனால்

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்

ஆண்டவன் நீயென வணங்கி நின்று
அவள் ஆண்டாள் ஆனதனால்

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்

ஆண்டவன் நீயென வணங்கி நின்று
அவள் ஆண்டாள் ஆனதனால்

காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன

காலடி ஒசை பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
காலடி ஒசை பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை
என்ன கதை

அது காதல் கதை

தாமரைக் கன்னி சூரியன் வந்தால்
தமிழ் போல் ஏன் சிரித்தாள்

பூங்குல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால்

நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
எந்தன் நிழலும் சுடுவதென்ன

பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
திருநாள் தேடுவதால்

இதயத்திலிருந்து இதழ்கள் வரை அது
ஏதோ ஒரு வகை புதிய கலை

மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை
என்ன கதை

அது காதல் கதை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கவர்ச்சியோ கவர்ச்சி ராதா சலுஜா

Unknown சொன்னது…

Ha ha

கருத்துரையிடுக