பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது.. Sonaal inikkuthu sugamaai..

பக்தி படங்களுக்கு சந்திரபோஸ் இசை எடுபடாது என்பதற்கு இந்தப் படம் நல்ல எடுத்துக் காட்டு. நல்ல வேளையாக எஸ் பி பி மிகச் சிறப்பாக கை கொடுத்து பாடலை சிறக்கச் செய்துவிட்டார். நிஜமாகவே அவரது குரலில் பாடல்...சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது...

இடைப் பட்ட இசை, பாடலை துவள வைத்துவிடுகிறது.

திரைப் படம்: சரணம் ஐயப்பா (1980)
இசை: சந்திர போஸ்
இயக்கம்: தசரதன்
நடிப்பு: பூபதி, பூர்ணிமா, சரத்பாபு, கமல்,
பாடல்: தெரியவில்லை
குரல்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம் என்கிறது பட டைட்டில். ஆனால் B H சசிரேகா போல ஒலிக்கிறது பெண் குரல்.சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியை
உன் முகம் ஜொலிக்குது

சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியை
உன் முகம் ஜொலிக்குது

சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியை
உன் முகம் ஜொலிக்குது

ஹரிஹர புத்திர அவதாரமே
அதி காலை கேட்கின்ற பூபாலமே

ஹரிஹர புத்திர அவதாரமே
அதி காலை கேட்கின்ற பூபாலமே

அணுவுக்குள் அணுவான ஆதாரமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடும் படிக்கின்ற தேவாரமே

சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியை
உன் முகம் ஜொலிக்குது

வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாக பிறந்தவனே

வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாக பிறந்தவனே

பேதத்தை போராடி அழித்தவனே
பேதத்தை போராடி அழித்தவனே
ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே

சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியை
உன் முகம் ஜொலிக்குது

வில்லுடன் அம்புடன் வேங்கை புலியுடன்
போர்க்களம் புகுந்தவனே
சொல்லி முடித்திடும் முன்வரும் பகையை கிள்ளி எறிந்தவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனே

ஹே
உன் புகழை
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியை
உன் முகம் ஜொலிக்குது
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியை
உன் முகம் ஜொலிக்குது

வியாழன், 27 நவம்பர், 2014

மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க.. Mazhaikkala megam magarajan vazhga..

தேன் குரலில் வழக்கம் போல K R விஜயாவுக்காக வாணி பாடியிருக்கிறார். இனிமையான V குமார் அவர்களின்  இசையில்.

திரைப் படம்: கஸ்தூரி விஜயம் (1975)
இசை: V குமார்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இயக்கம்: P மாதவன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: வாணி ஜெயராம்மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
வற்றாத தீபம் சிந்தும் ஒளி போல வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை
தன் கூந்தல் சூடி கொண்டாள் பஞ்சாலி கோதை
சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை
தன் கூந்தல் சூடி கொண்டாள் பஞ்சாலி கோதை
கண்ணான தர்மன் இங்கே
பகைவோரும் இங்கே
பங்காளி உன்னை கண்டால்
பகையாளி எங்கே
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே
அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே
ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே
அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே
காண்டீபம் இங்கே உண்டு
களம் ஒன்று இங்கே உண்டு
கண்ணா உன் வில்லை
எங்கே வைத்தாயோ இன்று
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

இப்போது எழுபத்தைந்து
இன்னும் நூறாண்டு
இளமை நீ காண வேண்டும்
என் வீட்டை ஆண்டு
இப்போது எழுபத்தைந்து
இன்னும் நூறாண்டு
இளமை நீ காண வேண்டும்
என் வீட்டை ஆண்டு
ராஜா உன் உள்ளம்தானே
பொய்யை சொல்லாது
ராஜா உன் உள்ளம்தானே
பொய்யை சொல்லாது
தலைமை நீ ஏற்று கொண்டால்
பஞ்சம் வராது
தலைமை நீ ஏற்று கொண்டால்
பஞ்சம் வராது
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
வற்றாத தீபம் சிந்தும் ஒளி போல வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க

திங்கள், 24 நவம்பர், 2014

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு..Vellai manam konda pillai ondru

எப்பொழுதுமே மென்மையான இசைக்கும் பாடலுக்கும் சொந்தக்காரரான V குமார் அவர்கள் இசையில் மனதை வருடும் ஒரு பாடல்.


திரைப் படம் : பத்தாம் பசலி (1970)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன், K.ஸ்வர்ணா
இசை : V குமார்
பாடல் : ஆலங்குடி சோமு

இயக்கம்: K பாலசந்தர் 
நடிப்பு: ஜெமினி, நாகேஷ், ராஜ்யஸ்ரீவெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

காற்றடிக்கிது ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
காற்றடிக்கிது ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
இங்கு ட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உனக்கும் தூக்கம் இல்லை
காசுமில்லை டிப்புமில்லை
அன்புக்கு ஞ்சமில்லை
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
க்கும் புரியவில்லை

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா

தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி
பார்க்க வந்தாயோ
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி
ரசிக்க வந்தாயோ
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
இங்கு தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்ல கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

வெள்ளி, 21 நவம்பர், 2014

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்..thendral urangiya pothum thingal...

எஸ் எஸ் ஆர் அவர்களுக்காக A M ராஜா குரல் கொடுத்திருக்கும் ஒரு பாடல். வேறு பாடல்கள் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இனிமை.

திரைப் படம்: பெற்ற மகனை விற்ற அன்னை (1958)
இயக்கம்:  V ராமநாதன்
நடிப்பு: எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: மருதகாசி
குரல்கள்: A M ராஜா, P சுசீலா

தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


நீல இரவிலே தோன்றும் நிலவை போலவே

நிலவை போலவே

வாலை குமரியே நீயும் வந்த போதிலே

வந்த போதிலே


நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசைதீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசைதீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா

ஆ ஆஅ.ஆஆ


இதய வானிலே இன்ப கனவு கோடியே

கனவு கோடியே

உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே

ஆடும் போதிலே


வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா

வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா

வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா

வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா

செவ்வாய், 18 நவம்பர், 2014

வருஷம் மாசம் தேதி பார்த்து..varusham maasam thethi parthu

ஏன் சந்தோஷமாக பாடுவதற்கு ஜானகி அம்மாவையும் சோக பாடலுக்கு சுசீலா அம்மாவும் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. எப்படியோ இரு வேறு குரல்களில் இரண்டு அமுதங்கள்.
Decent ஆன காட்சியமைப்பு, நடிப்பு, பாடல் வரிகள் மற்றும் இசையில் மின்னும் ஒரு பாடல்.

திரைப் படம்: மணியோசை (1963)
பாடியவர்: S ஜானகி
அடுத்து சோகமாக பாடியவர்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: கல்யான் குமார், விஜயகுமாரி
இயக்கம்: P மாதவன்S ஜானகியின் குரலில்:

ஒ ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஒ ஒ

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

பருத்திக் காட்டு கழனி மேட்டில்
பாய் விரித்து படுக்கை போட்டு
ஒருத்திக்காக காத்து காத்து நின்னாரு.
அத்தான்
ஓடைக் காத்தை தூது போக சொன்னாரு
அத்தான்
ஓடைக் காத்தை தூது போக சொன்னாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஒ ஒ ஓ

பச்சை வாழைத் தோட்டம் போல
பழுத்து நின்ற முகத்தை பார்த்து


வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

என் மடியில் தொட்டில் கட்டி
இரவு பகல் பாட்டுப் பாடி
நான் அவரைக் காத்திருப்பேன் கண்ணாக
நாங்கள் நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாக
நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாகP சுசீலாவின் குரலில்:
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

ஊரைக் கூட்டி மேளம் வைத்து
உறவைக் கூட்டி விருந்து வைத்து
ஊர்வலமாய் போவோமின்னு சொன்னாரு
அவர் ஒருவர் மட்டும் தனிமையிலே வந்தாரு
அவர் ஒருவர் மட்டும் தனிமையிலே வந்தாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

என் மடியில் தொட்டில் கட்டி
இரவு பகல் பாட்டுப் பாடி
நான் அவரைக் காத்திருப்பேன் கண்ணாக
நாங்கள் நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாக
நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாக

சனி, 15 நவம்பர், 2014

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா kettathum koduppavane krishna...இந்த பாடலில் சிதார் வாசித்தவர் யாரென்பது தெரியவில்லை. இனிமை சிதாரில்  மட்டும் இல்லை, டி எம் எஸ் குரலிலும், விஸ்வநாதன் இசையிலும் கண்ணதாசன் வரிகளிலும் என பாடலின் எல்லா இடத்திலும் இருக்கிறது.
டி எம் எஸ் குரலுக்கு ஈடு கொடுத்து இசைக் கருவிகளை வாசித்த மற்ற அனைத்து கலைஞர்களையும் எண்ணிப் பார்க்கிறேன்.

மூன்று வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  நடித்த படம்.
இதை ஆஸ்கர் அவார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாய் நினைவு. கலகலப்புக்கும், நடிப்புக்கும் அவ்வப் போது ஓவர் ஆக்டிங்கும் பஞ்சமில்லாத படம்.
ஆனாலும் திரும்பவும் இதே கெத்தில் ஒரு படத்தை இன்று நம்மால் எடுக்க முடியாது என்பதே உண்மை.

திரைப்படம் : தெய்வ மகன் (1969)
இசை : M.S.விஸ்வநாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடிய குரல்: T.M.சௌந்தரராஜன்

கல்யாணி ராகத்தில் அமைந்த மிகவும் உருக்கமான பாடல்கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா 
கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

புதன், 12 நவம்பர், 2014

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ..raathaiketra kannano seethaikerra..


S ஜானகி அம்மாவின் இனிமையான குரலில் எந்த ஒரு கருத்துரைக்கும் இடமளிக்காமல் விரைவாக கேட்க செய்யும் பாடல். கேட்டு மகிழ்வோம்.


திரைப்படம்: சுமைதாங்கி (1962)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: S ஜானகி

நடிப்பு: ஜெமினி கணேசன், தேவிகா

இயக்கம்: C V ஸ்ரீதர்ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

காதலிப்பவனோ அதில் பேரெடுத்தவனோ
கண்ணிரண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ
ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ
இல்லை ஆசை தீரும் போது நெஞ்சம் மாறுகின்றவனோ

ஹா ஹா ஹா ஹா ஹா

ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

சிரித்த முகத்தை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ
அவன் தேக்கு மரத்தைபோல உருண்டு திரண்டு நிற்பானோ
சிரித்த முகத்தை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ
அவன் தேக்கு மரத்தைபோல உருண்டு திரண்டு நிற்பானோ
மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தை தருமோ
இல்லை முன்னழகை பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ

ஹா ஹா ஹா ஹா ஹா

ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ
அவன் சாகும் கொட்டலை கூடத்திலே பாடம் கற்றவனோ
சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ
அவன் சாகு கொட்டலை கூடத்திலே பாடம் கற்றவனோ
இளைய கன்னி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ
இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ

ஹா ஹா ஹா ஹா ஹா

ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

திங்கள், 10 நவம்பர், 2014

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ Nilavu oru pennaagi

எம் ஜி யாரின் வெளிவராத திரைப் படமான இணைந்த கைகள் என்ற படத்திற்காக பதிவு செயப்பட்ட பாடல் இது. இங்கே உபயோகப் படுத்திக் கொண்டார்கள். இனிமையான பாடல். வாலியின் அழகான கவிதை.


திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
பாடியவர்: டி எம் எஸ்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
தயாரிப்பு, இயக்கம் : எம் ஜி யார்,
நடிப்பு: எம் ஜி யார், லதா, மஞ்சுளாநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூ போலே
மலருகின்ற இதழோ
மாதுளையின் பூ போலே
மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும்
மயங்குகின்ற விழியோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

புருவம் ஒரு வில்லாக
பார்வை ஒரு கணையாக
புருவம் ஒரு வில்லாக
பார்வை ஒரு கணையாக

பருவம் ஒரு தளமாக
போர் தொடுக்க பிறந்தவளோ

குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின் சங்காக
நீள் கழுதது அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக
நீள் கழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான் மலர்ந்தவளோ

நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ

செந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் பதத்தில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்

மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்

  
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

சனி, 8 நவம்பர், 2014

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் mella mella nadanthu vanthathu

வணக்கம். வேலை சம்பந்தமாக மொனாகோ சென்றிருந்ததால் தொடர்பு கொள்ள  இயலவில்லை. சிறிய இடைவெளியாகிவிட்டது.

இனிமையான இசையமைப்பில் மனம் மயக்கும் ஒரு பாடல்.
பிரபுவிற்கு ஏற்ற எஸ் பி பியின் குரல். அதிகம் அறியப்படாத சசிரேகாவின் தேன் குரல். அனைத்து இணைந்து இங்கே...

திரைப் படம்: உரிமை கீதம் (1988)
நடிப்பு: கார்த்திக், பிரபு, ரஞ்சிதா, பல்லவி
இயக்கம்: R V உதயகுமார்
இசை : மனோஜ்-கியான்
குரல்கள்: எஸ் பி பி, B H சசிரேகா
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கோடி
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு
ஓடும்
அதை கண்டதும் மேகங்கள் மந்திர பூ மழை தூவும்
தூவும்
சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு
ஓடும்
அதை கண்டதும் மேகங்கள் மந்திர பூ மழை தூவும்
தூவும்

நானத்திலே முந்தானை நணைந்தது
நாயகனை எண்ணி எண்ணி
கன்னி இவள் தேகம் சிவந்தது
கை விரல்கள் பின்னிப் பின்னி
வஞ்சியின் அழகை சொல்ல சொல்ல
இங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்
தோட்டம்
அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டு கூட்டம்
கூட்டம்
கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்
தோட்டம்
அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டு கூட்டம்
கூட்டம்
மோகத்திலே நெஞ்சு துடித்தது
மாலை இடும் நாளை எண்ணி
பூவிதழோ தந்தி அடித்தது
புன்னகையின் பேரெழுதி
பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை
இன்பத்திலே மனம் தித்தித்தது

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கன்னங்கரு விழிகள்
பேசும் புத்தம் புது மொழிகள்
கோடி
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்.


ஞாயிறு, 2 நவம்பர், 2014

புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் Puthithai Ketkum Putham Puthu

இளையராஜாவின் இனிமையான பாடல். ஏதோ ஒரு பழைய பாடலை நினைவு படுத்தினாலும், இனிமை இனிமைதான். ரசிக்கத்தக்க பாடல் குயில் குரலில்.திரைப்படம்: ராமன் அப்துல்லா  (1997)
நடிப்பு: விக்னேஷ்ஈஸ்வரி ராவ்  
பாடகி: K S சித்ரா
இசை: இளையராஜா
இயக்குநர்: பாலு மகேந்திராபுதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்

சின்ன பூவே என்னருகினில் வந்து 
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்

                       
மஞ்சள் வண்ண வானம் ஒன்று 
மையல் கொண்டு நானுதே
நெஞ்சில் இன்பம் ஊஞ்சல் கட்டி 
நான் மகிழ்ந்தேன்
தென்றல் வந்து பேசும்போது 
சேரும் இன்ப சாரலே
மின்னல் சிந்தும் வானம் எங்கும் 
நான் பறந்தேன்
ஒரு ரோஜா போலே 
பனி தாங்கி கொள்ள 
பனி நீரை போலே 
ஒலி வாங்கிக் கொள்ள
அதி காலை எல்லாம் இன்பம் இன்பம் 
எங்கும் பேரின்பம்
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து 
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்

                       
எண்ணி எண்ணி பார்க்க எந்தன்
நெஞ்சம் மஞ்சம் போடுதே
கண்ணில் வந்து ஆடும் காட்சி தேன் சிந்துதே
நித்தம் நித்தம் கங்கை வந்து 
வங்க கடல் சேருதே
நெஞ்சக் கடல்தான் நிரம்பும் 
நாள் வருமா
அழகாய் வானம் அதில் நிலவாய் நானே 
சுகமாய் ராகம் அதில் சுவையும் நானே
வரும் காலம் எல்லாம் இன்பம் இன்பம் 
சேரும் ஆனந்தம்
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து 
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்