பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 21 நவம்பர், 2014

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்..thendral urangiya pothum thingal...

எஸ் எஸ் ஆர் அவர்களுக்காக A M ராஜா குரல் கொடுத்திருக்கும் ஒரு பாடல். வேறு பாடல்கள் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இனிமை.

திரைப் படம்: பெற்ற மகனை விற்ற அன்னை (1958)
இயக்கம்:  V ராமநாதன்
நடிப்பு: எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: மருதகாசி
குரல்கள்: A M ராஜா, P சுசீலா

தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


நீல இரவிலே தோன்றும் நிலவை போலவே

நிலவை போலவே

வாலை குமரியே நீயும் வந்த போதிலே

வந்த போதிலே


நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசைதீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசைதீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா

ஆ ஆஅ.ஆஆ


இதய வானிலே இன்ப கனவு கோடியே

கனவு கோடியே

உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே

ஆடும் போதிலே


வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா

வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா

வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா

வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா


ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக