பின்பற்றுபவர்கள்

T R ராமண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
T R ராமண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜனவரி, 2013

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம்

இனிமையான குரல் மற்றும் இசையில் புரட்சி தலைவரின் ஒரு நல்ல பாடல்.

திரைப் படம்: பாசம் (1962)
பாடியவர்கள்: P சுசீலா, P B S
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: T R ராமண்ணா
நடிப்பு:  எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி 



Upload Music - Upload Audio Files -








பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணமில்லையா..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா என்று அள்ளி கொண்ட மங்கையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை பட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா..


நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..

சனி, 22 டிசம்பர், 2012

சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு

பாடல்   முழுவதும் ஒரு கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார்கள். (அதுதான் கிணற்றுத் தவளைக்கும் வேண்டும்?) இந்த பாடலின் டெம்ப்போ மற்றும் இனிமை குறையாமல் இருக்க 
T K ராமமூர்த்தியின் இசையும் அழகான பாரதியும் வழக்கமான தொந்தியும் தொப்பையுமாக இல்லாத சிவாஜியும் காரணமாக இருக்கலாம்.

திரைப் படம்: தங்க சுரங்கம் (1969)
குரல்கள்: T M S, P. சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, பாரதி

இயக்கம்: T R ராமண்ணா 

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NTY3NF94MXhlRl81ZTZl/Sandana%20kudathukkulle%20bandhugal.MP3





சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது


சந்தனக் குடத்துக்குள்ளே 
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது

சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன
மனமோ இது

மனமோ இது
என்ன சுகமோ இது



சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன
மனமோ இது

மனமோ இது
என்ன சுகமோ இது 



ஆடுது குலுங்குது
ஆடையிட்டு மூடுது
பழமோ இது

கொஞ்சம் பதமோ இது

ஆசை நடுவில் காதல் எழுதும்
படமோ இது
தேன் குடமோ இது


இங்கு ஏறும் 
ஒரு மயக்கம்
நெஞ்சில் இறங்கும் 

ஒரு கலக்கம்
ம் ம் ம் ம் ம் ம்

சந்தனக் குடத்துக்குள்ளே 
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது

காற்றினில் நடுங்குது
கதகதப்பாகுது
கனலோ இது
இன்பக் கனவோ இது


கன்னம் இரண்டும் நெஞ்சில் பொழியும்
மழையோ இது
இன்பச் சுவையோ இது


இதழ் மேலே ஒரு படிப்பு

அதனாலே ஒரு துடிப்பு


அம்மா  அப்பா  ஆ

சந்தனக் குடத்துக்குள்ளே 
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது

வியாழன், 22 மார்ச், 2012

இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்


மிக மென்மையான சாதாரணமான இசை கருவிகளுடன் இசையும் அழகான குரல்களும் அலங்கரிக்கும் அபூர்வமாகிப் போன இனிமைப் பாடல்.

திரைப் படம்: வைரம் (1974)
இசை: T R பாப்பா
குரல்கள்: S P B, ஜெயலலிதா
இயக்கம்: T R ராமண்ணா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெயலலிதா, ஜெய்ஷங்கர்





http://www.divshare.com/download/17016096-578



http://www.divshare.com/download/17016174-ca9

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா
பொங்குது நாணம் பார்த்தது போதும்

ஹோ ஹோ ஹோ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம் மணவரை மகிமை
ஹா ஹா ஹா அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே போதையும் பார்த்தேன்
சிரிப்பால் என்னை மாணிக்க பதுமை அழைத்தது கண்டேன்
எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பது கண்டேன்
இன்றே நான் பார்க்கவோ இல்லை நாள் பார்க்கவா
ஹா அவசரம் என்ன
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காமன் வேண்டும் என்றான் அவனிடம் தந்தேன்
கடை கண் வீசும் பனிமொழியாகும் பால் அபிஷேகம்
இடை எனும் பதுமை நடை எனும் தேரில் ஊர்வல கோலம்
மாலை பொன் மாலையா இல்லை பூ மாலையா
ஆ ஆ ஆ ஆ ஆ
கோவிலில் பார்ப்போம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஓ ஓ ஓ
ஏங்குது மோகம்
ஆ ஆ ஆ
பாடுது ராகம்
ல ல ல
ஏங்குது மோகம்
ம் ம் ம்
பாடுது ராகம்