பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 மார்ச், 2017

பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா..

திரைப் படம்: யார் நீ? (1966)
நடிப்பு: ஜெய்சங்கர், ஜெயலலிதா, குமாரி ராதா
இசை: வேதா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி எம் எஸ், எல். ஆர் ஈஸ்வரி
இயக்கம்: சத்யம்

இந்த திரைப்படத்தின்  ஹிந்தி மூலம்..Woh Kaun Thi?
பாடல்களும் அப்படியே. ஆனாலும் அனைத்து பாடல்களையும்  இனிமையாக  கொடுத்திருக்கிறார் வேதா. அதுவும் இந்த பாடல் டி எம் எஸ் ஜெய்சங்கர் குரலில் அசத்தி இருப்பார். டி எம் எஸ், எல். ஆர் ஈஸ்வரி இருவரும் மிக அமைதியாக  பாடியிருக்கும் பல  பாடல்களில் இதுவும் ஒன்று.
இதே  படம் தெலுங்கிலும் Aame Evaru? என ரீமேக் செய்யப்பட்டது.


Upload Music - Audio Hosting -


ஹாஹா ஹாஹா ஹாஹா
ஹாஹா ஹாஹா ஹாஹா
ஹாஹா ஹாஹா ஹாஹா

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா..

பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா

பார்வை ஒன்றே போதுமே

காதல் திராட்சை கொடியிலே
கள்ளொடு ஆடும் கனியிலே
ஊரும் இன்ப கடலிலே
உன்னோடு நானும் ஆடவா

அப்போது நெஞ்சம் ஆறுமா
எப்போதுமே கொண்டாடுமா

பார்வை ஒன்றே போதுமே

ஆசை கைகள் அழைப்பிலே
அஞ்சாமல் சேரும் அணைப்பிலே
வாழை மேனி வாடுமே
அம்மம்மா போதும் போதுமே

இல்லாமல் நெஞ்சம் ஆறுமா
இல்லாவிட்டால் பெண் ஆகுமா

பார்வை ஒன்றே போதுமா

காலம் என்னும் காற்றிலே
கல்யாண வாழ்த்து பாட்டிலே

ஒன்று சேர்ந்து வாழலாம்
உல்லாச வானம் போகலாம்

அப்போது நெஞ்சம் ஆறுமே
எப்போதுமே கொண்டாடுமே

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா

பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா

பார்வை ஒன்றே போதுமே

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் பிடித்த பாடல்...

Unknown சொன்னது…

Nice Sir

Ajai Sunilkar Joseph சொன்னது…

அருமையான பாடல்...

Ranjith Ramadasan சொன்னது…

அருமை மகிழ்ச்சி இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் https://www.techhelpertamil.xyz/
YouTube Channel: Tech Helper Tamil

கருத்துரையிடுக