பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 நவம்பர், 2011

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்


அழகான நீரொடைப் போல ஒரு பாடல். இசையும் கவிதையும், குரல்களும் தங்கு தடங்கல் இன்றி அழகான ஒரு ஓட்டம்.

திரைப் படம்: இது சத்தியம் (1963)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: T M S,  P சுசீலா
நடிப்பு: அசோகன், சந்த்ரகாந்த்
பாடல்: கண்ணதாசன்http://www.divshare.com/download/16268763-44e


மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
ஆஹா ஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்

முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும்
ஆஹா கல்லும் கனியாகும்

பாதிக் கண்ணை மூடித்திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
உன் பாதிக் கண்ணை மூடித்திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து

ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு
சாறு கொண்ட காதல் கரும்பு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததும் உண்டு

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும்
ஆஹா கல்லும் கனியாகும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
தென்னம்பாளை போல சிரித்தாள்
சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள்
கன்னம் என்ற கனிகளின் மீது
இன்னும் நாணம் மோதுவதேனோ
கன்னம் என்ற கனிகளின் மீது
இன்னும் நாணம் மோதுவதேனோ

அவள் இவள்தானா இவள் அவள்தானா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா

வானம்பாடிப் போலப் பறந்தாள்
வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
வானம்பாடிப் போலப் பறந்தாள்
வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
காதல் தந்த கள்வனைக் கண்டாள்
கன்னி தந்த கையில் விழுந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

அவள் இவள்தானா இவள் அவள்தானா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஞாயிறு, 27 நவம்பர், 2011

இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் மடி மீது தலை வைத்து


இனிமையோ இனிமை. இசை, பாடல் வரிகள், குரல்கள் எல்லாமே. இசையமைப்பாளருக்கு இது முதல் திரைப் பாடல் என்பதாகவே தெரியவில்லை. பின்னர் இவர் காணாமல் போனார் என்பது சோகமே.

திரைப் படம்: மண்ணுக்குள் வைரம் (1986)
இசை: தேவேந்திரன்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: ரஞ்சனி, முரளி
இயக்கம்: மனோஜ் குமார்

http://www.divshare.com/download/16267401-753
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடி மீது தலை வைத்து
மடி மீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும்

இதழோடு...
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

என் பேரை மறந்து நான் இருந்தேன்
நீ எந்தன் நினைவாக வந்தாய்
ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்
கச்சேரி கேளாத இசையுண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்
கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீயின்றி நகராது நாட்கள்
கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்
பினி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடி மீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும்

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்.

சனி, 26 நவம்பர், 2011

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம் கன்னி பெண்னை சுற்றுவதேன் காதலராட்டம்


திரு கோவை ரவி அவர்களின் விருப்பப் பாடல். இனிமையான கலாட்டா பாடல். இனிய குரல்களில் ஒலிக்கிறது.

திரைப் படம்: ஒரு கோவில் இரு தீபங்கள் (1979)
நடிப்பு: விஜய், சரோஜா (யாரோ புதியவர்கள்)
இசை: M தக்ஷினாமூர்த்தி.
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன்http://www.divshare.com/download/14201702-7a3உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி பெண்னை சுற்றுவதேன் காதலராட்டம்
பாடம் கற்றுதரும் முன்னே நீ எடுத்திடு ஓட்டம்
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

கையால் தொட்டாலே
கன்னம் புண்ணாகும்
ஆசை என்னாகும்
அச்சம் உண்டாகும்
ஆடல் இன்பம்
தேடவில்லை
ஆனந்தமே
தேவை இல்லை
செவ்விதழ் மலரட்டுமே
தேன் மழை பொழியட்டுமே
பொன்னுடல் சாய்ந்தாலென்ன
புதிய சுகம் கண்டாலென்ன
கல்லூரி படிப்பில் சீரோ
காதல் நடிப்பில் ஹீரோ
கற்பனை ஒண்ணா ரெண்டா
கனவெல்லாமே நடப்பதுண்டா
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்


பருவம் வந்தாலே
பார்த்து பழகனும்
பழக வந்தாலே
பாசம் மலரனும்
தேன் மதுவோ
போதை தரும்
மான் விழியோ
மையல் தரும்
ஊடல் இரவு வரை
கூடல் விடியும் வரை
இரவே வந்தால் இன்பம் பொங்கும் அறை பள்ளியறை
நானும் படித்தவள்தான்
நாலும் தெரிந்தவள்தான்
அச்சத்தால் ஆசைகளை
அடக்கி வாழும் பெண்மகள்தான்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி என்னை கை பிடித்தாய் காதலனாட்டம்
பாடம் கற்று கொள்ளும் ஆட்டம்தானே காதல் கொண்டாட்டம்
லா ல ல ல லா ல ல  ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல

வெள்ளி, 25 நவம்பர், 2011

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அழைத்தாய் மறுமுறை


இனிமையான பாடல்.

திரைப் படம்: முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)
குரல்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா
இசை: இளையராஜா
இயக்கம்: A. ஜகன்னாதன்
பாடல்: கங்கை அமரன்
நடிப்பு: விஜயகுமார், சுமித்ராhttp://www.divshare.com/download/16225408-59f

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அழைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்துத் தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

பொங்கி வரும் அலை பூச்சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது
மலர் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம்.. வா இப்போது

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வது போலே
நான் உனை சேர்ந்திருப்பேன்
கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும்.... நான் உன்னோடு

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உனைக் காண்பது போலே
கனவினில் நான் மிதந்தேன்
உறவிருந்தால் தனிமை இல்லை
தனித்திருந்தால் இனிமை இல்லை
இனிமேல் பிரிவே இல்லை.. நாம் ஒன்றானோம்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அழைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்துத் தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

வியாழன், 24 நவம்பர், 2011

தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே


மறைந்த திரு மலேஷியா வாசுதேவன் குரலுடன்  S ஜானகி அம்மா  இணைந்து கலக்கி இருக்கும் பாடல். இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒரு மைல்கல் எனலாம். தாளம் போட வைக்கிறது.

திரைப் படம்: அதிசயப் பிறவி (1990)
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வாலி
நடிப்பு: ரஜினி, கனகாhttp://www.divshare.com/download/16033056-f20
http://www.divshare.com/download/16033022-d8b


தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் அந்த வான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதும்மா

சொந்ததில் தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி
கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே

மானாக பொன்னுக சிக்கும் மச்சின கைராசி
அத நான் பாத்தேன் கண்ணுல சிக்கி அப்படி உன் ராசி
சிருவாணி கெண்டையப்போல மின்னுது கண்ராசி
நீ சிரிச்சாக்க சில்லரை கொட்டும் உத்தமி உன் ராசி
நான் வாங்கிடும் உள் மூச்சிலே, நீ சேரவே
சூடாச்சுதே
வஞ்சி மனம் பூத்தாட, கெஞ்சி தினம் கூத்தாட
ஒன்னுக்குள்ளே ஒன்னு வந்து உன் உயிரோட ஒட்டுதய்யா

தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் அந்த வான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதும்மா

சொந்ததில் தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி
கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே

அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்
அட கூத்தாடும் வைகை ஆறு பாடுர என் பாட்டும்
தேரோடும் தென்மதுரை சன்னிதி கண்டவனோ
அந்த ஊராண்ட உத்தமனின் சந்ததி வந்தவனோ
உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே
எனக்கேனம்மா
நெஞ்சத்திலே நீ ஆள, மஞ்சத்திலே நான் ஆள
காதலென்னும் ஆட்சிதனை வானமும் கூட வாழ்த்துதம்மா

தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் அந்த வான் போட
புது மாக்கோலம் விழி மீன்போட
அடி அம்மா முத்து முத்தா..கொட்டுது கொட்டுதும்மா

சொந்ததில் தானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி
கொட்டி
ஆஹா யார் வந்தது
நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே..நெஞ்சுக்குள்ளே

செவ்வாய், 22 நவம்பர், 2011

கண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவியம்


அமைதியான இனிமையான பாடல். திரு G ராமனாதன் இசையில் பாடல் என்றாலே தனி இனிமைதான்.

திரைப்படம்: சாரங்கதாரா (1958)
பாடியவர்: ஜிக்கி, T M S
இசை: G. ராமநாதன்
பாடல் : மருதகாசி
இயக்கம்: V S ராகவன்
நடிப்பு: சிவாஜி, பானுமதி
http://asoktamil.opendrive.com/files/Nl8zNzc0NzM0N19HZFNIZl9lNjQz/Kangalal%20kaathal%20kaviyam.mp3


கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

தங்கள் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

தங்களால் ஆ ஆ ஆ ஆ
தங்களால் இந்த இன்பமே
என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
தங்களால் இந்த இன்பமே
என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
தங்கமே அதில் ஐயமேன்?
இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே ஏ ஏ ஏ  
தங்கமே அதில் ஐயமேன்
இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே
திங்களைக் கண்ட அல்லி போல்
திருவாய் மொழியால்
உள்ளம் மலருதே
செந்தமிழ் கலைச்செல்வியே
மனம் தேனுன்னும் வண்டாய் மகிழுதே
கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்


மண்ணிலே ஆ ஆ ஆ
மண்ணிலே உள்ள யாவும்
எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே
மண்ணிலே உள்ள யாவும்
எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே

எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோணுதே ஏ ஏ ஏ
எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோணுதே
இன்பமோ அன்றி துன்பமோ
எது நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்
அன்றில் போல் பிரியாமலே
நாம் இன்று போல் என்றுமே வாழ்வோம்
கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்திங்கள், 21 நவம்பர், 2011

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்


இளையராஜாவின் ஆரம்ப கால படப் பாடல் போலவே இதுவும் இனிமை.

திரைப் படம்: நூறாவது நாள் (1984)
குரல்கள்:  S P B, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், நளினி
இயக்கம்: மணிவண்ணன்
http://www.divshare.com/download/16163338-4b4

http://www.divshare.com/download/16163380-ac0

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ம் ம் ம் ம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

ஓ ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஒதலாம்

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
ல ல ல ல
ல ல ல ல
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
இன்ப சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலையாகும் காவிரி மடியில் தூங்கும் காதலி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

வீணையடி நீயெனக்கு...மேவும் விரல் நானுனக்கு..பூணும்வடம் நீயெனக்கு....


மகா கவி பாரதியின் பாடல்கள் பல திரைப் படப் பாடல்களாக வந்துள்ளன. ஆனால் காலத்திகேற்ற வகையில் பழமையான இசையையும் புதிய வகையில் கலந்து இனிமை குறையாமல் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

திரைப் படம்: ஏழாவது மனிதன் (1982)
குரல்கள்:  K J யேஸுதாஸ், நீரஜா
இசை: L வைத்ய நாதன்
மகாகவி பாரதியின் பாடல்
நடிப்பு: ரகுவரன், அனிதா
இயக்கம்: K ஹரிஹரன்
 


பாயுமொளி நீயெனக்கு...
பார்க்கும் விழி நானுனக்கு...
தோயும் மது நீயெனக்கு...
தும்பியடி நானுனக்கு...
வாயுரைக்க வருகுதில்லை...
வாழி நின்றன் மேன்மையெல்லாம்...
தூய சுடர் வானொளியே...
சூரையமுதே...
கண்ணம்மா....

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
பூணு(ம்)வடம் நீயெனக்கு...
புது வைரம் நானுனக்கு...

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
பூணும்வடம் நீயெனக்கு...
புது வைரம் நானுனக்கு...

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...


வானமழை நீயெனக்கு...
வண்ண மயில் நானுனக்கு...
 
வானமழை நீயெனக்கு...
வண்ண மயில் நானுனக்கு...
பானமடி நீயனக்கு...
பாண்டமடி நானுக்கு...
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமரு நல்லழகே...
நல்லழகே...
ஊனமரு நல்லழகே...
ஊறுசுவையே...கண்ணம்மா...

காதலடி நீயெனக்கு...
காந்தமடி நானுனக்கு...
வேதமடி நீயெனக்கு...
வித்தையடி நானுனக்கு...
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே...
நாதவடிவானவளே...நல்ல உயிரே...கண்ணம்மா...

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...

சனி, 19 நவம்பர், 2011

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்


இது திரு தாஸ் அவர்களின் விருப்பமான பாடல். அவருக்கு மட்டுமில்லை நமக்கும் பிடித்த பாடல்தான். என்னவொரு தங்கு தடங்கல் இல்லாத ஓட்டம் பாட்டில்? நல்லதொரு பாடலுக்கு இது உதாரணம். மென்மையான பின்னனி இசையுடன் இனிமை குரல்களால் பாடல் முழுமை பெற்றுள்ளது.

திரைப் படம்: நாணல் (1965)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வி.குமார்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
இயக்கம்: K பாலசந்தர்http://www.divshare.com/download/16211248-e8f

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்

மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு

பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

வெள்ளி, 18 நவம்பர், 2011

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்ணம்


இனிமை பாட்டு. சரியான குரல் தெரிவு. இளையராஜாவின் இசை என்னவோ வழக்கமான இசைதான் என்றாலும் மனதை வருடுகிறது.

திரைப் படம்: நண்டு (1981)
குரல்: உமா ரமணன்
இசை: இளையராஜா
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: அஷ்வினி, சுரேஷ்
http://www.divshare.com/download/16198468-ac1http://www.divshare.com/download/16201795-a32
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே

பொன்னின் தோற்றமும்
பூவின் வாசமும்
ஒன்றினைந்த தேகமோ
பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ
பூமுகம் என் இதயம் முழுதும்
பூவெனும் என் நினைவை தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே

மேகம் நீர் தரும்
பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்ப புனல் ஓடிடும்
இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின்
நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின்
சுகங்கள்
வாழும் நாளும்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே

புதன், 16 நவம்பர், 2011

கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து


இனிமை இசையும், கவிதையில் அழகாக பெண்ணை வர்ணித்துள்ள கவிஞரும் பாடிய T M S அவர்களும் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அழகான பாடல்.

திரைப் படம்: தாயைக்காத்த தனயன் (1962)
இசை: K V மஹாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: M A திருமுகம்
http://www.divshare.com/download/16178345-4b3http://www.divshare.com/download/16178472-77a

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா

தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்

நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு
கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா

தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போலே வளைகிறாள்
தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போலே வளைகிறாள்

குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்

காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வர காணேனே


சுத்தமான தமிழ் உச்சரிப்புடன் அழகான தமிழ் கவிதையில் 'அவரைத்' தேடும் இவர். இது திரு தாஸ் மற்றும் என்னுடைய விருப்பமானப் பாடல்.

திரைப் படம்: பார்த்திபன் கனவு (1960)
இசை: S வேதா
குரல்: M L வசந்தகுமாரி
இயக்கம்: D யோகானந்த்
நடிப்பு: ஜெமினி, ராகினி
பாடல்: விந்தன்


http://www.divshare.com/download/16187891-762
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே
மயிலே..
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே

வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்த விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஏக்கத்தால் படிந்த விட்ட
தூக்கமில்லா துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே..
மயிலே
ஒத்தி எடுத்திடவே
உதடவரை தேடுதடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே

வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நா வறண்டால்
தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால்
எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வறண்டுவிட்டால்
எதை கொண்டு தணிப்பதடி
கள்ள சிரிப்பாலே
கன்னத்தை கிள்ளிவிட்டு
கள்ள சிரிப்பாலே
கன்னத்தை கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே..
மயிலே
அள்ளி அணைத்திடவே
அவர் வரக் காணேனடி
அந்தி மயங்குதடி
ஆசை பெருகுதடி
கந்தன் வர காணேனே

வண்ண மயிலே வண்ண மயிலே
வண்ண மயிலே வண்ண மயிலே

செவ்வாய், 15 நவம்பர், 2011

நான் அன்றி யார் வருவார் அன்பே நான் அன்றி யார் வருவார்


நான் கேள்வி பட்டது இந்த பாடல் எம் ஜி யாருக்காக மகாதேவி படத்திற்காக எழுதியது. ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் வேகமான பாடலாக கேட்டதால் இதை மாற்றி ''கண் மூடும் வேளையிலும் கலை என்ன'' என்ற பாடலை எழுதி கொடுத்தாராம். பின்னர் கண்ணதாசன் தன் சொந்த படத்தில் இந்தப் பாடலை உபயோகப் படுத்திக் கொண்டாராம்.
T R மாகாலிங்கம் அவர்கள் கீழ் ஸ்தாயில் பாடிய ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

திரைப் படம்: மாலையிட்ட மங்கை (1958)
இசை: M S விஸ்வனாதன் T K ராமமுர்த்தி
குரல்கள்: A P கோமலா, T R மகாலிங்கம்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: T R மகாலிங்கம், பண்டரி பாய்
இயக்கம்: G R நாதன்


Upload Music Files - Share Audio - NaanAndri Yaar arivaar

நான் அன்றி யார் வருவார் அன்பே
நான் அன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
நான் அன்றி யார் வருவார் அன்பே
நான் அன்றி யார் வருவார்

ஏன் இல்லை ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார் சொன்னார் தந்தார்
பேசாமல் பேசுகின்றார் வண்ணம் பாடாமல் பாடுகின்றார்

வண்ண பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன
வண்ண பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன

கூண்டு கிளி எடுத்து கொஞ்சினேன்

இதழ் கோவை என நினைத்து கொண்டதோ

கூண்டு கிளி எடுத்து கொஞ்சினேன்

இதழ் கோவை என நினைத்து கொண்டதோ
முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ

இன்னும் சந்தேகமா

கண்ணே....

கண்ணா....
மாதென்னை யார் தொடுவார்
எந்தன் மன்னன் உமை அன்றி யார் வருவார்
மாதென்னை யார் தொடுவார்

கன்னி மாலை கண்டும் இன்ப சோலை வந்தும்
இன்னும் கோபம் என்ன மின்னும் நானம் என்ன

நான தடை பிறந்த உள்ளமே
அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
இன்பம் பண் பாடுவோம்

கண்ணே...

கண்ணா...
நாம் அன்றி யார் அறிவார் அன்பே
நாம் அன்றி யார் அறிவார்
இன்ப நலம் நாடும் மன இன்பம் யார் பெறுவார்...
நாம் அன்றி யார் அறிவார்

திங்கள், 14 நவம்பர், 2011

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா இனி மாதம் பனிரெண்டுமே


S P B கலக்கியிருக்கும் மற்றொரு பாடல். இடையிடையே ஏதோ படக் காட்சிக்காக வரும் இசைத் தவிர மற்றபடி மென்மையான பின்னனி இசைக் கொண்ட அழகான பாடல்.

திரைப் படம்:  மதுமதி (1993)
பாடல்: காளிதாசன்
இசை : தேவா
இயக்கம்: அகத்தியன்
நடிப்பு: ப்ரசன்னா, மதுமிதாhttp://www.divshare.com/download/15777645-312
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா
ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

இனி மாதம் பனிரெண்டுமே
மலர் காலம் தொடர்ந்திடுமே
இளம் காதல் சபையினிலே
புது வேதம் மலர்ந்திடுமே
மதுபாலா......ஆ...ஆ...ஆ  ஆ
தாயாக மாறவா.. தாலாட்டு பாடவா..

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஊரெங்குமே ஓர் வெண்ணிலா நீதானே தேவி
ஏழை மகன் என் வீட்டில் நீ செந்தூர ஜோதி
இளமை காலங்கள் ஒளி வீசும்
இன்ப வசந்தங்கள் நாமல்லவா
எளிமை கோலத்தில் இருந்தாலும்
உந்தன் இதயம் நானல்லவா
மதுபாலா.. என் மதுபாலா
உன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஸ்ரீராமனின் சீதை மனம் பூ பூக்கும் நேரம்
ஊடல்களில் மாதங்களும் நாளாக மாறும்
திசைகள் எல்லாமே தடுமாறும்
இந்த திருமகள் பாதம் பட்டால்
உதயம் சொல்லாமல் இடம் மாறும்
உந்தன் விழி மலர் ஜாடை கண்டால்
மதுபாலா.. என் மதுபாலா
உன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா
ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

இனி மாதம் பனிரெண்டுமே
மலர் காலம் தொடர்ந்திடுமே
இளம் காதல் சபையினிலே
புது வேதம் மலர்ந்திடுமே
மதுபாலா......ஆ...ஆ...ஆ  ஆ

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஞாயிறு, 13 நவம்பர், 2011

செவ்வந்தி பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு

S P Bயின் அழகான குரலில் இனிமையான இசையுடன் ஒரு நல்ல பாடல். கிராமத்து வாடை பாடல் வரிகளில் பிரதிபலிக்கிறது.


திரைப் படம்: தங்கத்தின் தங்கம் (1990)
குரல்கள்: சித்ரா, S P B
இசை :S A ராஜ்குமார்
இயக்கம்: ஸ்ரீராஜ்
நடிப்பு: ராம ராஜன், ராக சுதாhttp://www.divshare.com/download/16117608-4d3

செவ்வந்தி பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

செவ்வந்திப் பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு

சித்தாடை பூ விழி மாமனை பார்த்து
சித்தாடை பூ விழி மாமனை பார்த்து

செய்தியை சொல்லித்தான் மாலைய மாத்து

செவ்வந்தி பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு


மாமன் தொடத் தானே
இன்னேரம் பூவும் மலர்ந்தேனே
மஞ்சள் பூ மேனி
உன்னாலே அந்தி நிறம் ஆனேன்

ஏலெ பூங்குயிலே உன் மாமன்
எதுக்கும் துணிஞ்சிருந்தேன்
இன்னைக்கு முதல் முதலா
பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சி
நின்னேன்

காலடி மண்ணுக்கு கன்னி நான்
பூஜை செய்வேன்

செவ்வந்தி பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு

பாட்டு புது பாட்டு பொன்மானே
பாடி தாலாட்டு நூறு பொறப்பெடுப்பேன்
உன்னோடு காதல் சீராட்டு

நூறு பிறவி என்ன மச்சானே
உள்ளத்தை கொடுத்த பின்னே
வானம் இருக்கும் வரை
உன்னோட
அன்புக்கு வயசு இல்லே

தோளுக்கு முந்தான
நெஞ்சுக்கு மாமன் தானே

செவ்வந்திப் பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு

சித்தாடை பூ விழி மாமனை பார்த்து
சித்தாடை பூ விழி மாமனை பார்த்து

செய்தியை சொல்லித்தான்
மாலைய மாத்து

செவ்வந்திப் பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு
சேரப் போறேன் மேளம் கொட்டு

சனி, 12 நவம்பர், 2011

குயிலோசையை வெல்லும் நல்ல குரல் ஓசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும்….


நல்ல தமிழிலில், கர்னாடக இசையில் மிகத் தெளிவான குரல்களில் இனிமையாக ஒலிக்கின்றது இந்தப் பாடல்.

திரைப் படம்: மன்னிப்பு (1969)
குரல்கள்: P சுசீலா, கோமளா
இசை: M S சுப்பையா நாயுடு
பாடல்: வாலி
நடிப்பு: லக்ஷ்மி, ஜெய்ஷங்கர், A V M ராஜன்http://www.divshare.com/download/16099689-42e

குயிலோசையை வெல்லும்
குயிலோசையை வெல்லும்
நல்ல குரல் ஓசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும்….
குயிலோசையை வெல்லும்
குயிலோசையை வெல்லும்
நல்ல குரல் ஓசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும்
குயிலோசையை வெல்லும்

துயிலாத கடல் போல அலை பாயும் நெஞ்சும்
துயிலாத கடல் போல அலை பாயும் நெஞ்சும்

தேனான இசை கேட்டு தானாக துஞ்சும்
குயிலோசையை வெல்லும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதை பாட தெய்வீகமாகும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதை பாட தெய்வீகமாகும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதை பாட தெய்வீகமாகும்

தெளிவான ஞானத்தில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவி எங்கும் மோதும்
குயிலோசையை வெல்லும்
நல்ல குரல் ஓசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும்….
குயிலோசையை வெல்லும்

மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதை பாட தெய்வீகமாகும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதை பாட தெய்வீகமாகும்

தெளிவான ஞானத்தில் உருவாகும் நாதம்
தெளிவான ஞானத்தில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவி எங்கும் மோதும்

புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே
புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே

பொன் அள்ளி கொடுத்தாலும் இதற்கேது விலையே
பொன் அள்ளி கொடுத்தாலும் இதற்கேது விலையே

இசை வெள்ளம் பாய்கின்ற திசை எங்கும் இன்பம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இசை வெள்ளம் பாய்கின்ற திசை எங்கும் இன்பம்

இதை வெல்ல புவி மீது வேறேது செல்வம்
இதை வெல்ல புவி மீது வேறேது செல்வம்
குயிலோசையை

வெள்ளி, 11 நவம்பர், 2011

சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல்

மீண்டும் ஒரு பாடல் வெங்கடேஷ் வழங்கியது. வழக்கம் போலே இனிமை.

திரைப் படம்: காஷ்மிர் காதலி
குரல்கள்: ஜெயசந்திரன் , P சுசீலா
இசை: G K வெங்கடேஷ்

http://asoktamil.opendrive.com/files/Nl8zNjc1NDk3M193YVVyel9kZTcz/Sangeethame%20Endeiveegame.mp3
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே
பேரின்பமே
சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே
பேரின்பமே

கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூரல்
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூரல்
பூங்காற்று வாழ்த்துச் சொல்லி போகின்றதோ

சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே
பேரின்பமே

நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோரும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோரும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நானத்தில் நானும் மோகத்தில் நீயும்
நானத்தில் நானும் மோகத்தில் நீயும்
போராடும் காட்சி தன்னை என்னென்பதோ
சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே
பேரின்பமே

வியாழன், 10 நவம்பர், 2011

முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன


இங்கே தமிழுக்கும் பாடலுக்கும் சம்பந்தமில்லை (பாடல் தமிழிலில் அவ்வளவுதான்) எனினும், அழகான ஒரு பாடலை இனிமையாக கையாண்டு இருக்கிறார்கள்.

திரைப் படம்: ராமன் அப்துல்லா (1997)
இசை: இளையராஜா
இயக்கம்: பாலு மகேந்திரா
நடிப்பு: விக்னேஷ், கரண், ஈஸ்வரி ராவ்
குரல்கள்: S P B, சித்ரா
பாடல்: வாலி

http://www.divshare.com/download/16111197-467http://www.divshare.com/download/16111448-b30

முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன

காதல் வழி சாலையிலே வேக தடை ஏதும் இல்லை

நானக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை

தாகம் வந்து பாய் விரிக்க தாவணி இப்போ சிலிர்க்கிறதே

மோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே

உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்

முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்

முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே

கனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடி இருக்கா

ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா

பூவை கிள்ளும் பாவனையில் சூடிக் கொள்ள தூண்டுகிறாய்

மச்சம் தொடும் தோரணயில் முத்தம் தர தீண்டுகிறாய்

மின்னல் சிந்தி சிரித்தாய் கண்ணில் என்னைக் குடித்தாய்

தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

ஆஹா
முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன
ம்கும்
முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன

புதன், 9 நவம்பர், 2011

குங்குமப் பொட்டின் மங்களம் நெஞ்சமிரண்டின் சங்கமம் இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

அழகான பாடல். இனிமையான இசையும் குரல்களும் பாடல் வரிகளும் ஒன்றாய் இணைந்த பாடல் எனது சிறு வயதிலேயே பள்ளி பருவத்திலேயே ரசித்த பாடல். ரோஷனரா பேகம் என்ற பெண்மணியின் பாடல் வரிகள். அதற்கு பின் அவர் பாடல் எதுவும் எழுதவில்லை என்று தெரிகிறது.


திரைப் படம்: குடியிருந்தக் கோவில்
இசை: M S விஸ்வனாதன்
பாடும் குரல்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: K ஷங்கர்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
http://www.divshare.com/download/16130511-223
http://www.divshare.com/download/16130897-1d5

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்

உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தித்திக்கும் இதழ் மீது மோகம்

தந்ததே மாந்தளிர் தேகம்

தந்ததே மாந்தளிர் தேகம்

தேகம் தேகம்

மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

பெண்ணான பின் என்னை தேடி

கொண்டதே எண்ணங்கள் கோடி

கொண்டதே எண்ணங்கள் கோடி

கோடி கோடி

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

தங்கம் மங்கும் நிறமான மங்கை

அங்கம் எங்கும் ஆனந்த கங்கை

ஜில்லென்னும் குளிர் காற்று வீசும்

மௌனமே தான் அங்கு பேசும்

மௌனமே தான் அங்கு பேசும்

பேசும் பேசும்

மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்

விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்

கற்பனை கடலானபோது

சென்றதே பூந்தென்றல் தூது

சென்றதே பூந்தென்றல் தூது

தூது தூது

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

செவ்வாய், 8 நவம்பர், 2011

சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம்


S P Bயின் ஆரம்பகால குரலில் T R பாப்பா அவர்களின் மிகக் குறைந்த இசைக் கருவிகளுடன் அழகானப் பாடல்.

திரைப் படம்: மறுபிறவி (1973)
குரல்: S P B
இசை:T R  பாப்பா
இயக்கம்:C V  ராமன்
நடிப்பு: முத்துராமன், மஞ்சுளாhttp://www.divshare.com/download/16125189-ece


சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

நான் தருவேன் கொஞ்ஜம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

எண்ணங்கள் சிந்தும் போதை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எண்ணங்கள் சிந்தும் போதை
கண்ணந்தனிலே அள்ளித்தருவேன்
கண்ணந்தனிலே அள்ளித்தருவேன்
முன்னூறு முத்தங்கள் போதாது
என் ஆசை இன்றோடு தீராது

சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

கட்டுக்குழல் தொட்டுக் கலை மொட்டுக்களில் ஆடும்
கன்னிச் சிறு வண்ணக் கனி நெஞ்சில் விளையாடும்
பாடம் இன்று ஆரம்பம் என்று
வாராய் கண்ணே தேன் கிண்ணம் உண்டு

சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

வெள்ளிக் குடம் அள்ளித் தரும் கொள்ளைச்சுவை எங்கே
வெள்ளிக் குடம் அள்ளித் தரும் கொள்ளைச்சுவை எங்கே
மேடைகளை ஆடைகளில் மூடும் ரதம் எங்கே

திங்கள், 7 நவம்பர், 2011

செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே


இது ஒரு இனிமையான அபூர்வ பாடல். சிறிய பாடலும் கூட.

திரைப் படம்: ஊருக்கு ஒரு ராஜா (1979)
பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
இசை: S D சேகர் , A R ரஹ்மான் தந்தை
நடிப்பு: அன்னபூரணி, ஸ்ரீராஜ்
இயக்கம்: S T தண்டபாணி
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ல ல ல ல ல
ம் ம் ம் ம் ம் ம்
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே
என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே

ராகம் பண்ணோடு இசையோடு உண்டாகும் இதமான ராகம்
மோகம் நெஞ்சோடு நினைவோடு உண்டாகும் சிங்கார மோகம்
நீதானே காதல் தேவன் நீதானே காதல் தேவி

செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ர ர ர ர ர ர ர
ல ல ல ல
ர ர ர ர
வானம் இரவோடு நிலவோடு உறவாடும் அழகான வானம்
வாழ்க்கை ஆணோடு பெண்ணோடு அரங்கேறும் சுகமான வாழ்க்கை
தென்பாண்டி கவிஞன் நீயே தேனூரும் கவிதை நீயே
மன்மத ராகங்களே பாடும் இதயங்களே
மாலைத் தென்றலிலே மயங்கும் பருவங்களே

ல ல  லலல்லல லல்லலல்ல லல்லலலல