பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

இனிமையான பாடல், இனிமை குரல்களில். இப் படத்தினைப்  பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. விபரங்கள் ஏதும் என்னிடம் இல்லை. நல்ல பாடல் அவ்வளவுதான்.

திரைப் படம்: தீர்ப்பு என் கையில் (1984)

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
 
வாணிஜெயராம் 

இசை: சங்கர் கணேஷ் 

இயக்கம்: V P சுந்தர் 

நடிப்பு: விஜய காந்த், சசிகலா 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTI1NjExNl9oOHNZUV9jNjgz/Mangala%20Kungumam.mp3
மங்கல குங்குமம் 

மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 

சங்கமம் ஆகும் நாளே

திருநாளே 

கல்யாண சங்கீதம் 

கண்ணாலே நீ பாடு

ஓ ஓ 

மங்கல குங்குமம் 

மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 

சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

கல்யாண சங்கீதம் 

கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 

அழகான பூவொன்று 

அமுதூறும் தேன் கொண்டு 

காற்றோடு கதை பேசும் நேரம் 

ஆ  ஆ ஆ   ஆ ஆ ஆ 

அழகான பூவொன்று 

அமுதூறும் தேன் கொண்டு 

காற்றோடு கதை பேசும் நேரம் 

ஆகாய மேகங்கள் 

பனி சிந்தும் காலங்கள் 

ஆசை நெஞ்சம் 

உன்னை நாடி உறவாடுமே 

பூங்கன்னங்கள் தன்னை 

என் இதழாலே மூடவா 
பூங்கன்னங்கள் தன்னை 

என் இதழாலே மூடவா மங்கல குங்குமம் 

மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 

சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

கல்யாண சங்கீதம் 

கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 

மங்கல குங்குமம் 

மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 

சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

நீ பார்க்கும் பார்வைகள் 

என்னாசை தீயினை 

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு 

ஓ  ஓ ஓ ஓ நீ பார்க்கும் பார்வைகள் 

என்னாசை தீயினை 

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு 
பொன்னான நாள் வரும் 

உன்னாசை தீர்ந்திடும் 

காதல் கண்ணா நீயும் 

கொஞ்சம் பொறுத்தாலென்ன 

நான் நீராடும் கங்கை 

என் பொன்மேனி ஆகுமே நான் நீராடும் கங்கை 

என் பொன்மேனி ஆகுமே மங்கல குங்குமம் 

மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 

சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

கல்யாண சங்கீதம் 

கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 

ல ல ல ல ல ல லாலா லாலா 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா

மறைந்த மலேசிய வாசுதேவன் அவர்களும் நல்ல பாடகர், இசையமைப்பாளர், நடிகர். ஆனால் எதிலும் தமிழ் திரை உலகின் சூட்சமம் தெரியாததால் முழு வெற்றி பெறமுடியாமல் போனவர்.
வித்தியாசமான ஒரு காலகட்டத்தில் அமைதியான வகையில் ஒரு அட்டகாசமான பாடலை வழங்கியிருந்தார் இசை ஞானி.
கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்க வேண்டிய பாடல்.

திரைப் படம்: நண்டு (1981)
இசை: இளையராஜா
பாடியவர்: மறைந்த மலேசிய வாசுதேவன்
பாடல்: வைரமுத்து என்று நினைக்கிறேன்.
இயக்கம்: J மகேந்திரன்
நடிப்பு: சுரேஷ், அஷ்வினி
எழுதியவர்: P B ஸ்ரீனிவாஸ் அல்லது கங்கை அமரன்???

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTI1NTk5NF9idlFLcl82NmEz/AlliThandhaBhoomi.mp3

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூம் ஹூம் ஹூம் ஹூம்
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம் தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் ஆதனம் தேனோ
விரியும் பூக்கள் பாலங்கள்
விசிறியாகும் நானல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஹூ ஹூம் ஹூ ஹூம் ஹூ ஹு ஹூம் ஹூம் ம்ம்ம்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

காதல் கடல் கரையோரமே என் கண்ணே

சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஜெயராமன் ஒரு நல்ல பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அந்தக் காலத்தில் ஒரே ஒரு திறமையை மட்டும் வளர்த்துகொண்டு பிரபலம் அடைந்தவர்கள் குறைவு. உதாரணம் சிவாஜி கணேசன்.
எம் ஜி யார் நடிப்பு+அரசியல், கமல் நடிப்பு+நடனம் இப்படி பலர்.

இன்று சாமானியர்களாகிய  நாம் மட்டுமே multi task or multicraft என அந்த பழைய முறைகளை பின்பற்றி வருகிறோம். அது நமது பிழைப்புக்காக.
நமது அரசியல் வாதிகளுக்கு அந்த தொந்திரவே இல்லை. ஒரே திறமை மக்களை ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவு தான். ஓகே இங்கே எதற்கு அரசியல்.

நல்லதொரு பாடலை கேட்போம்.
இதுவும் இரண்டு பொண்டாட்டி காரன் (!) கதைதான் போலிருக்கிறது.
படத்திற்கு கதை, வசனம்: மு கருணாநிதி. இது அவருடைய சொந்த படம் (மேகலா பிச்சர்ஸ்)

எது எப்படியோ பாடல் அருமை.

திரைப்படம்: குறவஞ்சி (1960)
இசை:T R பாப்பா
பாடியவர்கள்: C S ஜயராமன், P லீலா, ஜமுனா ராணி
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, மைனாவதி
இயக்கம்: A காசிலிங்கம்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDkxOTU1MF9WZExhal9kZmYz/KAATHAL%20KADAL%20KARAIYORAMEY%20SSKFILM015%20CSJPLPS%20@%20KURAVANJI[128].mp3

காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காதல் கடல்
இன்பமே
காதல் கடல்
என்றுமே காதல் கடல் கரையோரமே

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காதல் கடல் கரையோரமே

நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே
நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

 ஆ  ஆ ஆ ஆ

முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முழு மதிபோலே வீசிடுவேனே
ஒளி வீசிடுவேனே

காதல் கடல்
இன்பமே
காதல் கடல்
என்றுமே
காதல் கடல் கரையோரமே
கண்ணே
காத்திருந்து நாமே
தவம் புரிந்தோமே
காத்திருந்து நாமே
தவம் புரிந்தோமே
காதல் கடல் கரையோரமே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

புதன், 24 ஏப்ரல், 2013

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே

ரஜினி படங்கள் ஒரு காலத்தில் பாட்டுக்காகவே ஓடிய படங்களும் உண்டு. அந்த வரிசையில், ரஜினி திரையில் பாட்டு பாடுபவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே சிறந்த பாடல்கள் வரிசையில் வரும்.   ஸ்வர்ணலதாவின்  அழகானக் குரலில் கேட்டு மகிழ்வோம்.

திரைப் படம்: வீரா (1994)
நடிப்பு: ரஜினி, மீனா
இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல்: வாலி

http://asoktamil.opendrive.com/files/Nl80OTQ3Mzg3X1drWktoXzBiYmU/MalaiKovil.mp3

ஒ  ஒ  ஒ   ஒ  ஒ  ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ  
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 

நாடகம்  ஆடிய  பாடகன்
ஒ  ஒ   ஒ   ஒ  
நீ  இன்று  நான்  தொடும்  காதலன்
ஒ  ஒ   ஒ   ஒ  

நீ  சொல்ல  நான்  மெல்ல  மாறினேன் 
நன்றியை  வாய்  விட்டு   கூறினேன் 

நீர்  அழகும்  செல்ல  பேர்  அழகும் 
உன்னை  சேராதா  உடன்  வாராதா 
மான்  அழகும்  கெண்டை  மீன்  அழகும் 
கண்கள்  காட்டாதா  இசை  கூட்டாதா
பாலாடை  இவன்  மேலாட  
வண்ண  நூலாடை  இனி  நீ  ஆகும் 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

நான்  ஒரு  பூச்சரம்  ஆகவோ 
நீள்  குழல்  மீதினில்  ஆடவோ 
நான்  ஒரு  மேலிசை  ஆகவோ 
நாளும்  உன்  நாவினில்  ஆடவோ 
நான்  படிக்கும்  தமிழ்  கீர்த்தனங்கள் 
இங்கு  நாள்  தோறும்  உந்தன்  சீர்  பாடும் 
பூ  மரத்தில்  பசும்  பொன்  நிறத்தில் 
வலை  பூத்தாடும்  உந்தன்  பேர்  பாடும் 
மா  கோலம்  மழை  நீர்  கோலம் 
வண்ண  நாள்  காணும்  இந்த  ஊர்கோலம் 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 
முத்து  முத்து  சுடரே சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லு

திங்கள், 22 ஏப்ரல், 2013

மண மேடை மலர்களுடன் தீபம்

P சுசீலா அம்மாவின் குரல் விசேஷமாக ஒலிப்பதாக இந்தப் பாடலில் தெரிகிறது எனக்கு. எவ்வளவு மென்மை. அதற்கேற்ற பாடல் வரிகளை விழுங்காத இசை. கிருஸ்த்துவர்களின் ஆலயத்தில் பயன்படுத்தப் படும் இசைக் கருவிகளையே பெரும்பாலும் உபயோகித்திருக்கிறார் இசையமைப்பாளர். ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஒன்றிவிட்டேன் பாடலில். அருமையானப் பாடல்.திரைப் படம்: ஞான ஒளி (1972)
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: P. மாதவன்
நடிப்பு: சிவாஜி, சாரதா, ஜெய கௌசல்யாhttp://asoktamil.opendrive.com/files/Nl8xMDk3MTQ4NF9xU1NZYV9kOTY0/Mana%20medai.mp3

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பெருமூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவார் தேவன் நம் பாதை எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

சனி, 20 ஏப்ரல், 2013

பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே

நானும் இந்த இரண்டு பாடல்கள் இரண்டு வாரங்களாக ப்திவேற்றத் தயாராக வைத்திருக்கிறேன். திரு  P B S மற்றும் T K R மறைவு கொஞ்சம் காலம் தாழ்த்திவிட்டது.

கிணற்றுத் தவளை கொஞ்சம் தடம் மாறி சினிமா பாடல்களில் இருந்து இன்று மட்டும் இரண்டு பக்தி பாடல்களை வழங்க உள்ளது. (நம்மை எந்த பாம்பும் விழுங்காம இருக்க இறைவன் அருளும் வேண்டுமல்லவா? அல்லது செஞ்ச பாவத்தை கழுவன்னு வச்சுகோங்களேன்)

கேட்க, மனதிற்கு இனிமையும் அமைதியும் தரும் எந்தப் பாடல் ஆனாலும் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா?

பெங்களூர் ஸ்ரீ ரமணி அம்மாள்  அவர்களின் சமஸ்கிருத(?) பொம்ம பொம்ம தாவும் தொடர்ந்து அதையே தமிழில் SPB பாடிய பொம்ம பொம்ம தாவும் இங்கே பதிந்திருக்கிறேன்.
பிடித்தவர்கள் கேட்டு இன்புறுங்கள். மற்றவர்களுக்கு நாளை மீண்டும் இனிமையான பழைய தமிழ் திரை இசை பாடல்களுடன் வருகிறேன்.

இதுவரை இந்த இணையில் கருத்துக்களை வழங்கியோருக்கும் இனி வழங்கவிருப்போருக்கும் எனது நன்றிகள்.
அவர்களுக்கு தனித் தனியாக எனது பதில் கருத்தையும், நன்றியையும் வழங்காதிருப்பதற்கும் எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இசை: டி.கே.ராமமூர்த்தி 
இயக்கம்: எம்.என்.சுப்ரமணியம்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDc2NjI1OF83bmprUV8xNDVl/Bomma%20Bomma%20Tha.mp3

பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்காS P B வழங்கியது:

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDc2NDcxNF92SFgyNF8zNzRj/bomma%20bomma%20tha%20by%20SPB.mp3
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த  நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

அருகம் புல்லுக்கருளும் தேவா கர்ப்பக கன நாதா பொருளும் புகழும் வேனும் அய்யா நல்லருள் புரிவாயா

நான்கு வேத நடுவிலிருந்து ஆளும் பகவானே
நான்கு வேத நடுவிலிருந்து ஆளும் பகவானே
நீ நாதமான நள்ளிரவில் ஒரு கனவாய் வருவாயே
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அருகம் புல்லுக்கருளும் தேவா கர்ப்பக கன நாதா பொருளும் புகழும் வேனும் அய்யா நல்லருள் புரிவாயா

கண கண கண கண கணபதி

மாதம் ஆவணி மனையின் மீது நீ வீடு தேடி வருவாய்
சுண்டல் முக்கனி வாசம் வீசிட கோலாகலமாவாய்
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அருகம் புல்லுக்கருளும் தேவா கர்ப்பக கன நாதா பொருளும் புகழும் வேனும் அய்யா நல்லருள் புரிவாயா
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

எருக்கம் பூவில் மாலை சூடினோம் அப்பா வேலமுதா
பருத்தி பஞ்சிலே பூணூல் இட்டோம் கொள்ளை அழகப்பா

பாரதம் எழுதிய பண்டிதனாரே பிள்ளையாரப்பா
நாரதர் தும்குருகானம் கேட்டு நாட்டியம் ஆடப்பா

ஆவணி மாதம் அல்லிக்கேணியில் ஊர்வலம் உனக்கப்பா
இந்து மாகடல் பொங்கியெழுந்தது ஆர்ப்பரிக்குமப்பா

ஆத்தங்கரையினில் அரச மேடையில் உந்தன் ராஜாங்கம்
ஆனை முகத்தின் ஆணைப் படியே  பணியும் பூகோளம் 

அப்பம் அதிரசம் நெய் பொங்கலிலே ஊரே மணக்குதப்பா
ஆவணி காற்றில் உன் புகழ் வீச உலகே மணக்குதப்பா

மூல காரணா மோகன ரூபா முந்தி வினாயகனே
சிறு கை விரலில் அபிநயம் பிடித்து ஆடுக  கோமகனே

சைவ வைணவம் ஜாதிமாச்சர்யம் ஏதும் உனக்கில்லை
உன் தயவு இல்லாது போனால் சொர்க்க வாசல் திறப்பதில்லை

உலகைத் தாங்கும் சிவனைத் தாங்கும் கர்ப்பக பெருமானே
பிள்ளையாரப் பட்டி சன்னதி வந்தால் உலகம் மறக்கிறதே

அருகம் புல்லுக்கருளும் தேவா கர்ப்பக கன நாதா பொருளும் புகழும் வேனும் அய்யா நல்லருள் புரிவாயா அருகம் புல்லுக்கருளும் தேவா கர்ப்பக கன நாதா பொருளும் புகழும் வேனும் அய்யா நல்லருள் புரிவாயா
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
கணேசா  சரணம் சரணம் கணேசா
பொம்ம பொம்மதா தைய தையதக்க தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமிர்த நாகர்தின்ன தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
கணேசா சரணம் சரணம் கணேசா கணேசா சரணம் சரணம் கணேசா

வியாழன், 18 ஏப்ரல், 2013

காதலன் வந்தான் கண் வழி சென்றான்

மறைந்த இசையமைப்பாளர் திரு T K அவர்களின் நினைவாக அவர் தனித்து இசையமைத்த மூன்றெழுத்து திரைப் படத்திலிருந்து ஒரு அருமையானப் பாடல்.
S V பொன்னுசாமியின் ஹம்மிங் குரலோடு ஈடுஇணையில்லாத P சுசீலா அம்மாவின் தேன் மதுரக் குரலில், இசையமைப்பாளர் என்றும் நம் நெஞ்சில் நிற்கிறார்.

திரைப்படம்:   மூன்றெழுத்து  (1967)
பாடகர்கள்:    P சுசீலா, S V பொன்னுசாமி
இசை:     T K ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர்:     தெரியவில்லை
நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா
இயக்கம்: T R ராமண்ணா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDg3MTY1N19WdTBGZF8zZDg2/kadalan%20vanthan.mp3

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்கிளியே பைங்கிளியே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

வெளியில் விடாமல் சிறையினில் வைத்து
ரகசியம் பேசு பைங்கிளியே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்க்கிளியே பைங்கிளியே

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே

குளித்த பின்னாலே
இதழோரம் நடக்கட்டுமே
கொஞ்சம் கொடுக்கட்டுமே

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்கிளியே பைங்கிளியே

தூங்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு
மெல்ல தாலாட்டு

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

தூங்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு
மெல்ல தாலாட்டு

ஏங்குகின்றானா கேட்டு விடு
நீ தேனூட்டு
இன்ப தேனூட்டு

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்கிளியே
பைங்கிளியே

ம் ஹும் ம்  ஹும் ம் ஹும் ம் ஹும்
ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இந்தப் பாட்டின் ஒவ்வொரு வரியும் கவிதைதான். அதற்கு இசையும் குரலும் அற்புதம்.

இசை மேதை மறைந்த திரு.P B ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு சமர்ப்பணம்
சிறந்த அவரது பல பாடல்களில் இதுவும் ஒன்று

திரைப் படம்: வாழ்க்கை படகு (1965)
நடிப்பு: முத்து ராமன், ஜெமினி, தேவிகா
இயக்கம்/தயாரிப்பு:  S S வாசன்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDc2NzY0NV9aRG44cF9hMTQw/netru%20varai%20nee.mp3

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன

பூமுகம் சிவந்தா போகும்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

பாவை உன் முகத்தை கண்டேன்

தாமரை மலரை கண்டேன்

பாவை உன் முகத்தை கண்டேன்

தாமரை மலரை கண்டேன்

கோவை போல் இதழை கண்டேன்

குங்குமச் சிமிழை கண்டேன்

கோவை போல் இதழை கண்டேன்

குங்குமச் சிமிழை கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கண்ணே கமலப் பூ காதிரெண்டும் வெள்ளரிப் பூ

வருடத்தின் முதல் பாடலை அன்னையின் தாலாட்டாக ஆரம்பிப்போம்.

இது அந்தக் காலத்து தாலாட்டு பாடல்.
அன்னையின் குரலாக  லீலா அவர்களின் அருமையான இனியக் குரலில்.

இதே பின்னணி இசையை கொஞ்சமாக மண்ணுக்கு மரம் பாரமா என்னும் பாடலிலும் மகாதேவன் அவர்கள் எடுத்து கையாண்டிருக்கிறார்.

ஆமாம், முகப்பெல்லாம் புத்திரமாம் என்பதற்கு பொருள் என்ன?
நானும் உத்திரமாம் என்றிருக்கும் என் நினைத்தேன். ஆனால் அது புத்திரமாம்தான்.

1958 ஆம் ஆண்டு பாடல் என்றாலும் மிகத் தெளிவாகத்தான்  இருக்கிறது.

ஆணோ பெண்ணோ உட்கார்ந்தவாக்கில் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடை குழந்தையை வைத்துக் கொண்டு இடுப்பினால் முன்னும் பின்னும் ஆடியவாறு இந்தப் பாடலை பாடினால் குழந்தை தூங்குவது நிச்சயம்.

எல்லாம் பழைய நினைவுகள்.

திரைப் படம்: பெரிய கோயில் (1958)
குரல்: P லீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: தெரியவில்லை.
நடிப்பு: ப்ரேம் நஸிர், M N ராஜம், கண்ணாம்பாள்
இயக்கம்: A K வேலன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDcxNDQ4MV9YOENYMl9jNzJj/KanneKamalapoo.mp3

கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ
கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ

முல்லை பூ கட்டிடமாம்
முகப்பெல்லாம் புத்திரமாம்
முகப்பை திறந்து விட்டால்
முல்லை பூவின் வாசனையாம்
முல்லை பூ கட்டிடமாம்
முகப்பெல்லாம் புத்திரமாம்
முகப்பை திறந்து விட்டால்
முல்லை பூவின் வாசனையாம்
சின்ன வாய் மணக்குதடா
சிங்கார கண்ணு
சித்திரமே பொற்க்கொடியே
சீக்கிரம் உண்ணு
கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ

மார் நிறைய சந்தனமாம்
 மடி நிறைய வெற்றிலையாம்
தேன் நிறைந்த களி பாக்காம்
சீர் கொடுப்பார் உன் மாமன்
மார் நிறைய சந்தனமாம்
மடி நிறைய வெற்றிலையாம்
தேன் நிறைந்த களி பாக்காம்
சீர் கொடுப்பார் உன் மாமன்
மண்ணிலே தவழாதே
சிங்கார கண்ணு
என் மடி மேலே நீ இருந்து
சீக்கிரம் உண்ணு
கண்ணே கமலப் பூ
காதிரெண்டும் வெள்ளரிப் பூ
மின்னிடும் உன் பொன் மேனி
செண்பகப் பூ செண்பகப் பூ

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இளம் தென்றலோ கொடி முல்லையோ

அதிகம் அறிமுகம் இல்லாத படம். பாடல் இனிமை. (எங்கே  காப்பியடிச்சாரோ?) ஆர்ப்பாட்டம் இல்லாத இசையில் இரு குரல்களும் தேவ கானம் பொழிந்துள்ளன.

திரைப் படம்: வசந்த மலர்கள் (1992)
இசை: தேவா
குரல்கள்: S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
பாடல்: வாலி
இயக்கம்: A R ரமேஷ்
நடிப்பு: ஹரிராஜ் (யார்?), ரேகா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDY5NTc4MF9WZU1EeV83ZGZk/IlamThendralo%20Kodi.mp3இளம் தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்
மெல்ல தீண்டினால் என்ன ஆகும்
முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

இளம் தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பனி வாடை கதவிடிக்க வாழை மடல் திறக்க
காதல் புரியும் இயற்கை

இந்த வேளை மனதிலொரு மோகம் பிறந்து வர
தோளைத் தழுவும் வளை கை

இதில் நாணம் கூடாது பொதுவா

இந்த வேகம் ஆகாது தலைவா

வரவும் செலவும் இனிமேல் நித்தம் நித்தம்

இளம் தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ

மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்

மெல்ல தீண்டினால் என்ன ஆகும்

முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

இளம் தென்றலோ கொடி மின்னலோ

இவள் மங்கையோ இன்ப கங்கையோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பசும் பாலும் பழ ரசமும் பாவை உதடுகளில்
நாளும் சுரக்கும் அல்லவோ

அதில் மீதம் எதுவும் இன்றி போதும் வரையில் இன்று
நானும் எடுத்துக் கொள்ளவோ

இதழ் காயம் ஆகாதோ அரும்பு

அது காதல் போராட்ட  தழும்பு

பனிவாய் மலர் நான் தொடு நீ மெல்ல மெல்ல

இளம் தென்றலோ கொடி மின்னலோ

இவள் மங்கையோ இன்ப கங்கையோ

மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்

மெல்ல தீண்டினால் என்ன ஆகும்

முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

இளம் தென்றலோ கொடி மின்னலோ

ஆ  ஆ ஆ ஆ ஆ

இவள் மங்கையோ இன்ப கங்கையோ
 
புதன், 10 ஏப்ரல், 2013

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

திருமதி சுசீலா அவர்கள் மிகச் சில பாடல்களில் மட்டுமே ஹஸ்கி வாய்ஸ் எனப்படும் ஒரு மாதிரியான வசீகரிக்கும் குரலில் பாடியுள்ளார்.
நல்ல அழகான பாடல் இங்கே.

திரைப்படம்:தெய்வ பிறவி (1985)
பாடகர்கள்:P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம்
இசை:ஷங்கர் கணேஷ்
நடிப்பு: மோஹன், ராதிகா  
பாடல் ஆசிரியர்:வாலி 
இயக்கம்: தெரியவில்லை 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDIwMDY4MF9Id1o0V185NDg4/Poovai%20Oru%20Poo%20endru-DeivaPiravi.mp3

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை

உதடும் உதடும்தான் உரச உரசதான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ

என்னை அன்றி யாரும் இல்லை

கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மோத
ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ

சின்னஞ்சிறு  மாது
கன்னிதன்மை மீது
காதல் என்னும் வண்ணம் நீ பூட்ட 

வஞ்சி பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு  குற்றம் என்ன சொல்ல

ஹா 
துடித்தேன் துவண்டேன் 
மயக்கமும் ஏனோ ஓ ஓ 

பூவை ஒரு பூ என்று யார்
கிள்ளினாரோ
உனை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான்   ஆ ஆ  
உரச உரசதான் ஏ  ஏ 

உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ  ஓ ஓ ஓ  

பூவை ஒரு பூ என்று யார்
கிள்ளினாரோ

என்னை அன்றி யாரும் இல்லை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

சேலை கொண்ட அன்னம்
செவ்வாய் கொண்ட வண்ணம்
போனதென்ன மாயம் அரியேனே
முத்தமிட்ட வேளை
மன்னன் செய்த வேலை 
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே

கட்டி தங்கம் என்று தோகை
கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து நீயும் முத்தம் இட்டதென்ன

தரலாம் பெறலாம் 
தடுப்பவர் யாரோ    ஓ ஓ ஓ 

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி யாரும் இல்லை
உதடும் உதடும்தான் ஸ் ஆ 
உரச உரசதான் ஸ் ஆ 
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ ஓ ஒ ஓ 
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னை அன்றி