பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இந்தப் பாட்டின் ஒவ்வொரு வரியும் கவிதைதான். அதற்கு இசையும் குரலும் அற்புதம்.

இசை மேதை மறைந்த திரு.P B ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு சமர்ப்பணம்
சிறந்த அவரது பல பாடல்களில் இதுவும் ஒன்று

திரைப் படம்: வாழ்க்கை படகு (1965)
நடிப்பு: முத்து ராமன், ஜெமினி, தேவிகா
இயக்கம்/தயாரிப்பு:  S S வாசன்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDc2NzY0NV9aRG44cF9hMTQw/netru%20varai%20nee.mp3

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன

பூமுகம் சிவந்தா போகும்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

பாவை உன் முகத்தை கண்டேன்

தாமரை மலரை கண்டேன்

பாவை உன் முகத்தை கண்டேன்

தாமரை மலரை கண்டேன்

கோவை போல் இதழை கண்டேன்

குங்குமச் சிமிழை கண்டேன்

கோவை போல் இதழை கண்டேன்

குங்குமச் சிமிழை கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவர் மறைந்தாலும் அவரது குரல் என்று பலரின் மனதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது...

இனிமையான பாடலுக்கு நன்றி சார்...

Raashid Ahamed சொன்னது…

P.B.ஸ்ரீநிவாஸ் பாடல்களில் தலைசிறந்த பாடல்களாக தொடர்ந்து வெளியிடுங்கள். அதென்னவோ தெரியவில்லை அவர் மறைவுக்கு பின் அவர் பாடல்களை அதிகம் கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது. தமிழை இவர் உச்சரிக்கும் விதம் சிறப்பானது.

myspb சொன்னது…

நல்ல மென்மையான குரல் பெற்ற பாடகர் அவரின் ஆன்மா சாந்தியடைய என் ப்ரார்த்தனைகள்.

NAGARAJAN சொன்னது…

music is by MSV and TKR

T G Ramamurthy சொன்னது…

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும்போது

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன?

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன?

பூமுகம் சிவந்தா போகும்
திருக்குறள் வரிகள்தான்

கருத்துரையிடுக